Latest Updates
-
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
ரமலான் நோன்பு இருக்கீங்களா? அதிக தாகம் எடுக்காமல் இருக்க சுகூர் காலத்தில் இத சாப்பிடுங்க..
Ramadan 2023: இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது வழக்கம். இந்த நோன்பு மிகவும் கடுமையானது. சூரிய உதிக்கும் போது நோன்பை திறந்து, சூரிய மறையும் போது நோன்பை முடிப்பார்கள். இந்த இடைப்பட்ட நோன்பு காலத்தில் சிறிதும் எச்சிலை விழுங்காமல், நீர் அருந்தாமல் கடுமையாக நோன்பு இருப்பார்கள். இந்த நோன்பு அவர்களது 5 கடமைகளில் மிகவும் முக்கியமான ஒன்று.
வெயில் கொளுத்தும் கோடைக்காலத்தில் இந்த நோன்பை மேற்கொள்வதால், அதிகப்படியான வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளது. அதுவும் இந்த நோன்பை மேற்கொண்டு, வேலைக்கு செல்பவர்கள் நோன்பு திறக்கும் முன் சாப்பிடும் சுகூர் உணவின் போது ஒருசில உணவுகளை உண்பதன் மூலம், நோன்பு காலத்தில் அதிக தாகம் எடுப்பதைத் தவிர்க்கலாம். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

ஓட்ஸ்
ஓட்ஸை பால் அல்லது நீர் சேர்த்து சாப்பிடும் போது, அது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு, அதிக தாகம் எடுப்பதைத் தடுக்கும். அதோடு, ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் தடுக்கும்.
லெட்யூஸ்
லெட்யூஸ் தற்போது சூப்பர் மார்கெட்டுகளில் விற்கப்படுகிறது. இந்த லெட்யூஸில் 95% நீர்ச்சத்து உள்ளது. எனவே இதை உண்ணும் போது உடல் போதுமான நீரேற்றத்துடன் இருக்கும். அதற்கு அந்த லெட்யூஸை பொரியலாக செய்து சாப்பிடலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது மற்றும் இது தாகத்தைக் குறைக்க உதவுகிறது. இருப்பினும் நன்கு கனியாத வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை எதிர்விளைவையே ஏற்படுத்தும். அதாவது உடல் வறட்சியை இன்னும் அதிகரிக்கும். எனவே நன்கு கனிந்த வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.
தயிர்
ஒரு பௌல் தயிரில் 85% நீர்ச்சத்து உள்ளது. அத்துடன் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கால்சியம் போன்றவையும் உள்ளன. எனவே சுகூர் காலத்தில் தயிரை உட்கொள்ளும் போது, அது உடலில் போதுமான நீர்ச்சத்தைப் பராமரிக்க உதவுவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
அவகேடோ
அவகேடோ பழம் குளிர்ச்சியானது மட்டுன்றி, ஆரோக்கியமான கொழுப்புக்கள், கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றை அதிகளவு கொண்ட பழமும் கூட. முக்கியமாக இந்த பழத்தில் 60-70 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. எனவே நோன்பு தொடங்கும் முன் அவகேடோ மில்க் ஷேக்கை குடியுங்கள்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து உள்ளது மற்றும் இது ஒருவரத தாகத்தைக் கட்டுப்படுத்தும். எனவே நோன்பு இருப்பவர்கள், சுகூர் உணவின் போது வெள்ளரிக்காயை நறுக்கி, தயிருடன் சேர்த்து சாப்பிட, தாகம் எடுப்பது தடுக்கப்படும்.
தர்பூசணி
தர்பூசணியில் 92% நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால், நோன்பு இருப்பவர்கள் சுகூர் காலத்தில் தர்பூசணியை உட்கொள்வது நல்லது. இது சுவையானது மட்டுமின்றி, உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு, புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.
தக்காளி ஜூஸ்
தக்காளி ஜூஸில் சோடியம் மற்றும் நீர்ச்சத்து சரியான அளவில் இருப்பதால், இதை சுகூர் காலத்தில் உட்கொள்ளும் போது, நாள் முழுவதும் நீரேற்றத்துடன் வைத்திருக்கும். முக்கியமாக தக்காளியில் லைகோபைன் உள்ளது. இது ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிக்கு நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


