வாக்கிங் போகும்போது செருப்பு போடாமல் நடக்கலாமா?...

By Gnaana
Subscribe to Boldsky

நம் தேசத்தின், பழம்பெரும் கலாச்சாரங்களான ஆழ்நிலைதியானம், யோகா, இயற்கை மருத்துவம் அத்துடன் வாத்ஸ்யாயனர் தந்த காமசூத்திரமும் இல்லாத இடமில்லை என்பதுபோல, உலகெங்கும் பரவியிருக்கிறது.

health

இவையெல்லாம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், நம்தேசத்திலிருந்து பரவிய கலைகள் என்றால், தற்காலத்தில், மற்றொரு இந்திய கலாச்சாரமான வெறுங்காலில் நடப்பதும், உலகெங்கும் பரவி, அதை உயரிய கலையாக, மேலைநாட்டினர் புகழ்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகாசனங்கள்

யோகாசனங்கள்

யோகாவும், தியானமும் எல்லோரும் செய்வதில்லை, அதேபோல, காமசூத்திராவும்தான். ஆனால், வெறுங்காலில் நடப்பதெனும் நம் முன்னோர் கலாச்சாரம், தற்கால வெளிநாட்டினரை அதிகம் ஈர்க்கிறது. இறைவனை வழிபடும் வேளைகளில், காலணிகள் வெளியிலல்லவா, இருக்கின்றன, வழிபாடு, சடங்கு போன்ற சமயங்களில், நாம் காலணியுடன் இருப்பதில்லையே!

நம்மில் பலர், சமூகவாழ்வில் மாற்றங்கள் கண்டு, கலாச்சார ஆடைகளிலிருந்து விலகி, மேலைநாட்டினரின் கோட்சூட்டுக்கு மாறியிருந்தாலும்கூட, வீடுகளில் செருப்பில்லாமல், வெறுங்காலுடனே நடக்கின்றனர், என்ன காரணம்?

மூதாதையர்கள்

மூதாதையர்கள்

மலையேற்றங்களில், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள், போன்றோர் யாரும் காலணிகள் அணியாமல், அனாயாசமாக மலை ஏறிவிடும்போது, காலணி அணிந்து மலையேறுபவர்கள், தடுமாறுவது ஏன்? கால் தடுக்கி, ஆபத்தில் சிக்குவது ஏன்?

கிராமங்களில், செருப்பணியாமல் கால்நடையாகவே, வயல்வெளிகள், தோட்டங்களுக்கு சென்று அன்றாடப்பணிகளை செய்துவருபவர்களின் உடலும்மனமும், திடகாத்திரமாக இருக்க, சிலநாட்கள் கிராமத்துக்கு தங்கசெல்வோர், அவர்களைப்போல, ஆரோக்கியமாக இருக்க முடியவில்லையே, என வருந்துவதேன்?

மேலைநாட்டினர்

மேலைநாட்டினர்

கல்லிலும், மண்ணிலும், மலையிலும், புல்வெளிகளிலும், வயல்களிலும் காலணியணியாமல் நடப்பதன் அத்தியாவசியத்தை உணராமல், பெரியவர்களை குறைசொல்லி, நமக்கு நாமே, பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டோம், நம் முன்னோரின் செயல்களின் காரணத்தை அறிந்து, தோப்புக்கரணம், யோகா, தியானம் என அவற்றை ஒவ்வொன்றாக, வாழ்வில் பயன்படுத்தி, பல உடல் கோளாறுகளுக்கு தீர்வு காண்கின்றனர், மேலைநாட்டினர்.

நரம்பு மண்டலம்

நரம்பு மண்டலம்

வெறுங்காலில் நடப்பதால், உடல் நரம்புமண்டலத்தின் செயலாற்றல் அதிகரிக்கிறது.

