For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொண்டை கரகரப்பா இருக்கா?... குரலே மாறிப்போச்சா... இதுல ஏதாவது ஒன்னு எடுத்து வாயில போடுங்க... சரியாகி

இந்த பிரச்சினை பரவ நிலை மாற்றங்களின் போது எல்லோருக்குமே ஏற்படுவது தான். மழை மற்றும் பனி காலத்தில் வருகிற தொண்டைக்கட்டு மற்றும் கரகரப்பை போக்க எளிமையான வீட்டு வைத்தியங்கள் சிலவற்றை இங்கே பரிந்துரை செய்

|

பொதுவாக நமது உடல் நலத்தைப் பாதுகாக்க, தீய பழக்கங்களைப் பின்பற்றாமல் இருப்பது மிகவும் முக்கியம். நமது குரல் நமது அடையாளம். அதனைப் பாதுகாப்பது என்பது நமது கடமை. குறிப்பாக பாடகர்கள், பேச்சாளர்கள் மற்றும் நாள் முழுவதும் பேசும் தொழிலைச் செய்பவர்கள் தங்கள் குரல் மற்றும் தொண்டை மீது தனி கவனம் செலுத்த வேண்டும் . புகையிலை பயன்படுத்துவது போன்ற தீங்கு விளைவிக்கும் பழக்கத்தை பின்பற்றக் கூடாது.

The 9 Best Natural Remedies to Take Care of Your Voice and Throat

தொண்டையில் பாதிப்புகள் தோன்றி குரல் வளம் கெடுவதற்கு வேறு சில காரணிகளும் உண்டு. இந்த பிரச்சனையைப் போக்க சில இயற்கைத் தீர்வுகள் உண்டு. மேலே கூறியவர்கள் மட்டும் இல்லாமல், நாட்பட்ட தொண்டை பாதிப்பு உள்ளவர்களும், இந்த தீர்வுகள் மூலம் நன்மை அடையலாம். இந்த பதிவில் உங்கள் தொண்டை மற்றும் குரல் வளத்தைப் பாதுகாக்கும் சில சிறந்த இயற்கை தீர்வுகளைப் பற்றி காணலாம் . இதன் மூலம் எளிதாகவும் சிறப்பாகவும் பயன் பெற முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணிகள்

காரணிகள்

நமது தொண்டை மற்றும் குரலை பாதிக்கும் பல வகையான எதிர்மறைக் காரணிகள் உண்டு. அவை,

தவறான முறையில் பேசும்போது மற்றும் குரல் வளை அதிகமாக உழைக்கும்போது

அதிகமாகப் பேசுவது அல்லது கத்துவது

புகைபிடிப்பது

மாசு

தட்ப வெப்ப மாற்றம் மற்றும் குளிர்சாதனப் பயன்பாடு

ஒரு சில சமயம், நமது உள்ளுறுப்புகளின் ஆரோக்கியம் கூட தொண்டை மற்றும் குரலில் தீங்கு விளைவிக்கலாம்.

சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றைப் போல் தைராய்டு மற்றும் குடலுக்கும் தொண்டையுடன் தொடர்பு உண்டு.

MOST READ: காதுக்குள்ள அடிக்கடி குறுகுறுன்னு அரிக்குதா? குடையாதீங்க... இத பண்ணுங்க... சரியாகிடும்...

வீட்டு வைத்தியங்கள்

வீட்டு வைத்தியங்கள்

ப்ளண்டகோ

ப்ளண்டகோ மேஜர் என்பது ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டுள்ள ஒரு செடி. பொதுவாக ஈரப்பதமான இடங்களில், ஆறு மற்றும் தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு அருகில் இது வளரும். தொண்டைக்கு இதமளித்து குரலின் பாதிப்பைப் போக்கி வலியைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. சளியைப் போக்குவதில் இது பெரிதும் உதவுகிறது. இருமல் மற்றும் தொண்டைக்கட்டை போக்க சிறந்த மருந்து இது. இதன் மூலம் தேநீர் தயாரித்து பருகுவதால் அல்லது இதனைக் கொண்டு வாய் கொப்பளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும்.

மல்லோ

மல்லோ

ப்ளண்டகோ போன்ற ஒத்த நன்மைகளைத் தருவது மல்லோ. இதன் பிசின் தன்மை காரணமாக இது சிறப்பாகச் செயல்படுகிறது. இது பூக்கள் மற்றும் இலைகளில் காணப்படும் ஜெலட்டின் நார் போன்ற வகையாகும். வாய் மற்றும் தொண்டைப் பகுதி, வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள கோழையைப் பாதுகாக்கிறது.

மல்லோ அழற்சி எதிர்ப்பு, இருமல் எதிர்ப்பு மற்றும் இலேபனத் தன்மை கொண்ட ஒரு பொருளாக இருப்பதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

தொண்டை எரிச்சல்

இருமல் குறிப்பாக வறண்ட இருமல்

தொண்டைக் கட்டு

தொண்டை கரகரப்பு

தொண்டை அழற்சி

சளி

சால்வியா

சால்வியா

அழற்சி எதிர்ப்பு மற்றும் அன்டி செப்டிக் பண்புகளைக் கொண்டது சால்வியா. மேல் சுவாச பாதையில் உண்டான அழற்சியைப் போக்குவதில் இந்த இரண்டு தன்மைகளும் சிறப்பாக செயல்பட உதவுகின்றன.

தொண்டை பாதிப்புகளைப் போக்க சால்வியா நல்ல முறையில் உதவுகிறது. டான்சில், இருமல், தொண்டை கரகரப்பு போன்றவற்றிற்கு சிறந்த தீர்வைத் தருகிறது.

MOST READ: இப்படி இருக்கிற தலையில அடர்த்தியா முடி வளரணுமா இந்த விதைய எண்ணெயில போட்டு தேய்ங்க...

ப்ரோபோலிஸ்

ப்ரோபோலிஸ்

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, கிருமிகளுடன் போராடும் தன்மையைப் பெற்றுத் தருவதில் ப்ரோபோளிஸ் என்னும் இயற்கை மருந்து நல்ல பலனைத் தருகிறது. அண்டி-செப்டிக் குணம் கொண்ட இந்த மருந்து, வைட்டமின், கனிமங்கள் மற்றும் எசன்ஷியல் ஆயில்கள் அதிக அளவில் கொண்ட ஒரு பொருள். சுவாசப் பாதையில் உண்டான நாள்பட்ட மற்றும் குறைந்த கால அழற்சியைப் போக்க இது பெரிதும் உதவுகிறது.

தொண்டை பாதிப்பு பெருமளவில் இருக்கும் நேரத்தில் ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கு ஒரு முறையும் இதனை எடுத்துக் கொள்வதால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஓரளவிற்கு நிவாரணம் கிடைத்த பின் மருந்து எடுக்கும் இடைவெளியை அதிகமாக்கிக் கொள்ளலாம்.

இஞ்சி

இஞ்சி

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு காரசாரமான உணவுப் பொருள் இஞ்சி. உடலுக்கு வெப்பத்தை அளிக்கும் தன்மை கொண்ட இஞ்சி, தொண்டைக்கும் ஏற்ற மிகச் சிறந்த உணவாக இது விளங்குகிறது. தொடர்ந்து குரலைப் பயன்படுத்துபவர்கள், பாடகர்கள், பேச்சாளர்கள் போன்றோர், தினசரி தங்கள் உணவில் இஞ்சியைச் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் தொண்டையில் ஏறபடும் எல்லா வித பாதிப்புகள் குணமடையும்.

இஞ்சியைத் தேநீர் அல்லது வேறு பானத்தில் சேர்த்தும் பருகலாம். இஞ்சி சாறு தயாரித்தும் பருகலாம். அதேபோல் இறைச்சி, மீன் போன்ற உணவுகளில் இஞ்சியை அதிகமாகச் சேர்த்து உண்ணலாம்.

MOST READ: எப்போதும் எதற்காகவும் நம்பவே கூடாத ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? ஜாக்கிரதையா இருங்க

லவங்கப் பட்டை

லவங்கப் பட்டை

சிலோன் பட்டை என்ற ஒரு வகை பட்டை, பல்வேறு நன்மைகளைக் கொண்டது. வெப்பம், இரத்த ஓட்டம், கிருமி எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இதில் அடங்கியுள்ளன.

இதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கி இருப்பதால் தொண்டை தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. தண்ணீர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து தயாரிக்கபப்ட்ட நீர், தேநீர் போன்றவற்றில் லவங்கப் பட்டை சேர்த்து பருகலாம்.

பூண்டு

பூண்டு

ப்ரோபோலிஸ் போன்ற ஒரு சக்திமிக்க இயற்கை அன்டிபயோடிக் ஆகும் இந்த பூண்டு. பூண்டு பயன்படுத்துவதால் தொண்டை சுத்தம் செய்யப்பட்டு, அமைதியாக்கப் படுகிறது. வலியைக் குறைக்கிறது.

பொதுவாக பூண்டை பச்சையாக சாப்பிட வேண்டும். செரிமானத்தில் ஏதாவது சிக்கல் ஏற்படுமாயின், இது மாத்திரை வடிவில் கூட கிடைக்கிறது. அதை வாங்கி உட்கொள்ளலாம்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளுக்கு அழற்சி மற்றும் வலியைக் குறைக்கும் தன்மை உண்டு. மருந்துகளை தினமும் உட்கொண்டு அதன் பக்க விளைவுகளை சந்திப்பதைக் காட்டிலும் தினமும் மஞ்சள் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் அளிக்கக் கூடியது.

தேநீரில் மஞ்சள் சேர்த்து தயாரிக்கலாம் அல்லது வழக்கம் போல பாலில் மஞ்சள், மிளகு சேர்த்தும் குடிக்கலாம்.

MOST READ: குழந்தைங்க கீழே விழும்போது முதலில் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள் என்னென்ன?... தெரிஞ்சிக்கோங்க...

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

பல்வேறு உடல் உபாதைகளுக்கும் நல்ல பலன் தருவது ஆப்பிள் சிடர் வினிகர். வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து கொப்பளிப்பதால், கிருமிகளுடன் போராடி, தொண்டை பாதிப்பைப் போக்க உதவுகிறது. தொண்டையில் சேர்ந்திருக்கும் சளியை விடுவித்து குரல் வளையைத் தெளிவாக்குகிறது. காலையில் வெறும் வயிற்றில் இதனை பருகுவதால், தொண்டையில் உள்ள நச்சுக்கள் விலகி உங்கள் குரல்வளை பாதுகாக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The 9 Best Natural Remedies to Take Care of Your Voice and Throat

here we are suggest and giving some natural remedies to Care of Your Voice and Throat
Story first published: Tuesday, November 27, 2018, 11:12 [IST]
Desktop Bottom Promotion