Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
இப்படி இருக்கிற தலையில அடர்த்தியா முடி வளரணுமா இந்த விதைய எண்ணெயில போட்டு தேய்ங்க...
இன்றைய காலக்கட்டத்தில் கூந்தல் உதிர்வு என்பது எல்லோரும் சந்திக்க கூடிய மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. எல்லாருக்கும் ராபுன்சல் மாதிரி அழகான அடர்த்தியான கருமையான கூந்தல் வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் கூந்தல் உதிர்வு என்பது எல்லோரும் சந்திக்க கூடிய மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. எல்லாருக்கும் ராபுன்சல் மாதிரி அழகான அடர்த்தியான கருமையான கூந்தல் வேண்டும் என்பது கனவாகவே அமைகிறது. ஆனால் அப்படிப்பட்ட கூந்தல் சாத்தியமா?

கண்டிப்பாக இந்த ஒரு பொருளை மட்டும் கையில் எடுங்கள். இந்த எண்ணெய்யை கொண்டு தினமும் மசாஜ் செய்தாலே போதும் ஆரோக்கியமான கூந்தலை நீங்கள் பெற இயலும்.

கருஞ்சீரக எண்ணெய்
இந்த கருஞ்சீரக எண்ணெய் உங்கள் கூந்தலை வலிமையாக, அடர்த்தியாக வைக்க உதவுகிறது. எனவே இனி இநத எண்ணெய்யை உங்கள் கூந்தல் பராமரிப்பில் சேர்த்து கொள்ளுங்கள். சரி வாங்க இப்பொழுது இதன் பயன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பயன்கள்
இது கூந்தல் வளர்ச்சியை தூண்டி கூந்தலை வலிமையாகவும், அடர்த்தியாகவும் வைக்க உதவுகிறது.
ஆரோக்கியமான வேர்கால்களை உருவாக்கி கூந்தலின் வேர்களை வலிமையடைய செய்கிறது.
மேலும் இதன் அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் போன்றவை தலையில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது.
இது கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கிறது.
கூந்தல் உதிர்வை தடுக்கிறது
இளநரையை தடுத்து கூந்தலை கருமையாக்குகிறது.
கூந்தலை மென்மையாக அலைபாயச் செய்கிறது.
கூந்தல் பாதிப்பு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

கருஞ்சீரக எண்ணெய் தயார் செய்வது எப்படி?
தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய்
1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
11/2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய்
1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்
1 டேபிள் ஸ்பூன் தேன்

பயன்படுத்தும் முறை
ஒரு சிறிய பெளலில் கருஞ்சீரக விதைகள், தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் இவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இதனுடன் சிறுதளவு விளக்கெண்ணெய் சேருங்கள். இதன் அடர்த்தி கொஞ்சம் அதிகம் என்பதால் இந்த எண்ணெய் சற்று பிசு பிசுப்பு தன்மையுடன் காணப்படும். ஆனால் கூந்தலுக்கு மிகவும் நல்லது.
அடுத்து கொஞ்சம் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்
இந்த எண்ணெய்யை உங்கள் விரல்களில் எடுத்து தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து விட்டு 10-15 நிமிடங்கள் வைத்து இருந்து பிறகு எப்பொழுதும் போல் கூந்தலை சாம்பு கொண்டு அலசுங்கள்.
இந்த மசாஜ்யை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.

வேலை செய்யும் விதம்
கருஞ்சீரக விதை
இந்த கருஞ்சீரக விதை வேர்கால்களை தூண்டி வலிமையாக்குகிறது. கூந்தலுக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கிறது. இதனால் கூந்தல் வறண்டு போவது தடுக்கப்படுகிறது.

விளக்கெண்ணெய்
இது உங்கள் கூந்தல் மென்மையாக பளபளப்பாக இருக்க உதவுகிறது இது கூந்தல் பாதிப்பு, கூந்தல் உடைந்து போவது, பிளவுபட்ட முடிகள் இருப்பதை சரி செய்கிறது.

லெமன் ஜூஸ்
இதிலுள்ள விட்டமின் சி தலையில் கொலாஜன் அளவை சரி செய்கிறது. தலையின் pH அளவை சரி சமமாக்கி கூந்தல் உதிர்வை தடுத்து மற்றும் கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.
தேன் கூந்தலுக்கு தகுந்த ஈரப்பதத்தை கொடுக்கிறது. ஆரோக்கியமான கூந்தலுக்கு மருந்தாகிறது.



Click it and Unblock the Notifications