உடலின் அனைத்து உறுப்புகளின் ஆற்றல்மையம் பாதங்களில்தான் உள்ளதென்பார்கள், வெறுங்காலில் நடப்பதன்மூலம், நுரையீரல்,சிறுநீரகம்,கல்லீரல் போன்ற உறுப்புகளின் ஆற்றல்புள்ளிகள் தூண்டப்பட்டு, அவற்றின் இயக்கம் சீராகி, உடல்நலமாகும். இதயபாதிப்புகள், இரத்தஅழுத்த கோளாறுகள், சர்க்கரைபாதிப்பு, நரம்புபிரச்னைகள், பார்வைக்குறைபாடு போன்றவற்றை வெறுங்காலில் நடப்பதன்மூலம், தீர்க்கமுடியும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

வெறுங்காலுடன் பனித்துளிகள் உறையும், பஞ்சுபோன்ற மென்மையான புல்தரையில் நடப்பது, நம்மை மெய் சிலிர்க்கவைக்கும் மென்மையான அனுபவமாக இருக்கும். அவை பாதத்தில் படும்போது, இயற்கையின் மின்காந்த அதிர்வுகள், நம் உடலின் அதிர்வுகளோடு இணையும்போது, உடலாற்றல் தூண்டப்பட்டு, ஏற்படும் புவித்தொடர்பால், உடல் ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்த பாதிப்புகளால் இரவில் தூங்கமுடியாமல் தவிப்பவர்களுக்கு, பாதிப்பைப்போக்கி, தூக்கத்தை இயல்பாக வரவழைக்கும்.

நாகரிக வளர்ச்சிகளில் கேளிக்கை விநோத நிகழ்வுகளில் ஈடுபட்டு, தூக்கத்தைத் தொலைத்து, இரவுவேளைகளில் தவிப்பவர்களெல்லாம், தினமும் புல்வெளிகளில் நடப்பதன் மூலம், இரவில் நல்ல தூக்கத்தை அடைகின்றனர். அதோடு மட்டுமல்ல, மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வில் உற்சாகத்தையும், அமைதியையும் பெறவைக்கிறது.

ரத்த ஓட்டம்

ரத்த ஓட்டம்

வெறும்காலில் நடப்பதால், பாதங்களிலுள்ள ஆற்றல் புள்ளிகள் தூண்டப்படுகிறது. இதன்மூலம், நரம்புமண்டலத்தின் சீரான இரத்த ஓட்டம் பாதங்கள்வரை, பரவுகிறது. நரம்புகள் சுருட்டிக்கொள்வதால் ஏற்படும் வெரிகோஸ் வெயின், இரத்த சர்க்கரை பாதிப்பு, போன்றவற்றை குணப்படுத்துவதால், மேலைநாட்டினர், வெறுங்காலுடனேயே தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

உடல் சமநிலையை உறுதியாக்குகிறது.

உடல் சமநிலையை உறுதியாக்குகிறது.

உடல் இயக்கத்தில் மிகவும் முக்கியமான ஒன்று, உடல் சமநிலை. இது இல்லையென்றால், நாம் நிற்கமுடியாது, விழுந்துவிடுவோம். என்பதிலிருந்து, சமநிலை, நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை, நாம் உணரமுடியும்.

உடல்சமநிலையைப் பராமரிக்கும் அமைப்பு, காதுகளிலுள்ள வெஸ்டிபுலர் எனும் உணர்வு மையமாகும், இதுவே உடல் முழுவதுமிருந்து வரும் சமிக்ஞைகளை ஏற்று, உடலை சமநிலையில் இயங்கவைக்கிறது. ஓடுவது, சைக்கிள்,பைக் ஓட்டுவது போன்றவை உடல் சமநிலைக்கு, சில உதாரணங்களாகும்.

