Latest Updates
-
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க..
ஆண்களே! 30 வயசு ஆகிடுச்சா? அப்ப எந்த நோயும் வராம இருக்க தினமும் இந்த யோகாசனங்களை செய்யுங்க..
International Men's Health Week 2025: ஒவ்வொரு ஆண்டும் தந்தையர் தினத்திற்கு முந்தைய வாரம் சர்வதேச ஆண்கள் சுகாதார வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் ஆண்களின் ஆரோக்கிய பிரச்சனைகள் குறித்தும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் சர்வதேச ஆண்கள் சுகாதார வாரம் ஜூன் 09 முதல் ஜூன் 15 வரை ஆகும்.
தற்போது ஆண்கள் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். முக்கியமாக அதிக வேலைப்பளு, குடும்ப பொறுப்புக்கள் காரணமாக ஆண்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி, அதன் விளைவாக பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதுவும் ஆண்கள் 30 வயதை எட்டினால் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். அதுவும் உணவில் கட்டுப்பாட்டுடன், தினசரி உடற்பயிற்சியிலும் ஈடுபட வேண்டும்.

ஜிம் சென்று உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், வீட்டிலேயே ஒருசில யோகாசனங்களை செய்து வந்தாலே போதுமானது. இப்படி யோகாசனங்களை செய்வதன் மூலம் தலைமுடி பிரச்சனைகள், சரும பிரச்சனைகள், பார்வை பிரச்சனைகள் போன்றவை சரியாவதோடு, அறிவாற்றல், தசை மற்றும் எலும்பு போன்றவை வலுவடைந்து, உடலில் இரத்த ஓட்டம் மேம்பட்டு, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இப்போது சர்வதேச ஆண்கள் சுகாதார வாரத்தை முன்னிட்டு, 30 வயது ஆண்கள் தங்களின் வாழ்நாளை நீட்டிக்கவும், உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கவும் தினமும் செய்ய வேண்டிய மிகச்சிறந்த சில யோகாசனங்கள் என்னவென்பதைக் காண்போம்.
1. புஜங்காசனம்
யோகாசனங்களில் மிகவும் எளிமையான, அதே சமயம் சக்தி வாய்ந்த ஒரு ஆசனம் தான் புஜங்காசனம். பொதுவாக ஆண்களுள் பலர் நெகிழ்வானவர்கள் அல்ல. அப்படி உடலை வளைக்காமல் இருக்கும் ஆண்களுக்கு இந்த ஆசனம் சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் இந்த ஆசனத்தை செய்தால் முதுகு தசைகள் வலுபெறும், உடல் தோரணை மேம்படும் மற்றும் மன அழுத்த அளவு குறையும். இந்த ஆசனம் செய்வதற்கு,
* முதலில் குப்புற படுத்து, இரண்டு கால்களை ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் இரண்டு கைகளையும் மார்பு பகுதிக்கு அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே தலை, மார்பு மற்றும் தொப்புள் பகுதி வரை மேலே தூக்க வேண்டும். அப்போது அடிவயிற்றுப் பகுதியை தரையில் இருக்க வேண்டும்.
* பின்பு மூச்சை வெளியே விட்டு 5 முறை இயல்பாக சுவாசித்து, பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
* இந்த புஜங்காசனத்தை தினமும் ஆண்கள் 3-5 முறை செய்ய வேண்டும்.
2. பச்சிமோத்தாசனம்
இந்த ஆசனம் இடுப்பு மற்றும் கால்கள் உட்பட முழு முகுகையும் ஸ்ட்ரெட்ச் செய்யும். இதனால் இந்த ஆசனத்தை செய்தால் முதுகு வலி, இடுப்பு வலி போன்றவை சரியாகும். மேலும் சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சனைகளையும் தடுக்க உதவும். இந்த ஆசனம் செய்வதற்கு,
* முதலில் இரண்டு கால்களையும் நீட்டி உட்கார வேண்டும். கைகள் இரண்டையும் பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மூச்சை உள்ளிழுத்த படி இரண்டு கைகளையும், பின்பக்கமாக கொண்டு வந்து நேராக தலைக்கு மேலே உயர்த்த வேண்டும்.
* பின்பு மூச்சை வெளிவிட்டவாறு மெதுவாக முன்னால் குனிந்து கால் முட்டிகளை மடக்காமல் கால் பெருவிரலை பிடிக்க வேண்டும். பின் நெற்றிப் பகுதி முழங்கால்களை தொட முயற்சிக்க வேண்டும்.
* இந்த நிலையில் 5 முறை மூச்சு விட்ட பின் பழைய நிலைக்கு வர வேண்டும்.
3. ஏகபாத ஆசனம்
இந்த ஆசனம் சமநிலைப்படுத்தும் யோகாசனமாகும். இது உடலுக்கும், மனதுக்கும் நன்மை பயக்கும். இந்த ஆசனம் உடலின் உள்ளுறுப்புக்களின் செயல்பாட்டை மேம்படுத்தும். கவனம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும். முக்கியமாக மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கும். இந்த ஆசனம் செய்வதற்கு,
* முதலில் நேராக நிற்க வேண்டும்.
* பின் இடது காலை மடக்கு வலது தொடையின் உள்புறத்தில் வைக்க வேண்டும். அப்போது கால் விரல்கள் கீழ் நோக்கி இருக்க வேண்டும்.
* அப்போது மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பிய நிலையில் வைக்க வேண்டும். பின் மூச்சை வெளிவிடவும்.
* இப்படி 5 இயல்பான மூச்சு விடும்வரை நிற்க வேண்டும்.
* பின் பழைய நிலைக்கு வந்து, அடுத்த காலில் இதே போன்று செய்ய வேண்டும்.
4. வக்ராசனம்
இந்த ஆசனம் ஆண்களுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கும் மிகச்சிறந்த ஆசனமாகும். இந்த ஆசனமானது முதுகு வலி, இடுப்பு வலி போன்றவற்றை நீக்கும். மலச்சிக்கல், அஜீரண பிரச்சனைகளைத் தடுக்கும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இந்த ஆசனம் செய்வதற்கு,
* முதலில் கால்களை நீட்டி நேராக உட்கார வேண்டும்.
* பின் இடது காலை மடித்து, பாதம் வலது முழங்காலைத் தொடும்படி வைக்க வேண்டும்.
* பின்பு மூச்சை உள்ளிழுத்தப்படி வலது கையை இடது முழங்காலுக்கு மேலே கொண்டு வந்து, இடது கணுக்காலை பிடிக்க வேண்டும்.
* இடது கை முதுகின் பின்புற தரையில் இருக்க வேண்டும்.
* அதன் பின் மூச்சை வெளிவிட்டபடி உடலை இடப்புறம் திரும்பி பின்னோக்கி பார்க்க வேண்டும்.
* இந்நிலையில் 5 இயல்பான மூச்சுவிடும் வரை இருந்து, பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
* இதேப் போன்று வலது பக்கம் செய்ய வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள யோகாசனங்களை 30 வயதை எட்டிய ஆண்கள் தினமும் செய்து வந்தால், உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பேணிப் பாதுகாக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications