For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெருங்குடல் புற்றுநோயை வீட்டிலேயே கண்டுபிடிக்க முடியுமா? எப்படி கண்டுபிடிக்கலாம்?

|

இந்த வகை புற்றுநோய் செரிமான தடத்தில் உள்ள பெருங்குடல் பகுதியில் ஏற்படும் ஒரு வகை புற்று நோயாகும். இந்த நோய் ஆரம்ப நேரங்களில் தீங்கற்ற பெரிய அளவில் பயப்பட தேவை இல்லாத வகையில் இருக்கும்.

Can You Get Tested for Colon Cancer at Home

ஆனால் இதை கவனிக்காமல் விட்டு விட்டால் உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் அதிகம். மருத்துவர்கள் இந்த நோய்க்காக 50 வயதிற்கு மேல் உள்ளவர்களை குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்ய பரிந்துரைக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெருங்குடல் நோய்

பெருங்குடல் நோய்

இந்த நோய் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் பாதிக்கப்பட்டவரின் ஆயுள் காலத்தை 5 வருடத்திற்கு மேல் கூட்டுவதற்கான வாய்ப்புகள் 70 முதல் 97 சதவீதம் அதிகம். இந்த நோயை கண்டறிய கோலோகார்டு (Cologuard) பரிசோதனை உதவுகிறது.

இந்த நோய் பெரும்பாலும் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களை தாக்குகிறது. இந்த நோய் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் இதை குணப்படுத்துவது எளிது ஆனால் பின்னாளில் இது ஓர் உயிர்க்கொல்லி நோயாக மாறிவிடுகிறது

அறிகுறிகள்

அறிகுறிகள்

பெருங்குடல் புற்றுநோய்க்கான சில வெளிப்படையான அறிகுறிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

உங்கள் மலத்தில் இரத்தம் அல்லது இரத்தப்போக்கு.

வாயு அல்லது வலி போன்ற தொடர்ச்சியான வயிற்று அசௌகரியம்

உங்கள் வயிறு முற்றிலும் காலியாக இல்லை என்று ஒரு உணர்வு

தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்.

பலவீனம் அல்லது சோர்வு

உடல் எடை வேகமாக குறைதல்

MOST READ: ஆவாரம்பூ தினம் 1 வீதம் ரெண்டு வாரம் சாப்பிடுங்க... இந்த எட்டு நோயும் உங்களுக்கு வரவே வராது

நோய் வரக் காரணங்கள்

நோய் வரக் காரணங்கள்

பெருங்குடல் புற்றுநோய் பெரும்பாலாக மரபு வழியாக தொடரும் ஒரு வகை புற்றுநோய். ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு DNA வழியாக இது கடத்தப்படுகிறது. எனவே குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் இருந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் வருடத்தில் ஒரு முறை இந்த நோய்க்கான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

உணவு

உணவு

இந்த புற்றுநோய் மேற்கத்திய உணவு பாரம்பரியங்களை பின்பற்றும் போது ஏற்படக்கூடிய ஒரு நோய். மேற்கத்திய உணவுகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் நார்ச்சத்து இல்லாத அல்லது மிக கம்மியான உணவுப் பொருட்களை உண்பதால் ஏற்படக்கூடிய நோயாகும்.

MOST READ: அபிநந்தனோட கொடுவா மீசை வெட்டணுமாம்... சலூன் கடை எப்படி நிரம்பி வழியுதுனு நீங்களே பாருங்க...

ஜீரணக்கோளாறு

ஜீரணக்கோளாறு

உணவு செரிமானம் ஆகாத காரணங்களினால் குடல் பகுதியில் பாலிப்ஸ் எனப்படும் சிறு கட்டிகள் தோன்றுகின்றன. இந்த சிறு கட்டிகள் 10 முதல் 15 வருடங்கள் வரை வளரும் தன்மை உடையது. இந்தக் கட்டிகளை ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கு சிகிச்சை பெறும்போது பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

நோய் தடுப்பு வழிமுறைகள்

நோய் தடுப்பு வழிமுறைகள்

50 வயதுக்கு மேற்பட்டவர்கள், வருடத்திற்கு ஒருமுறை பெருங்குடல் புற்றுநோய் கண்டறியும் போலோ கார்டு பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

கொழுப்புச் சத்து குறைந்த மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வது அவசியம்.

குடி மற்றும் புகையிலை களை தவிர்ப்பது நல்லது.

தினமும் உடற்பயிற்சி செய்தல் அவசியம்.

உடல் எடை அதிக அளவில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

MOST READ: கோபம் வந்ததால் 2 கிலோ கல்லும் பாட்டில் மூடியும் சாப்பிட்ட விநோத மனிதர்... இப்படியுமா யோசிப்பாங்க?

வீட்டில் சோதனை

வீட்டில் சோதனை

அமெரிக்காவின் எஃப் டி ஏ 2014ஆம் ஆண்டு வீட்டில் பெருங்குடல் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. வீட்டில் இருந்தவாரே கோலோகார்டு பரிசோதனையை, பரிசோதனை உபகரண கருவியை கொண்டு செய்ய முடியும். இதன் மூலம் மருத்துவர்களும் நோய் பாதிக்கப்பட்டவர்களும் நோய்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை உரிய நேரத்தில் பெற முடியும். இப்போது இதன் பரவல் மிகவும் குறைவு வரும் காலங்களில் மருத்துவர்கள் இந்த நோயின் தன்மைகளை கண்டறிய இந்த வகை பரிசோதனைகள் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

ஆராய்ச்சியின் வடிவம்

ஆராய்ச்சியின் வடிவம்

கோலோகார்டு பரிசோதனைக் கருவியை கண்டுபிடித்த நிறுவனம் பத்தாயிரம் நோயாளிகளுக்கு தங்கள் கருவியின் மூலம் வீட்டில் இருந்தே சோதனை செய்தாது மேலும் அதே பத்தாயிரம் நோயாளிகளுக்கு மருத்துவமனை மூலம் பெருங்குடல் புற்றுநோயை கண்டறியும் கொலொனோஸ்காப்பி (colonoscopy) மூலமும் பெருங்குடல் புற்றுநோயை கண்டறியும் சோதனை நடத்தியது. அதில் 92 சதவீத முடிவுகள் இணையாக அமைந்தன. இந்த சோதனை முடிவுகள் என்ன வெளியிடப்பட்டன.

இந்த சோதனை கோலோகார்டு கருவியிலிருந்து பெறப்பட்ட DNA வை ஆராய்ச்சி செய்து மரபியல் ரீதியாக குடும்பத்தில் இந்த நோய் தாக்குவதற்கான அல்லது தாக்கிய விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த நோய் அடுத்த தலைமுறைக்கு பரவாமல் தடுப்பதற்கான DNA மாற்றத்தை அறிவதற்கான செயல்முறைகள் அறியப்பட்டன.

நோயாளிகளுக்கு இது எவ்வாறு உதவுகிறது

நோயாளிகளுக்கு இது எவ்வாறு உதவுகிறது

கொலொனோஸ்காப்பி பரிசோதனை செய்ய சில நோயாளிகள் தயங்குகின்றனர். ஆனால் கோலோகார்டு பரிசோதனையை வீட்டிலிருந்தே செய்ய முடிவதால் பயனாளிகள் தயக்கமின்றி கருவியை வாங்கி தாங்களாகவே பரிசோதனை செய்து கொள்கின்றனர். இதன் மூலம் நோய் இருப்பது தெரிய வந்தால் அவர்கள் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது எளிது. இதன் மூலம் விலை மதிப்பற்ற உயிர் காக்கப்படுகிறது.

வருட முழு உடல் பரிசோதனையின்போது மருத்துவர்கள் ஹலோ கருவியை நோயாளிகளுக்கு வாங்க அறிவுறுத்துகின்றனர். பின்னர் அந்த கருவியை தங்கள் வீடுகளில் கொண்டு வந்து மாதிரியை அதில் செலுத்தி பரிசோதனை செய்கின்றனர். பரிசோதனையின் முடிவு சாதகமாக இல்லாவிடின் மருத்துவரை நேரில் அணுகி நோய்க்கான சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த கருவியின் விலை சற்று அதிகம், ஆனால் மருத்துவ காப்பீடு செய்தவர்களுக்கு நோய்க்கான சிகிச்சை இலவசம். எனவே இந்தக் கருவியை உபயோகப்படுத்தும் போது நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அந்த நோய்க்கான சிகிச்சை மருத்துவ காப்பீட்டின் மூலம் குறைந்த விலையில் அல்லது இலவசமாக பெற்றுக் கொள்ள இயலும்.

MOST READ: இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலை சேலையாக வடிவமைத்த டிசைனர்... யாருப்பா நீ?

நோயின் தாக்கம் அதிகம் உள்ள நாடுகள்.

நோயின் தாக்கம் அதிகம் உள்ள நாடுகள்.

இந்த நோய் அதிகமாக அமெரிக்க தேசத்திலுள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு உள்ளது. இந்த நோயினால் இருபதில் ஒரு அமெரிக்கர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 13 லட்சம் அமெரிக்கர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க தேசத்தில் உள்ள கேன்சர் நோய்களில் 8% நோய் பெருங்குடல் புற்று நோய் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can You Get Tested for Colon Cancer at Home?

importance of colon cancer screening for a reason. Early detection makes a huge difference. When doctors detect the disease in early stages. At-home testing may be a way to ensure more of these patients have access to early diagnosis and life-saving treatment.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more