பெண்களே! உங்க உள்ளாடைகளில் இந்த விஷயங்கள் இருந்தா நீங்க உஷாரா இருக்கணுமாம்... ஏன் தெரியுமா?

பெண்களே! உங்கள் பாலியல் ஆரோக்கியத்திற்கு என்ன செய்கிறீர்கள் என்பதைத் தாண்டி, உங்கள் யோனியை பற்றி உங்களுக்கு எவ்வளவு நன்றாகத் தெரியும்? என்று யோசியுங்கள். யோனி உங்கள் பாலியல் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, பொது ஆரோக்கியத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். யோனியை பற்றிய தவறான தகவல்கள் தவறான எண்ணங்களுக்கு வழிவகுக்கும்.

எனவே, உங்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியத்தைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்வதும், உங்கள் உள்ளாடைகளின் சுகாதாரத்தைக் கண்காணிப்பதும் மிக முக்கியம். எந்த அசாதாரண வெளியேற்றமும் ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Important Things To Check In Your Underwear In Tamil

உங்கள் பிறப்புறுப்பு மற்றும் பிறப்புறுப்பில் வெளியேறும் திரவங்களை பற்றி நீங்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அட்னஹ் வகையில், உங்கள் உள்ளாடைகளில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

யோனி ஆரோக்கியம்
உங்கள் உடலில் இருக்கும் மிக முக்கியமான பகுதி யோனி. அவற்றை ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். புணர்புழை என்று அழைக்கப்படும் யோனி, கருப்பை கழுத்துடன் சினைப்பையை இணைக்கிறது. இங்குதான் மாதவிடாயின் போது இரத்தம் வெளியேறுகிறது மற்றும் உடலுறவின் போது ஊடுருவல் நிகழ்கிறது.

உங்கள் யோனி pH சமநிலை மற்றும் உயவுத்தன்மையை பராமரிக்க ஒரு நுட்பமான சூழலை பராமரிக்க வேண்டும். நாளின் முடிவில் ஒவ்வொரு பெண்ணும் தனது உள்ளாடைகளில் எப்போதாவது ஒரு கறையை காண்கிறார்கள். இது டிஸ்சார்ஜ், ஸ்பாட்டிங் மற்றும் பிற விஷயங்கள் உட்பட எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் உள்ளாடைகளை அணிவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணுங்கள்.

வெளியேற்றம்
ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கையும், மீதி நாட்களில் வெள்ளைபடுதலையும் அனுபவிக்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் உடலை பொறுத்து வெளியேற்ற அளவுகள் மற்றும் வகைகள் வேறுபடலாம். உங்கள் உள்ளாடைகளில் நீங்கள் காணக்கூடிய பல்வேறு வகையான வெளியேற்றங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

சில நாட்கள் முட்டையின் வெள்ளைக்கரு போன்ற வெளியேற்றத்தை நீங்கள் அனுபவிக்கலாம். இது அண்டவிடுப்பைக் குறிக்கிறது. இது கருமுட்டையின் கருவுறுதலுக்கு கருப்பை வாய் வழியாக விந்து செல்ல அனுமதிக்கும் காலகட்டம்.

கிரீமி பால் வெள்ளை வெளியேற்றம்:
முட்டையின் வெள்ளை நிற வெளியேற்றத்திற்கு முன், யோனி திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த வெளியேற்றம் நடக்கிறது. உடலுறவின் போது உராய்வைக் குறைப்பதன் மூலம் இயற்கையான லூப்ரிகேஷனாக செயல்படுகிறது. இந்த வகையான வெளியேற்றம் மிகவும் பொதுவானது. எனவே வெளியேற்றத்தில் எந்த வாசனைகளும் இல்லாமல் இருப்பது இயல்பானது.

சிவப்பு அல்லது பழுப்பு நிற வெளியேற்றம்:
மாதவிடாய் சுழற்சியின் போது இந்த வகையான வெளியேற்றம் ஏற்படுவது பொதுவானது மற்றும் ஆரம்பத்தில் செர்ரி சிவப்பு நிறத்தில் இருந்து இறுதியில் பழுப்பு நிறமாக இருக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் அல்லது ஸ்பாட்டிங் உள்ள பெண்களும் இந்த வகையான வெளியேற்றத்தை அனுபவிக்கலாம்.

