For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இதுமாதிரி வெரிகோஸ் நரம்பு பிரச்னை இருக்கா?... இயற்கையான வழியில எப்படி சரிபண்ணலாம்?...

  |

  ஸ்பைடர் வெயின் அல்லது நரம்பு சிலந்தி என்று அழைக்கப்படும் இந்த நோயில் நரம்புகள், ஊதா நிறத்தில், சிகப்பு அல்லது நீல நிறத்தில் வீங்கி, ஒன்றொடு ஒன்று பின்னி, முறுக்கப்பட்ட மெல்லிய கோடுகள் போல் காட்சியளிக்கும்.

  health

  இந்த வீக்கமடைந்த நரம்புகளை தோலின் வெளிப்புறத்திலேயே தெளிவாக பார்க்க முடியும். கணுக்கால், கால்கள், முகம் மற்றும் தொடைப் பகுதியில் இன்னும் தெளிவாக இது தெரியும். முதியவர்களில் 30-60% பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் ஏற்பட பல விதமான காரணங்கள் உள்ளது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  காரணங்கள்

  காரணங்கள்

  பரம்பரை காரணங்கள், இரத்த குழாய்களின் வரலாறு, உடல் பருமன், கர்ப்பத்தை தடுக்க எடுத்து கொள்ளும் மாத்திரைகள், நீண்ட நேரம் நின்றபடியே வேலை செய்வது அதாவது சிகை அலங்காரம் செய்பவர்கள், நர்ஸ்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நின்றபடி வேலை செய்யும் தொழிலாளர்கள் ; கர்ப்ப காலங்கள், பூப்படையும் போது, இறுதி மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோனிய மாற்றங்கள், அல்லது அடி வயிற்றுப் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தும் கட்டிகள், மலச்சிக்கல், இறுக்கமான பெல்ட் போன்ற ஆடைகள் போன்றவைகளினாலும் இந்த ஸ்பைடர் வெயின் ஏற்படுகிறது.

  அறிகுறிகள்

  அறிகுறிகள்

  இதனுடைய பொதுவான அறிகுறிகள் தசைப்பிடிப்பு, உறக்கமின்மை, சோர்வு, அடிக்கடி நரம்புகள் துடிப்பது, எரியும் உணர்வு, கால்கள் கனப்பது போன்ற வலி, கால்களில் அடிக்கடி ஏற்படும் கூச்சம் போன்றவைகள் தான். ஆண்களை விட பெண்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் அல்லது கர்ப்ப காலத்தில் இந்த அறிகுறிகள் மிக தீவிரமாகி விடும். இந்த நோயினால் சில சமயங்களில் அல்சர் (ஆழமான புண்),வீக்கங்கள்,தோல் கருத்தல் மற்றும் நிறம் மாறி காணப்படுதல் போன்றவைகளும் ஏற்படும். இந்த நரம்பு சிலந்தி நோயில் இருந்து விடுபடுவது என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள். எளிமையான வீட்டு மருந்துகள் மூலமாகவே இதனை நன்கு குணப்படுத்தி விடலாம்.

  ஆரஞ்சு

  ஆரஞ்சு

  ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளதால் இது ஸ்பைடர் வெயின் நோய்க்கு சிறந்த மருந்தாக அமையும். விட்டமின் சி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவும் இரத்த நாளங்களை வலுப்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்டாக செயல்பட்டு இரத்த திசுக்களை பாதுகாக்கும். அதனால் ஆரஞ்சு பழங்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

  விளக்கெண்ணெய்

  விளக்கெண்ணெய்

  விளக்கெண்ணெயில் இரத்த ஓட்டத்தை தூண்டக்கூடிய மற்றும் அழற்சியை எதிர்க்க கூடிய பண்புகள் நிறைய உள்ளன. இரத்த ஓட்டம் தடுக்கப்பட்ட திசுக்களுக்கு இரத்தம் முறையாக செல்ல இது துணை செய்யும். அது மட்டுமல்லாமல் நரம்புகளில் இரத்தம் உறைவதை தடுத்து வீக்கங்களை குறைக்கும். சிறிது விளக்கெண்ணெய் எடுத்து, நாள்தோறும் இரண்டு முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

  MOST READ: உங்கள் மூளை சரியாக செயல்பட இன்றே இந்த உணவுகள் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்

  கொய்யா பழம்

  கொய்யா பழம்

  தினசரி கொய்யா பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் நரம்பு சிலந்தியிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். கொய்யா பழங்களில் விட்டமின் சி மற்றும் விட்டமின் கே அதிகம் இருப்பதால் இது ரத்த நாளங்களை வலுப்படுத்தவும், இரத்த திசுக்களில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவும் துணைபுரியும். நம்முடைய நரம்புகள், இரத்த நுண்குழாய்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றால் தினசரி உணவில் கொய்யா பழத்தை சேர்த்து கொள்ளுங்கள்.

  ஆப்பிள் சீடர் வினிகர்

  ஆப்பிள் சீடர் வினிகர்

  நரம்பு சிலந்தி பிரச்சினைக்கு ஆப்பிள் சீடர் வினிகர் பொதுவான மருந்து. ஒரு சுத்தமான துணியை ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து, பின் நன்றாக பிழிந்து நரம்பு சிலந்தியினால் பாதிக்கப்பட்ட பகுதியில் அரை மணி நேரம் வைக்க வேண்டும். நரம்புகள் அதனுடைய இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்த செய்முறையை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

  அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் நீரில் கலந்து, நாள்தோறும் இரண்டு முறை குடிக்க வேண்டும். உங்களிடம் வீரியம் மிகுந்த ஆப்பிள் சீடர் வினிகர் இருந்தால் அதை லோசனுடன் சமமாக கலந்து, ஸ்பைடர் வெயின்களில் தடவி இதயம் நோக்கி மேற்புறமாக நாள்தோறும் இரண்டு முறை மசாஜ் செய்து வர ஸ்பைடர் வெயின்கள் விரைவில் சரியாகும்.

  கடுகு எண்ணெய்

  கடுகு எண்ணெய்

  கடுகு எண்ணெய் நரம்புகளை பலப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை தூண்டவும் பயன்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை கடுகு எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

  முல்தானி மிட்டி

  முல்தானி மிட்டி

  காலம் காலமாக முல்தானி மிட்டி தோல் வியாதிகளை குணப்படுத்த பயன்படுகிறது. 1-3 ஸ்பூன் முல்தானி மிட்டி (தேவைக்கேற்ப) எடுத்து கொண்டு, நீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதை தினமும் உறங்கும் முன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, மறுநாள் காலை கழுவி வந்தால் ஸ்பைடர் வெயின் காணாமல் போய் விடும்.

  முட்டைகோஸ் மாவுகட்டு

  முட்டைகோஸ் மாவுகட்டு

  விட்டமின் A,B1,B2,C,E,K,மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு சத்துகள், கால்சியம், பாஸ்பரஸ், சல்பர், காப்பர் மற்றும் நார் சத்துகள் முட்டைகோஸில் அதிகமாக உள்ளது. தேவையான அளவு முட்டைகோஸ் இலைகளை கழுவி எடுத்து கொண்டு, அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். பின்னர் இதை பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, சுத்தமான துணி கொண்டு கட்டு போட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து இந்த கட்டினை பிரித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு நாள்தோறும் 2-3 முறை செய்ய வேண்டும்.

  அல்லது முட்டைகோஸ் இலையை நன்கு கழுவி எடுத்து கொண்டு, இலையின் மைய பகுதியில் உள்ள கடினமான நரம்புகளை நீக்கி, இலையை நேராக்கி ஸ்பைடர் வெயினால் பாதிக்கப்பட்ட பகுதியில் அந்த இலை காயும் வரை வைக்க வேண்டும். வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும் வரை இதை திரும்ப திரும்ப செய்து வர வேண்டும்.

  MOST READ: உடம்புல கொலஸ்ட்ரால் அதிகமாகிட்டே போகுதா? இந்த தேன் இஞ்சி பூண்டை சாப்பிடுங்க...

  சாமந்தி ( காலண்டுலா ஆஃபிஸினலிஸ்)

  சாமந்தி ( காலண்டுலா ஆஃபிஸினலிஸ்)

  சாமந்தி பூவில் நரம்பு சிலந்தியை குணப்படுத்தக்கூடிய ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் ட்ரைடர்பென்ஸ் அதிகமாக உள்ளது. ஒரு கைப்பிடி அளவு சாமந்தி பூ இதழ்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொண்டு, பின்னா் அந்த பூவிதழ்களை நன்கு அரைத்து, நரம்பு சிலந்தி பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு உறங்கும் முன் தடவி மறுநாள் கழுவி விட வேண்டும். நரம்பு சிலந்தி சரியாகும் வரை இதை செய்ய வேண்டும்.

  அல்லது இரண்டு கைப்பிடி அளவு நறுக்கிய சாமந்தி இதழ்கள், அதன் இலைகள் மற்றும் தண்டு ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 500 கிராம் பன்றிகொழுப்பு எடுத்து கொண்டு சூடாக்க வேண்டும். இதில் ஏற்கனவே நறுக்கி வைத்த சாமந்தி இதழ்களை சேர்த்து, முழுவதும் மூழ்குமாறு செய்ய வேண்டும். அடுப்பிலிருந்து பாத்திரத்தை எடுத்து மூடி போட்டு வைத்து விட வேண்டும். 24 மணி நேரம் கழித்து இதனை லேசாக சூடாக்கி, மெல்லிய துணியில் வடிகட்டி ஒரு ஜாடியில் ஊற்றி வைக்க வேண்டும். ஆறியதும் இது ