For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரயில்ல வந்தது ஆட்டுக்கறிதானாம்... இனிமேல் நம்ம எப்படி ரெண்டுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கிறது?

ஆட்டு இறைச்சிக்கும் நாய்க்கறிக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது என இங்கே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

By Mahi Bala
|

கடந்த வாரம் சென்னை எலும்பூர் ரயில் நிலையத்தில் ஜோத்பூா எக்ஸ்பிரசிலிருந்து வந்த பார்சலில் இருந்து 1500 கிலோ (கிட்டதட்ட 1 டன்) நாய் கறி கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது நம் எல்லோருக்கும் தெரியும். சென்னையில் எங்கு பார்த்தாலும் தள்ளுவண்டி கடை முதல் ஸ்டார் ஹோட்டல் வரை பிரியாணி தான் நம்முடைய மக்களின் விருப்ப உணவாக இருந்தது.

dog meat rumour: how to find the difference between dog and goat meat

இந்த நாய்க்கறி சர்ச்சைக்குப் பின், சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் பிரியாணி மற்றும் மட்டன் உணவு வகைகளை சாப்பிடுவதற்கு மக்கள் அச்சப்படுகிறார்கள். அதற்கான நாம் சாப்பிடாமலேயே இருக்க முடியாதல்லவா. சரி வெள்ளாட்டுக்கறிக்கும் நாய்க்கறிக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிக்கலாம். மேலும் நாய்க்கறி பற்றிய பல சுவாரஸ்யத் தகவல்களையும் இந்த கட்டுரையில் காணலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆட்டுக்கறி

ஆட்டுக்கறி

நாம் சா்பபிடும் அசைவ உணவுகளில் ஆட்டுக்கறி மிகவும் சுவையான ஒன்று. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலின் பல பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமைகிறது. முக்கியமாக வைட்டமின் பி1, பி2, பி3, பி9, பி12, வைட்டமின் கே மற்றும் ஈ நிறைந்திருக்கின்றன. கோலைன், புரதம், நல்ல கொழுப்பு, அமினோ அமிலங்கள் மற்றும் ஜிங்க, காப்பர், கனிமச் சத்துக்கள் ஆகியவையும் இருக்கின்றன. இதனால் இதயம் பலப்படும். கருத்தரிக்காமல் இருப்பவர்கள் சிக்கன் பிரியராக இருந்தால், அதை விட்டுவிட்டு ஆட்டிறைச்சியை சாப்பிட ஆரம்பியுங்கள்.

MOST READ: மச்சத்தின் மேல் முடி முளைத்தால் என்ன அர்த்தம்னு தெரியுமா? அந்த மரண அபாயம் பத்தி தெரிஞ்சிக்கோங்க...

நாய்க்கறி சர்ச்சை

நாய்க்கறி சர்ச்சை

சென்னையில் ஆட்டிறைச்சி என்ற பெயரில் நாய்க்கறி கோடப்படுவதாக அவ்வப்போது காற்றவாக்கில் செய்தியாக வந்து கொண்டிருந்தது போக, தற்போது சென்னையில் பிடிபட்ட இறைச்சி நாய்க்கறி என்று ரயில்வே துறை ஊழியர்கள் கிளப்பிவிட, அந்த இறைச்சியின் உரிமையாளர் இது ராஜஸ்தான் வெள்ளாட்டுக்கறி தான் என்றும் லஞ்சம் பெறுவதற்காகவும் தங்களுடைய வியாபாரத்தை முடக்கவுமே இந்த அதிகாரிகள் இப்படி செய்ததாகக் கூறுகிறார்கள். இந்நிலையில் கைப்பற்றப்பட்ட இறைச்சி முழுவதும் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பயம்

பயம்

நாய்க்கறி என்ற பெயரில் டன் கணக்கில் இறைச்சி கைப்பற்றப்பட்டதும் நாம் வெளியில் சாப்பிடுவது ஒருவேளை ஆட்டிறைச்சியாக இல்லாமல் நாய்க்கறியாக இருக்குமோ என்ற பயத்தில் உள்ளனர். அதனாலேயே சென்னையில் பிரியாணி மற்றும் அசைவ உணவுகள் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் உணவியல் நிபுணர்களோ எந்த இறைச்சியாக இருந்தாலும் நன்கு சுத்தம் செய்யப்பட்டு நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்றுதான் கூறுகிறார்கள்.

டிஎன்பிஎஸ்சி பாடத்தில்

டிஎன்பிஎஸ்சி பாடத்தில்

Image Courtesy

தமிழ்நாட்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான பாடத் திட்டங்களில் இந்த ராஜஸ்தான் மாநில வெள்ளாடுகள் பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, குஜராத், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கால்நடைப் பராமரிப்புக்கும் பால் உற்பத்திக்கும் பெயர் பெற்ற மாநிலங்கள் என்றும் குறிப்பாக ராஜஸ்தான், பீகார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநிலங்களில் வெள்ளாடுகள் மிகுதியாக இருப்பதாகவும் இந்த வகை வெள்ளாடுகள் மாமிசத்திற்காகவே வளர்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனுடைய தோல் ஏற்றுமதிக்காகவும் கழிவுகள் உரத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

நாய்க்கறி சாப்பிடும் நாடுகள்

நாய்க்கறி சாப்பிடும் நாடுகள்

உலக அளவில் ஒருசில நாடுகளில் மட்டுமே இந்த நாய்க்கறி உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. குறிப்பாக, வியட்நாம் நாய்க்கறி விற்பனையில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆண்டுக்கு சுமார் ஐம்பது லட்சம் நாய்கள் சாப்பிடுவதற்காக மட்டுமே கொல்லப்படுகின்றனவாம். அதேபோல் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, தென்கொரியா, லத்தீன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் நாய்க்கறி சாப்பிடும் பழக்கம் பரவலாகியுள்ளது.

MOST READ: இந்த பழத்தோட ஜூஸ் நீங்க அடிக்கடி குடிக்கிறீங்களா? அப்போ இது உங்களுக்குதான் படிங்க...

நாய்க்கறியால் வரும் நோய்கள்

நாய்க்கறியால் வரும் நோய்கள்

நாய்க்கறி சாப்பிடுவதால் மனிதர்களுக்கு சில நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. அதில் முதன்மையானது ரேபிஸ். நாய்களுக்கு வரக்கூடிய ரேபிஸ் நோய் அதை சாப்பிடும் மனிதர்களுக்கு எளிதில் பரவிவிடும் என்று கூறப்படுகிறது.

மேலும் பாக்டீரியாக்களால் உண்டாகின்ற ஆந்த்ராக்ஸ், லெப்டோஸ்பிரோசிஸ், காலரா போன்ற நோய்களும் ஏற்படும்.

நாய்க்கறி சாப்பிடும் பழக்கம்

நாய்க்கறி சாப்பிடும் பழக்கம்

Image Courtesy

நாய்க்கறியனது சுவை மிகுந்தது என்று உலக பாரம்பரிய உணவுகள் பற்றிய migrationology.com என்னும் இணைய தளத்தில் அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். அவர் ஆய்வுக்கான தென் சீனாவில் தங்கியிருந்த போது நாய்க்கறியை சுவைத்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும், நாய்க்கறி என்பது ரெட் மீட் என்னும் ஆட்டுக்கறிக்கும் மாட்டுக்கறிக்கும் உள்ள வித்தியாசம் எப்படி அதனுடைய வாசனையில் இருக்கிறதோ அதுபோலத் தான் நாய்க்கறியின் வாசனை தனியே அலாதியானது என்றும், மற்ற இறைச்சியைவிட கொழுப்பு நிறைந்ததாகவும் காணப்படும் என்கிறார். இந்த நாய்க்கறி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்றும் குறிப்பிடுகிறார்.

பெரும்பாலானோர் நாய்க்கறி சாப்பிடுவதை வெறுக்கிறார்கள். அருவருப்படைகிறார்கள். ஆனால் உண்மையிலேயே நாய்க்கறி அற்புதமான சுவை கொண்டது என சாப்பிட்ட அனுபவம் உள்ள வெளிநாட்டினர் குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவில் எங்கு கிடைக்கிறது?

இந்தியாவில் எங்கு கிடைக்கிறது?

இந்தியாவில் நாய்க்கறி சாப்பிடுவது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். ஆனாலும் நாகலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். திபெத்திய பர்மக் பழங்குடி மக்களின் சிறப்பு உணவாக நாய்க்கறி இருக்கிறது. அதேபோல் மிசோரம், மணிப்பூா், நாகலாந்திலும் நாய்க்கறி கிடைக்கிறதாம்.

நாய்க்கறியை விரும்பவர்கள் ஒன்றாக இணைந்து நாய்க்கறிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் கூட செய்திருக்கிறார்கள். வருடத்திற்கு 3000 மேற்பட்ட நாய்கள் கறிக்காக திருடப்படுவதும் கொல்லப்படுவதும் நாகலாந்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்படி என்ன இருக்கிறது அந்த கறியில் என்றால், அதில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் அடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

எப்படி கண்டுபிடிப்பது?

எப்படி கண்டுபிடிப்பது?

Image Courtesy

வெள்ளாட்டின் கொழுப்பு நல்ல பால் நிறத்தில் வெண்மையாகவே இருக்கும். ஆனால் நாய்க்கறியின் கொழுப்பு சற்று மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

வெள்ளாடு சற்று வேகமாக வெந்துவிடும். ஆனால் நாய்க்கறி ஆடு மற்றும் மாட்டுக்கறியை விடவும் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால் வேக நேரமெடுக்கிறது.

வெள்ளாட்டு இறைச்சி சற்றே இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தில் இருக்கும். ஆனால் நாய்க்கறியோ ரெட் மீட் வகையைச் சேர்ந்தது. மாட்டிறைச்சியைக் காட்டிலும் அடர்ந்த நிறமுடையது.

ஆட்டிறைச்சியில் எலும்புகள் வெந்ததும் மென்மையாகிவிடும். ஆனால் நாய்க்கறியில் எலும்புகள் நொறுங்காது. மிக உறுதியாக இருக்கும்.

அதேபோல் வாசனையில் நாய்க்கறியில் கொழுப்பு மிகுதி என்பதால் இறைச்சியின் மணம் மிக அதிகமாக இருக்கும். ஆனால் வெள்ளாட்டுக் கறியில் அந்த வெள்ளாட்டு ரோம வாசனையை சாப்பிட்டு விழுங்கும்போது உணர முடியும்.

இந்த வித்தியாசங்களை வைத்தே ஆட்டிறைச்சிக்கும் நாய்க்கறிக்குமான வித்தியாசங்களை நம்மால் கண்டுபிடித்துவிட முடியும்.

ஆட்டிறைச்சி வெந்ததும் லேசாக நிறம் மாறியிருக்கும். ஆனால் நாய்க்கறி பன்றி இறைச்சியைப் போன்று வெந்ததும் பிரௌன் கலருக்கு மாறிவிடும்.

MOST READ: ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவது தான்... ஏன் தெரியுமா?

சிறப்பு உணவு

சிறப்பு உணவு

Image Courtesy

சீனாவில் நாய்க்கறி சிறப்பு உணவாக்க கருதப்படுகிறது. அன்றாடம் சாப்பிடுகிற சிக்கன், மட்டனைப் போன்ற உணவு அல்ல நாய். சிறப்பான விசேஷ நாட்களில் நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுடன் நாய்க்கறியை சாப்பிட்டு அதன் சுவையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். மிகவும் மரியாதை மிகுந்த உணவாகக் கருதப்படுகிறது. நாய் சூப் மிகவும் பிரபலம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், நாய்க்கறியை பெரும்பாலும் நிறைய பூண்டும் மிளகாயும் சேர்த்து மண் பாத்திரங்களில் வைத்தே சமைக்கிறார்கள். அது அந்த இறைச்சிக்கு கூடுதல் சுவையைத் தருகிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

dog meat rumour: how to find the difference between dog and goat meat

here we are giving some tips to find the difference between dog and goat meat.
Desktop Bottom Promotion