Samantha Ruth Prabhu's Birthday: நடிகை சமந்தா சிக்கென்று ஃபிட்டாக, க்யூட்டாக இருப்பதன் ரகசியம்.. இதாங்க..

Samantha Ruth Prabhu's Birthday: தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் நடிகை சமந்தா எனும் சமந்தா ரூத் பிரபு. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா ஒரு உடற்பயிற்சி ஆர்வலர். இதை இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்தாலே தெரியும். ஏனெனில் அந்த அளவில் இவர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யும் பல ஃபோட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.

எப்போதும் சிக்கென்ற உடலமைப்புடன் இருக்கும் நடிகை சமந்தா இன்று தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பல திறமைகளை தன்னுள் கொண்ட நடிகை சமந்தா, தனது சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஆனால் இவர் சில ஆண்டுகளுக்கு முன், தான் தன்னுடல் தாக்க நோயான மயோசிடிஸ் என்னும் தசை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து போராடி வருவதாக கூறினார்.

Samantha Ruth Prabhu Birthday Know Samantha s Fitness And Diet For A Toned Body

மயோசிடிஸை குணப்படுத்துவது சாத்தியமில்லை. ஆனால் சிகிச்சையானது அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவும். இப்படியொரு நோயால் பாதிக்கப்பட்டு, சற்றும் மனம் தளராமல், தன்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளும், யோகாக்களும், உணவுத் திட்ட மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கிறது. இப்போது இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை சமந்தா ஃபிட்டாக இருக்க தினமும் எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் என்பதைக் காண்போம்.

ஏரியல் யோகா

நடிகை சமந்தாவின் தினசரி உடற்பயிற்சியில் ஏரியல் யோகாவும் அடங்கும். இது வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் மன உறுதியை ஒருங்கிணைக்கும் பயிற்சியாகும். இந்த வகை யோகா கோர் வலிமை, சமநிலை மற்றும் மன தெளிவை வளர்க்க உதவுகிறது.

ஜிம் பயிற்சிகள்

நடிகை சமந்தா ஃபிட்டான உடலை வைத்துக் கொள்ள ஒழுக்கமான ஜிம் வழக்கத்தைக் கொண்டுள்ளார். இதுவே அவரது ஃபிட்னஸின் முக்கியமான மற்றும் முதன்மையான ரகசியம் என்றே கூறலாம். அதுவும் இவர் ஜிம்மில் கார்டியோ, பளு தூக்குதல் மற்றும் பைலேட்டுகள் ஆகியவற்றை கலந்து செய்வார். இவை வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையை இலக்காகக் கொண்டுள்ளது. இவர் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது மட்டுமின்றி, ஒரு இலக்குடனும் ஈடுபட்டு வருகிறார். இந்த ஈடுபாடு தான் இவரது முதல் நற்குணம்.

நீரேற்றம் முக்கியம்

நடிகை சமந்தா, ஒருவர் ஃபிட்டாக இருக்க நீரேற்றம் மிகவும் முக்கியமானது என்பதை நன்கு அறிந்தவர். எனவே தான் இவர் நாள் முழுவதும் போதுமான அளவு நீரை தவறாமல் அருந்துகிறார். இப்படி நீரை அதிகம் அருந்துவதால் தான், இவர் ஆற்றலுடன் இருப்பதோடு, பொலிவான சருமத்தையும் கொண்டுள்ளார். இந்த ஒரு சிறிய மற்றும் முக்கியமான பழக்கம், அவரது கடுமையான உடற்பயிற்சி வழக்கத்தையும் சீரான உணவையும் பூர்த்தி செய்கிறது.

காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு

நடிகை சமந்தாவின் டயட் என்று பார்த்தால், காலை வேளையில் ஒரு பௌல் நற்பதமான பழங்கள் மற்றும் நட்ஸ் கொண்ட ஓட்ஸை உட்கொள்கிறார். மதிய வேளையில் வீட்டில் சமைத்த கைக்குத்தல் அரிசி சாதம் மற்றும் வெஜிடேபிள் கறியை விரும்பி உட்கொள்வாராம். அதோடு ஸ்நாக்ஸ் நேரத்தில் க்ரீன் டீ அல்லது ஸ்மூத்தியை உட்கொள்வாராம். மேலும் இரவு நேரத்தில் சிம்பிளாக வேக வைத்த காய்கறிகள், மீன் மற்றும் க்ரில்டு சிக்கனை உட்கொள்வாராம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion