For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிக்கறப்ப காதுல நிறைய தண்ணி புகுந்திடுச்சா? அத எப்படி ஈஸியா வெளியேற்றலாம்...

காதுக்குள் தண்ணீர் புகுந்து கொண்டால் அதை எப்படி எளிதாக வெளியேற்றலாம் என்பதற்கு தான் சில குறிப்புகளை உங்களுக்காக இந்த பகுதியில் பகிர்ந்து கொள்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள். அதற்குரிய வீட்டு வைத்

|

காதுக்குள் தண்ணீர் புகுவது நம்மளுக்கு அடிக்கடி ஏற்படும் ஒரு விஷயமாகும். தலைக்கு குளிக்கும் போது நீச்சல் குளத்தில் குளிக்கும் போது இந்த மாதிரியான பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இயற்கையாகவே நமது காதில் உள்ள வேக்ஸ் படலம் தண்ணீரை தடுக்கும் ஆற்றல் கொண்டு காணப்படும். ஆனால் சில சமயங்களில் அதையும் மீறி தண்ணீர் உட்புகுந்து விடும்.

Water Out Of Ear

இது அடிக்கடி காதுக்குள் சுருக்கென்ற வலியை ஏற்படுத்தும்.ஏன் சில சமயங்களில் தீவிர வலி ஏன் காது கேட்காமல் போகக் கூட வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காது கேட்காமல் போதல்

காது கேட்காமல் போதல்

இதற்கு உடனடி தீர்வு நீங்கள் அளிக்காவிட்டால் நீர்க்கட்டிகள் உருவாகுதல், காதில் அழற்சி, காது கேட்காமல் போதல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

கண்டறிய வேண்டும்.

முதலில் தண்ணீர் தேங்கி இருப்பது வெளிப்புற காதும் பகுதிகளிலா இல்லை உட்புறத்திலா என்பதை கண்டறிய வேண்டும். உட்புற பாதிப்பு என்றால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது. வெளிப்புற பாதிப்பு என்றால் வீட்டில் இருந்தபடியே கீழ்க்கண்ட முறைகளை செய்தால் போதும், சீக்கிரம் சரியாகிடும்.

MOST READ: இந்த எடத்துல வலிக்குதா? நீங்க பண்ற இந்த 7 விஷயந்தான் அதுக்கு காரணம்... இனிமே செய்யாதீங்க

புவி ஈர்ப்பு விசை

புவி ஈர்ப்பு விசை

உங்கள் காதில் புகுந்துள்ள தண்ணீரை போக்க புவி ஈர்ப்பு விசை பயன்படுகிறது.

செய்யும் முறை

முதலில் உங்கள் தலையை சாய்த்து தரைக்கு இணையாக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது காதிற்கு கீழ் உங்கள் உள்ளங்கையை படத்தில் காட்டியுள்ளவாறு வையுங்கள். அப்படியே காதை அழுத்துங்கள். இப்படி காதில் ஏற்படுத்தும் வெற்றிடம் தண்ணீரை வெளியேற்றி விடும். பிறகு காட்டன் பட்ஸை கொண்டு தண்ணீரை துடைத்து எடுத்து காதை உலர விடுங்கள்.

வாயை அசைப்பது, சுவிங்கம் மெல்லுவது போன்று அசைப்பது தண்ணீரை எளிதாக வெளியேற்றி விடும். இது காதுக்குள் அழுத்தத்தையும் நீட்சியையும் கொடுத்து சரியாகி விடும்.

குறிப்பு : ஓயாமல் காதில் பட்ஸ் கொண்டு குடைய வேண்டாம்.

வல்ஸால்வா சூழ்ச்சி

வல்ஸால்வா சூழ்ச்சி

இந்த முறை காதில் இருந்து தண்ணீரை வெளியேற்ற உதவியாக இருக்கும். இந்த முறையில் நமது சுவாச வால்வை திறந்து காதுகளின் வழியாக தண்ணீரை வெளியேற்ற முடியும்.

செய்யும் முறை

உங்கள் வாயை நன்றாக மூடிக் கொண்டு, விரல்களால் மூக்கை பிடித்துக் கொள்ளுங்கள். பிறகு ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள். இப்படி மூக்கிற்கு அழுத்தம் கொடுக்கும் போது காற்று வெளிவரும் போது சத்தம் கேட்கும். அப்பொழுது நமது சுவாச வால்வு திறந்து விடும்.

குறிப்பு

ரெhம்ப அழுத்தி முச்சை வெளியிட வேண்டாம். அது உங்கள் காது பாகத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.

ப்ளோ ட்ரையர்

ப்ளோ ட்ரையர்

ப்ளே ட்ரையர் காதில் தேங்கியுள்ள நீரை ஆவியாக்க பயன்படுகிறது. வெதுவெதுப்பான காற்று காதில் நுழையும் போது நீர் வெளியேற்றப்படுகிறது.

செய்யும் முறை

உங்கள் காதை உடம்போடு ஒட்டாத மாதிரி இழுத்து வைத்துக் கொள்ளுங்கள்

10-12 அங்குல தூரத்தில் ப்ளே ட்ரையர் இருந்து காற்றை விடுங்கள்

குறைந்த வேகத்தில் காற்றை லேசான சூட்டில் விடவும். அந்த நிலையிலேயே 30 விநாடிகள் வைத்திருங்கள். இதை திரும்பவும் செய்யவும்

குறிப்பு

ஒரே நேரத்தில் சில நிமிடங்களுக்கு மேல் செய்ய வேண்டாம்.

ஆல்கஹால் தேய்த்தல் மற்றும் வினிகர்

ஆல்கஹால் தேய்த்தல் மற்றும் வினிகர்

ஆல்கஹால் மற்றும் வினிகர் காதில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது.

வினிகரில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை காதில் உள்ள கிருமியை அழிக்கிறது. எனவே ஆல்கஹால் கொண்டு தேய்க்கும் போது காதில் உள்ள தண்ணீர் உலர்ந்து விடும்.

செய்முறை

1 டீ ஸ்பூன் ஆல்கஹால் மற்றும் வினிகரை நன்றாக கலந்து கொள்ளுங்கள்

இதை காதில் சொட்டுகளாக 2-3 சொட்டுகள் விடவும்

ஆல்கஹாலை தேய்க்கும் போது நல்ல பலன் கிடைக்கும்

30 நிமிடங்கள் காத்திருக்கவும்

தலையை அப்படியே லேசாக திருப்பி உலர வையுங்கள்.

MOST READ: உடனடியாக கருத்தரிக்க எந்த நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும்?

வெப்ப தெரபி

வெப்ப தெரபி

வெப்ப தெரபியும் காதில் உள்ள தண்ணீரை வெளியேற்ற உதவுகிறது. இந்த வெப்பம் சுவாச வால்வை திறக்கிறது. இதனால் காதில் உள்ள தண்ணீர் எளிதாக இறங்கிவிடும்.

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் உள்ள சூடான நீரில் துணியை நனைத்து விடுங்கள். பிறகு மீதமுள்ள தண்ணீரை பிழிந்து விடுங்கள். இப்பொழுது இந்த சூடான துணியை காதில் 30 விநாடிகள் வைக்கவும்.

ஒரு நிமிடம் வரை காத்திருந்து பிறகு திரும்பவும் செய்யவும்.

இதை 4-5 தடவை இதை திரும்பவும் செய்யவும்

ஒரு பக்கமாக படுத்துக் கொள்ளுங்கள் தண்ணீர் வெளியேறி விடும்

நீராவி

நீராவி

நீராவயை நுகர்வதும் காதுகளில் உள்ள தண்ணீரை வெளியேற்ற ஒரு நல்ல வழி.

ஏனெனில் இந்த நீராவி மூச்சுக் குழாயை திறந்து காதுகளில் உள்ள நீரை வெளியேற்றி விடும். ஒரு பெரிய பெளலில் சூடான நீராவயை எடுத்துக் கொள்ளுங்கள்

தலையில் துண்டை போட்டு நன்றாக கவர் பண்ணி கொள்ளுங்கள்.

அதை 5-10 நிமிடங்கள் சுவாசியுங்கள். இப்பொழுது ஒரு பக்கமாக தலையை சாயுங்கள். இப்பொழுது தண்ணீர் காதுகளிலிருந்து வெளியேற்றப்பட்டது விடும்.

சூடான குளியல் கூட சிறந்த பலனை தரும்

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடும் காதுகளில் உள்ள தண்ணீரை வெளியேற்ற உதவுகிறது. காதுகளில் உள்ள வேக்ஸ் க்கு இடையில் தங்கியுள்ள தண்ணீரை எளிதாக வெளியேற்ற உதவும்.

3% ஹைட்ரஜன் பெராக்ஸைடை எடுத்து சொட்டு சொட்டாக பாதிக்கப்பட்ட காதில் ஊற்றவும்.

1-2 நிமிடங்கள் வெயிட் பண்ணவும். தலையை கீழே குனியுங்கள், காதுகளில் உள்ள தண்ணீர் வெளியேறி விடும்.

உப்பு

உப்பு

உப்பு காதுகளில் உள்ள தண்ணீரை உறிஞ்ச பயன்படுகிறது. அதிலும் சூடான உப்பு காதில் உள்ள தண்ணீர் எளிதில் ஆவியாக மிகவும் உதவியாக இருக்கும்.

1/4 கப் உள்ள உப்பை சூடாக்க மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

இந்த சூடான உப்பை ஒரு காட்டன் துணியில் கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பாதிக்கப்பட்ட காதுப் பகுதியில் வைத்து 2-3 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கவும்.

பூண்டு

பூண்டு

பூண்டும் காதில் உள்ள நீரை களைக்க பயன்படுகிறது. பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை காதுகளில் உள்ள தொற்றை போக்குகிறது. வலியை குறைக்கிறது.

சில பூண்டு பற்களை நசுக்கி ஜூஸை எடுத்துக் கொள்ளுங்கள்.

பாதிக்கப்பட்ட இடத்தில் 2-3 சொட்டுகள் பூண்டிச் சாற்றை ஊற்றுங்கள்.

1 நிமிடங்கள் வரை காத்திருக்கவும், 12 அங்குல தூரத்தில் இருந்து ப்ளோ ட்ரையர் பயன்படுத்தி காற்று வீசவும்.

MOST READ: மூக்குமேல இப்படி கொஞ்சம் அசிங்கமா இருக்கா? இத அப்ளை பண்ணா உடனே போயிடும்...

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலின் ஆன்டி செப்டிக் தன்மை காதில் ஏற்படும் தொற்றை குறைக்கிறது.

ஒரு சிறிய பெளலில் ஆலிவ் ஆயிலை சூடுபடுத்தி கொள்ளுங்கள்.

சில சொட்டுகள் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயிலை காதில் விடுங்கள்.

10 நிமிடங்கள் வரை காத்திருக்கவும்.

பிறகு தலையை ஒருபக்கமா சரித்து எண்ணெய் மற்றும் நீரை பட்ஸ் கொண்டு துடைத்து எடுக்கவும். அதே மாதிரி நீச்சலுக்கு செல்லும் முன் காதில் 2-3 சொட்டுகள் ஆலிவ் ஆயில் விட்டு சொல்லும் போது தண்ணீர் உள்ளே புகாமல் தடுக்கிறது.

காதுகளில் தீவிர பிரச்சினை என்றால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Water Out Of Ear

Using the laws of gravity, a vacuum and evaporation are two ways to get rid of water in your ears> Never use a pen, bobby pin, crochet needles or even your fingers in your ears in an effort to extract water as it could perforate your eardrum or cause an infection.
Story first published: Wednesday, May 29, 2019, 10:57 [IST]
Desktop Bottom Promotion