வெளிர் மஞ்சள் முதல் நியான் பச்சை வரை வெளியேற்றம்:
இந்த வெளியேற்றமானது ட்ரைக்கோமோனியாசிஸ் போன்ற நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் குறிக்கும் ஒரு பொதுவான நிகழ்வாகும். இது ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் பாலியல் ரீதியாக பரவும் தொற்று ஆகும். இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் துர்நாற்றம் வீசும் பிறப்புறுப்பு வெளியேற்றத்தை கொண்டிருப்பார்கள். பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது போன்றவை இதன் அறிகுறிகள்.

ப்ளஷ் முதல் இளஞ்சிவப்பு வெளியேற்றம்:
இந்த வெளியேற்றம் பொதுவாக சில வகையான இரத்தப்போக்கு இருப்பதைக் குறிக்கிறது. உங்கள் மாதவிடாய்க்கு சற்று முன்போ அல்லது அதற்குப் பின்னரோ இது நடந்தால், ஆரம்பகால இரத்தப்போக்கு அல்லது பழைய இரத்தம் வெளியேற்றம் எனக் கூறப்படும். கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் அல்லாத வளர்ச்சிகள் அல்லது தொற்றுநோயால் ஏற்படும் எரிச்சல் போன்ற கர்ப்பப்பை வாய் பாலிப்கள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளாலும் இது ஏற்படலாம்.

சாம்பல் வெளியேற்றம்
இந்த வகை வெளியேற்றமானது பாக்டீரியா வஜினோசிஸின் (BV) அறிகுறியைக் குறிக்கிறது. இந்த நிலையில், பாக்டீரியா உங்கள் யோனியில் அதிகப்படியாக வளர ஆரம்பிக்கும். யோனியை சுத்தமாக வைத்திருப்பது, நோய்த்தொற்றுகளைத் தடுப்பது மற்றும் லூப்ரிகேஷன் வழங்குவது போன்ற பல நன்மைகளை யோனி வெளியேற்றம் கொண்டுள்ளது. பிறப்புறுப்பு வெளியேற்றம் ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது. இது நபருக்கு நபர் மாறுபடலாம், இருப்பினும் நீங்கள் ஒரு வித்தியாசமான வெளியேற்றத்தை அனுபவித்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

ஸ்பாட்டிங்
மாதவிடாயின் போது பெண்களிடையே ஸ்பாட்டிங் ஏற்படுவது மிகவும் பொதுவான நிலை. இது ஒரு பெண்ணின் மாதாந்திர மாதவிடாய் காரணமாக இல்லாத யோனி இரத்தப்போக்கு ஆகும். கழிவறையைப் பயன்படுத்திய பிறகு உங்கள் உள்ளாடைகளில் அல்லது டாய்லெட் பேப்பரில் அதைக் காணலாம். உங்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால், நீங்கள் ஒரு பேண்டி லைனரைப் பயன்படுத்தலாம். நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போதும் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும்போதும் மாதவிடாய் நின்ற நிலையில் இருக்கிறீர்கள் மற்றும் பாலுறவு மூலம் பரவும் நோய்த்தொற்று போன்ற பல காரணங்களால் ஸ்பாட்டிங் தோன்றலாம்.

ஈரத்தன்மை
உங்கள் யோனி ஒரு சுய-சுத்தப்படுத்தும் உறுப்பு என்பதால், அது தன்னைத்தானே உயவூட்டுகிறது. கோடை காலத்தில் ஈரமான பிறப்புறுப்பு நிலையை வைத்திருக்க வேண்டும். உங்கள் யோனியை ஈரமாக வைத்திருக்கும் உங்கள் வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பிகளை கவனிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், பாலுறவு தூண்டப்படுவதால், கர்ப்பப்பை வாய் சளியின் நீர்ச்சத்து அதிகரிக்கலாம். இது உடலுறவின் போது உங்கள் இன்பத்தையும் ஆறுதலையும் அதிகரிக்க லூப்ரிகண்டாகச் செயல்படுகிறது. இதனால், உங்கள் யோனி பகுதியை ஈரமாக உணர்கிறீர்கள். பெண்களே, உங்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியத்தை சரிபார்த்து, அவற்றை சுகாதாரமாக வைத்திருப்பது மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, April 13, 2023, 16:40 [IST]
Desktop Bottom Promotion