Latest Updates
-
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா?
வெண்டைக்காய் ஊற வைத்த நீரை தினமும் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Lady Finger Water Benefits In Tamil: காய்கறிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையைக் கொண்டிருப்பதோடு, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களையும் கொண்டிருக்கும். அந்த வகையில் வழுவழுப்பான தன்மையைக் கொண்ட ஒரு காய்கறி தான் வெண்டைக்காய்.
இந்த வெண்டைக்காய் வழுவழுப்பாக இருப்பதால் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் இந்தியாவில் சமையலில் அதிகம் சேர்க்கப்படும் காய்கறிகளுள் ஒன்று தான் வெண்டைக்காய். அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய வெண்டைக்காயை வைத்து பல சுவையான ரெசிபிக்களை சமைக்கலாம்.

வெண்டைக்காய் தனித்துவமான சுவையைக் கொண்டிருந்தாலும், மிகவும் ஆரோக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் வெண்டைக்காயில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற சிறந்த வழி, அவற்றை நீரில் ஊற வைத்து அந்நீரைக் குடிப்பது தான் என்று நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர். தற்போது மக்களிடையே ஆரோக்கியத்தின் மீதான அக்கறை அதிகரித்துள்ளதால், நிறைய பேர் இந்த வெண்டைக்காய் நீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள்.
சரி, வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் அப்படி என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்பதை இப்போது காண்போம். அதோடு யாரெல்லாம் இந்த வெண்டைக்காய் நீரைக் குடிக்கக்கூடாது என்பதையும், வெண்டைக்காய் நீரை எப்படி தயாரிப்பது என்பதையும் விரிவாக காண்போம்.
எடை இழப்புக்கு உதவும்
வெண்டைக்காயில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை அனைத்தும் ஒருவரது பசியைக் கட்டுப்படுத்த உதவி புரிந்து, உடல் எடையைக் குறைக்க வழிவகை செய்யும். இது தவிர, இந்த வெண்டைக்காய் நீர் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவும், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
சர்க்கரை நோய்க்கு நல்லது
சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காய் நீரைக் குடிப்பது நல்லது என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஏனெனில் வெண்டைக்காயில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை இரத்த சக்கரையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றன. முக்கியமாக இந்த நீரைக் குடித்து வந்தால், உணவுகளில் இருந்து கார்போஹைட்ரேட்டை மெதுவாக உறிஞ்ச உதவி புரிந்து, செரிமானத்தை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை சட்டென்று அதிகரிப்பதைத் தடுக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வெண்டைக்காயில் ப்ளேவோனாய்டுகள் அல்லது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இந்த கலவைகள் உடலில் சேதத்தை ஏற்படுத்தும் ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. எனவே பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் இந்த நீரைக் குடிப்பது நல்லது.
இதய ஆரோக்கியம் மேம்படும்
பல்வேறு ஆய்வுகளின் படி, வெண்டைக்காயில் உள்ள கலவைகள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன. அதுவும் வெண்டைக்காய் ஊற வைத்த நீரைக் குடித்தால், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடுக்கப்படும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்தால், பல நோய்களின் அபாயம் குறையும். முக்கியமாக இதய நோய்களின் அபாயம் குறைவதோடு, இதயத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்.
உடல் சுத்தமாகும்
வெண்டைக்காய் ஊற வைத்த நீரில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளன. இந்த நீரைக் குடிக்கும் போது, அதில் உள்ள சத்துக்கள் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுவதோடு, உடலில் இருந்து நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகின்றன. இவ்விரு செயல்பாடுகளும் சிறப்பாக உடலில் நடைபெற்றால், சருமம் விரைவில் முதுமை அடைவது தடுக்கப்படுவதோடு, சருமம் தொடர்பான பிரச்சனைகளும் குறையும். எனவே அழகாகவும், உடல் சுத்தமாகவும் இருக்க விரும்பினால், வெண்டைக்காய் நீரைக் குடித்து வாருங்கள்.
வெண்டைக்காய் நீரை குடிக்க சிறந்த நேரம் எது?
வெண்டைக்காய் நீரை தினமும் குடிப்பது நல்லது. அதுவும் இந்த வெண்டைக்காய் நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது இன்னும் நல்லது. இப்படி வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம், அதில் உள்ள சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்பட்டு, முழு பலனைப் பெறலாம்.
வெண்டைக்காய் நீரை தயாரிப்பது எப்படி?
* முதலில் 5 வெண்டைக்காயை எடுத்து, அதன் முனைப் பகுதியை நீக்கிவிட்டு, அதைக் கீறி விட வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீரை ஊற்றி, அதில் இந்த கீறி விட்ட வெண்டைக்காயைப் போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் வெண்டைக்காயை நீக்கிவிட்டு, அந்நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
யாரெல்லாம் வெண்டைக்காய் நீரைக் குடிக்கக்கூடாது?
வெண்டைக்காய்க்கு அழற்சி உள்ளவர்கள் வெண்டைக்காய் நீரைக் குடிக்கக்கூடாது. இது தவிர, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) கொண்டவர்கள் வெண்டைக்காய் நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் ஃப்ரக்டான் அதிகமாக உள்ளன. இவை எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியின் அறிகுறிகளை தீவிரமாக்கிவிடும்.
இதுவரை நாம் வெண்டைக்காய் நீரின் நன்மைகள், யாரெல்லாம் குடிக்கக்கூடாது, அதை எப்படி தயாரிப்பது என்பதைக் குறித்து கண்டோம். இருப்பினும் ஒருவர் தங்களின் தினசரி உணவு பழக்கத்தில் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வருவதாக இருந்தால், அந்த மாற்றத்தை செய்யும் முன் ஒரு நிபுணரை அணுகி அவரிடம் இதுக்குறித்து தெரிவித்து அவரது அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