படிகளில் ஏறியிறங்கும் சமயங்களில், படி முடிந்தது என எண்ணி கால்களை வைக்கும்போது, அங்கே படி இருந்து, அதனால் கால்களில் தொய்வு ஏற்படுகிறதில்லையா?, எதிர்பாராத அந்த நிகழ்வால் நிலைகுலையும்போது, கண்ணிமைக்கும்நேரத்தில், விழாமல் நம்மைக் காப்பது, இந்த சமநிலைதான். வயதானவர்கள் நடக்கும்போது, சமயங்களில் தடுமாற்றம் ஏற்பட்டு, பாதம் இடரும்போது காப்பதும், இந்த உடல் சமநிலைதான்.

மாதவிலக்கு பிரச்னைகள்

மாதவிலக்கு பிரச்னைகள்

பெண்களின் ஹார்மோன்பாதிப்பு மற்றும் மெனோபாஸ்கால உபாதைகளை சரியாக்குகிறது. பெண்களுக்கு நடுத்தர வயதில் ஏற்படும், மெனோபாஸ் மற்றும் சமச்சீரற்ற ஹார்மோன் பாதிப்புகளால், மாறுபடும் மனநிலை, சோர்வு, வயிற்றுவலி, தலைவலி, திடீரென உடல் எடை கூடுதல், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் மலச்சிக்கல் காரணமாக, பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். வெறுங்காலுடன் நடக்கும் இந்தப்பயிற்சியே, முறை தவறி வரும் மாதவிடாய்க்கோளாறுகளால், சிரமப்படும் பெண்களின் துயரத்தையும், களையும்.

நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

வெறுங்காலுடன் நடக்கும்போது, இரத்த செல்களின் எண்ணிக்கையும் தரமும் அதிகரித்து, உடலிலுள்ள நச்சுக்கள் நீங்கி, நோயெதிர்ப்பு திறன் வலுவடைகிறது.

வெறுங்காலுடன் நடக்கையில் பூமிக்கும் உடலுக்குமான தொடர்பால், மின்காந்த ஆற்றல் வலுப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்திக்கு, உடல் ஆரோக்கியம் அத்தியாவசியமென்கிறார்கள், நிபுணர்கள்.

உடலின் சக்தியை அதிகரிக்கிறது.

உடலின் சக்தியை அதிகரிக்கிறது.

உடல்சக்தியை அழித்து, நம்மை முடக்கும் அபாயமான மனநிலைதான், மனஅழுத்தமும், கவலைகளும். வெறுங்காலுடன் தினசரி புல்வெளிகள் அல்லது கடற்கரையோர மணல்களில் நடக்கும்போது, பாதத்திலுள்ள உணர்வு மையங்கள், நேர்மறை உணர்வைத்தரும் ஹார்மோன்களைத் தூண்டி, மனஅழுத்தம், சோர்வு மற்றும் கவலை போன்றபாதிப்புகளை விலக்கி, மனதை உற்சாகமாக்குகிறது. இதன்மூலம், உடலாற்றல் அதிகரித்து ஏற்படும் தெம்பால், செயல்களில் வேகமும், விவேகமும் ஏற்படுகிறது.

புத்துணர்ச்சி

புத்துணர்ச்சி

கால்கள் நேரடியாகத் தரையில் படும்போது, உறுப்புகளின் ஆற்றல் மையங்கள் தூண்டப்பட்டு, உடல் உறுப்புகளின் இயக்கமும், மன ஆற்றலும் மேம்பட்டு, உடலில் புத்துணர்வு ஏற்படுகிறது.

பாதங்கள் நேரடியாக பூமியில் படும்போது, உடலாற்றல் நேர்மறையாகவும், பூமியின் ஆற்றல் எதிர்மறையாகவும் செயல்பட்டு, அதனால் உண்டாகும் மின்காந்தஆற்றல் உடலெங்கும் பரவி, உடலியக்கத்தை சீராக்கி, நோய்கள், பாதிப்புகளைத்தீர்த்து, மனதில்அமைதியை ஏற்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    These Health Benefits Of Walking Barefoot Will Blow Your Mind...

    The Indian subcontinent and it's rich heritage has given the world a lot, whether it's the Kama Sutra, yoga, or meditation.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more