For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடம்புல இருக்கிற எல்லா சளியும் வெளியேற கருப்பு முள்ளங்கி ஜூஸ்... ஒரே முறை குடிங்க போதும்

கருப்பு முள்ளங்கிளை வைத்து எப்படி சளி மற்றும் இருமலை வெளியேற்றுவது என்பது பற்றி இங்கே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய செய்முறைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

|

இந்த குளிர்காலம் வந்துட்டாலே போதும் கூடவே சேர்ந்து நோய்த் தொற்றுகளும் வந்து சேரும். குளிர்காலத்தில் ஜலதோஷம், இருமல் ரெம்ப சாதாரணமாக எல்லாரையும் தொற்றக் கூடியது. எனவே இந்த மாதிரியான சமயங்களில் சீசன் வகை காய்கறிகளை எடுத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இந்த ஜலதோஷம், சளி, இருமலை நாம் கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால் அந்த சளி முழுக்க உடம்புக்குள் சேர்ந்து சேர்ந்து நாளடைவில் தீராத நெஞ்சு சளியாக மாறி, பின் அஸ்துமாவாக உருவெடுத்து விடும்.

அதன்பின்பு ஆஸ்துமாவுக்கு மருந்து சாப்பிடுவதை விட, ஆரம்ப காலத்திலேயு ஜலதோஷம், சளி உடலில் சேராமல் வெளியேற்றிவிடுவது நல்லது தானே. சரி எப்படி அதை நாம் எளிய முறையில் வீட்டிலேயே செய்வது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சளி தொல்லை

சளி தொல்லை

அந்த வகையில் ஏராளமான ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டது தான் இந்த கருப்பு முள்ளங்கி. இந்த காய்கறியில் உடலுக்கு தேவையான ஆந்தோசயனின், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பொருட்கள் உள்ளன. இந்த கருப்பு முள்ளங்கி குளிர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கிறது.

கருப்பு முள்ளங்கி

கருப்பு முள்ளங்கி

இந்த முள்ளங்கி வெள்ளை முள்ளங்கி போன்றே தான் இருக்கும். ஆனால் இதன் வெளிப்புற தோல் மட்டும் ப்ரவுன் கலரில் இருக்கும். இதை நீங்கள் சாலட் போன்றவற்றில் கூட பயன்படுத்தலாம். இதில் விட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச் சத்து, மக்னீசியம், சல்பர் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதன் பயன்களை கீழ்க்கண்டவாறு நாம் பார்க்கலாம்.

Image Courtesy

ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு நிவாரணம் முள்ளங்கி ரெசிபி

ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு நிவாரணம் முள்ளங்கி ரெசிபி

தேவையான பொருள்கள்

  • கருப்பு முள்ளங்கி - 1
  • தேன் - 50 மில்லி
  • சர்க்கரை - 50 கிராம்
  • Image Courtesy

    MOST READ: இந்த மாத்திரை அடிக்கடி சாப்பிடறவங்களுக்கு குடல்புற்றுநோயே வராதாமாம்... எப்படினு தெரியணுமா?

    செய்முறை

    செய்முறை

    கருப்பு முள்ளங்கியை எடுத்து அதில் சிறுதளவு தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து பயன்படுத்த போகிறோம்

    முதலில் ஒரு மீடிய வடிவ முள்ளங்கியை எடுத்து தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டி கொள்ளுங்கள்.

    இப்பொழுது அதை கத்தியை கொண்டு நன்றாக மசித்து கொள்ளவும்

    அதில் தேன் மற்றும் சர்க்கரை கலந்து ஒன்றாக கலக்கவும்

    இதை அப்படியே 12 மணி நேரம் இரவு முழுவதும் ஊற வையுங்கள்

    பாத்திரம் முழுவதும் நிரப்ப வேண்டாம்.

    12 மணி நேரம் கழித்து முள்ளங்கியில் உள்ள நீர்ச்சத்து இறங்கி முள்ளங்கி ஜூஸ் கிடைக்கும். இதை ஒரு கிளாஸில் நிரப்பிக் கொள்ளுங்கள்.

    இந்த சாற்றை குடித்து வந்தால் சீக்கிரமே ஜலதோஷம் மற்றும் இருமல் சரியாகி விடும்.

    முள்ளங்கி ஜூஸ்

    முள்ளங்கி ஜூஸ்

    கருப்பு முள்ளங்கி சதைப்பகுதியை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள்.

    இதை குடித்து வாருங்கள். ஜலதோஷம், இருமல் சரியாகி விடும்.

    எனவே இனி மழைக்காலங்கள் வந்துட்டாலே இந்த கருப்பு முள்ளங்கியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஜலதோஷம் உங்களை நெருங்காது.

    Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Rid Of Cold And Cough With Black Radishes

Black radish is one root vegetable, which can be used to even remedy cold and sore throat. The vegetable has a white flesh and a blackish brown outer skin, which looks like the normal white radish
Desktop Bottom Promotion