For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சியவன்பிரஷ்ஷை வீட்டிலேயே ஈஸியாக செய்வது எப்படி?

|

தற்போது நிலவி வரும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில், நோய் தொற்றில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்வது என்று தான் அனைவரது மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும். சத்தான காய்கறிகள், பழங்கள் என அனைத்தையும் சாப்பிட்டு எப்படியாவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களே அதிகம். அது ஒன்றும் தவறு கிடையாதே. ஏனென்றால், நல்ல நோய் எதிர்ப்பாற்றல் உள்ளவர்களை கொரோனா வைரஸ் அவ்வளவாக தாக்காது என்றும், அப்படியே தாக்கினாலும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியினால் வைரஸின் தாக்குதல் எடுபடாது என்றும் மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

MOST READ: நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றணுமா? அப்ப இந்த டீயை தினமும் குடிங்க...

அந்த வகையில், மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு ஆயுர்வேத மருந்தினை பற்றி தான் இப்போது கூற போகிறோம். அதன் பெயர் சியவன்பிரஷ். உங்களது தாத்தா, பாட்டியிடம் கேட்டு பாருங்கள், தினந்தோறும் நாங்கள் சாப்பிட்டு வந்தது தான் சியவன்பிரஷ் என்று கூறுவார்கள். அதனால் தான் நம் முன்னோர்கள் எந்தவொரு பருவநிலை மாற்றத்தின் போதும், வைரஸ் தொற்றுகளின் போதும் நோய்வாய்ப்படாமல், ஆரோக்கியத்துடன் இருக்க முடிந்தது. இந்த சியவன்பிரஷை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கிமான வாழ்வை பெற்றிடலாம்.

MOST READ: இந்த சாதாரண பழக்கங்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தை அதிகரிக்கும் என்பது தெரியுமா? இன்னக்கே அத கைவிடுங்க...

ஏனென்றால், இந்த சியவன்பிரஷ்ஷில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும், நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலு சேர்த்து, முழுமையான ஆரோக்கியத்தை பெற்றிட உதவக்கூடியவை. சுகாதார வல்லுநர்கள் மற்றும் இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கூற்றுப்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் 1 டீஸ்பூன் சியவன்பிரஷ்ஷை காலையில் சாப்பிட வேண்டும்.

MOST READ: கொரோனாவின் புதிய அறிகுறியை கூறிய ஸ்பானிஷ் நிபுணர்கள்... அது என்ன அறிகுறி?

இந்த சியவன்பிரஷ் மருந்து அனைத்து கடைகளிலும் சுலபமாக கிடைக்கக் கூடியது தான். இருப்பினும், வீட்டிலேயே இதனை சுலபமாக செய்து விடலாம். இயற்கை பொருட்களை கொண்டு செய்வதனால் இதில் சத்துக்கள் நிறைந்திருப்பது உறுதி. சியவன்பிரஷ் செய்முறையை தற்போது தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயுர்வேதம் கூறும் சியவன்பிரஷ்ஷின் நன்மைகள்:

ஆயுர்வேதம் கூறும் சியவன்பிரஷ்ஷின் நன்மைகள்:

* சியவன்பிரஷ்ஷில் நெல்லிக்காய், உலர் திராட்சை மற்றும் பேரிச்சம்பழம் போன்றவை உள்ளன. எனவே, இது வைட்டமின் சி-ன் சிறந்த மூலமாக கருதப்படுகிறது.

* வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும், மெட்டபாலிசத்தையும் அதிகரிக்க செய்கிறது.

* ஆயுர்வேத பொருட்கள் மற்றும் மூலிகைள் இவற்றில் இடம் பெறுவதால், எல்லா வகையான நோயிலும் இருந்தும் இது உடலில் காக்க உதவும்.

* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் இந்த சியவன்பிரஷை தாராளமாக சாப்பிடலாம். உடலுக்கு அவ்வளவு நல்லதை செய்யக்கூடியது.

சியவன்பிரஷ் செய்ய தேவையான பொருட்கள்:

சியவன்பிரஷ் செய்ய தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - ½ கிலோ

உலர் திராட்சை - ஒரு கையளவு

பேரீட்சை (கொட்டை நீக்கியது) - 10

நெய் - 100 கிராம்

வெல்லம் - 400 கிராம்

பிரியாணி இலை - 2

பட்டை - ஒரு சிறிய துண்டு

சுக்கு - 10 கிராம்

ஜாதிக்காய் பொடி - 5 கிராம்

ஏலக்காய் (சிறியது) - 7

கிராம்பு - 5 கிராம்

கருப்பு மிளகு - 5 கிராம்

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

சீரகம் - 1 டீஸ்பூன்

திப்பிலி - 10 கிராம்

நட்சத்திர சோம்பு - 1

செய்முறை:

செய்முறை:

படி: 1

முதலில் அனைத்து உலர்ந்து மசாலா பொருட்களையும் (அதாவது, பிரியாணி இலை, சுக்கு, பட்டை, ஜாதிக்காய், ஏலக்காய், சீரகம், கிராம்பு, திப்பிலி, நட்சத்திர சோம்பு, போன்றவை) ஒன்றாக சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.

படி: 2

படி: 2

இப்போது, எடுத்துக் கொண்டுள்ள நெல்லிக்காயை தண்ணீரில் நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு சிறிது நீர் விட்டு 2 விசில் விடவும்.

படி: 3

படி: 3

அடுத்ததாக, வேக வைத்த நெல்லிக்காயை எடுத்துவிட்டு, அதே சுடுநீரில் உலர் திராட்சை மற்றும் பேரீட்சையை போட்டு 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். நெல்லிக்காய் நன்கு ஆறியதும், அதன் கொட்டைகளை நீக்கிவிட்டு, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

படி: 4

படி: 4

இப்போது, நீரில் நன்கு ஊறிய உலர்திராட்சை, பேரீட்சை மற்றும் நறுக்கிய நெல்லிக்காயை மிக்ஸியில் போட்டு சிறிதளவு மட்டுமே நீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். (அதிகப்படியான நீர் சேர்த்துவிடக்கூடாது)

படி: 5

படி: 5

அடுத்ததாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, அது சூடானதும் நெய்யை ஊற்றி 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் சூடேற்றவும்.

படி: 6

படி: 6

அத்துடன், இப்போது வெல்லம் சேர்த்து, நன்கு கரைந்து சிரப் பதத்திற்கு வரும் வரை கிளறவும். அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் பேஸ்ட்டை வெல்லத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும். குறைவான தீயில் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.

படி: 7

படி: 7

இப்போது, பொடி செய்து வைத்து மசாலா பொருட்களை சேர்த்து குறைவான தீயில் 3-4 நிமிடங்களுக்கு நன்கு கலக்கவும். எப்போது கிளறி கொண்டிருக்கும் பேஸ்ட் பாத்திரத்தில் ஒட்டாமல், கரண்டியே முழுவதுமாக ஒட்டிக்கொள்கிறதோ அப்போது அடுப்பை அணைத்து விடவும். சியவன்பிரஷ் தற்போது தயார்.

குறிப்பு

குறிப்பு

சியவன்பிரஷை நன்கு ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இது செய்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வீட்டில் இருந்தால், இதனை செய்ய 30 நிமிடங்கள் மட்டுமே போதும்.

தயாரித்த இந்த சியவன்பிரஷை தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, எந்த நோயும் உங்கள் அருகில் கூட எட்டிப் பார்க்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Boost Immunity With Chyawanprash, Learn To Make Chyawanprash At Home

Want to boost your immunity with chyawanprash? Then learn to make chyawanprash at home. Read on...
Desktop Bottom Promotion