Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
RCB அணியின் கேப்டன் விராட் கோலி எல்லா போட்டிகளிலும் சதம் அடிக்கிறதுக்கு பின்னாடி இருக்கும் ரகசியம் இதுதானாம்!
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், கேப்டனாகவும் இருப்பதற்கு, சில தகுதிகள் வேண்டும். அந்த தகுதிகள் நிறைந்த ஓர் சிறந்த ஆட்ட நாயகனாக விராட் கோலி இருக்கிறார். திறமையான கிரிக்கெட் வீரராகக் கருதப்படும் விராட் கோலி, தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக ஆட்ட களத்தில் சீறிக்கொண்டிருக்கிறார்.
ஐபிஎல் டீ20 உலக கோப்பை போட்டி தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலியின், உடற்தகுதி குறித்துதான் நாம் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம். மிகவும் துடிப்பான இளைஞரான கோலி, களத்தில் எப்போதும் சுறுசுறுப்பாகவும் நிதனமாகவும் இருப்பார்.

விராட் கோலி, அவரது முதல் உலகக் கோப்பைக்குப் பிறகுதான் உடற்தகுதியை தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தொடங்கினார். தனது திறமையாலும் பொருத்தமான ஆளுமையாலும் அனைவரையும் ஊக்குவிக்கும் இடத்திற்குச் செல்வதற்கு மிகவும் கடினமாக உழைத்தார். இன்று இந்தியா முழுவதும் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.
சிறந்த கிரிட்கெட் வீரராகவும், உடல் வலிமை கொண்ட நபராகவும் இளைஞர்களுக்கு ரோல் மாடலாகவும் இருக்கும் விராட் கோலியின் வெற்றி பயணத்திற்கு அவரின் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடையை நிர்வகிப்பதிலும், வலுவான உடலமைப்பு மற்றும் தசை வலிமையை கொண்டிருப்பதிலும் விராட் கோலி சிறந்து விளங்குகிறார்.
விராட் கோலி ஒரு காலத்தில் பட்டர் சிக்கன் மற்றும் இனிப்புகள் இல்லாமல் வாழ முடியாத குண்டான பையனாக இருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது, அனைவரும் ஆச்சரியப்படும் உடலமைப்பு கொண்டு, இவ்வளவு ஃபிட்னா நபராக இருக்கிறார். இதற்கு எல்லாம் அவருடைய ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்கள்தான் காரணம்.
விராட் கோலி தினமும் என்ன சாப்பிடுவார்?
அன்றாட உணவில் இலை காய்கறிகள், கீரைகள், பழங்கள், புரதம், ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த பானங்கள் மற்றும் காபி போன்றவற்றை தினமும் கோலி எடுத்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது. காலை உணவாக, முட்டை, கருப்பு மிளகு மற்றும் காய்கறிகளை சாப்பிடுகிறார். கோலி, சைவ உணவு உண்பவராக மாறுவதற்கு முன்பு, அவர் தனது அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்களை சேர்க்க இறைச்சி மற்றும் சால்மனை சேர்த்திருந்தார்.
நாள் முழுவதும் ஆற்றலைச் சேர்க்க, நட்ஸ்கள் மற்றும் விதைகளை எப்போதும் சாப்பிடும் கோலி, பசையம் இல்லாத ரொட்டிகள் மற்றும் இனிப்புகளை சாப்பிட விரும்புகிறார். தசைகளை வலிமையாக்கவும், கட்டமைக்கவும், இரவு உணவிற்கு சில வகையான புரத உணவுகளையும் சேர்க்கிறார். குயினோவா, தோசை, பருப்பு, கீரை போன்றவற்றை கோலி மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகள். நட்ஸ் வெண்ணெய், காய்கறி சாலட், ஸ்மூத்திஸ், சோயா மற்றும் புரோட்டீன் ஷேக்குகளையும் எடுத்துக்கொள்வார்.
உணவு முறை
உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் உணவில் விலங்குகளின் கொழுப்புகள் மற்றும் புரதங்களை அதிகமாக சேர்த்துக்கொள்கிறார்கள். இது ஒரு பொதுவான கருத்து என்றாலும், விராட் கோலியின் வாழ்க்கை முறை முற்றிலும் சைவ உணவுமுறையாகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி முழு சைவ உணவு உண்பவராக மாறியது சமீபத்தில் தான் என்றாலும், அவர் முன்பு 90% விலங்கு-இறைச்சி இல்லாத மற்றும் பால் இல்லாத உணவைப் பின்பற்றினார். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சத்தான உணவு பொருட்களை உண்ணும் வரை, எந்த உணவுமுறையும் உங்கள் இலக்குகளை அடைய உதவும்.
டயட் ரகசியங்கள்
பிறந்தது முதல் யாரும் டயட்டை ஃபாலோ செய்திருக்க மாட்டார்கள். ஒரு வேலையில் அல்லது விளையாட்டில் சேர்ந்த பின்புதான், உடல் வலிமையை கருத்தில் கொண்டு டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்கிறார்கள். ஆரம்ப நாட்களில் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றுவது மிகவும் கடினமாக இருக்கும். தனது ஆரம்ப நாட்களில் விராட் கோலியும் இதையேதான் கூறியிருந்தார்.
உணவு ரகசியங்களைப் பொறுத்தவரை, தனது உணவில் இருந்து சர்க்கரையை முற்றிலும் தவிர்த்துள்ளார் கோலி. ஆரோக்கியமான சமச்சீரான வீட்டு உணவை சாப்பிடவே இவர் விரும்புகிறார். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3-4 கப் கிரீன் டீயை அருந்தும் கோலி, ஒரு துளி எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடுவது அவரது ஆரோக்கியத்தின் தனிப்பட்ட ரகசியம். இது உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றி, அவரது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
உடற்பயிற்சியின் விவரங்கள்
விராட் கோலி திறமையான ஆட்ட நாயாகனாக இருப்பதற்கு, அவரின் வலிமையான உடல் அமைப்பும் உடற்பயிற்சியும் உதவுகிறது. 34 வயதான கோலி, டெட்லிஃப்ட் முதல் ஹெவி-டோஸ் கார்டியோ வரை அனைத்து உடற்பயிற்சிகளையும் செய்கிறார்.
ஜிம்களில் கடுமையான உடற்பயிற்சி செய்யும் கோலி, 5-6 நாள் ஒர்க்அவுட்டிற்கு பிறகு ஒருநாள் உடலுக்கு ஓய்வு கொடுக்கிறார். இது அவருக்கு மெலிந்த மற்றும் வலுவான தசைகள், நல்ல உடல் வலிமை மற்றும் சகிப்புத்தன்மை மற்றும் கீழ் உடல் தசைகளை மேம்படுத்த உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


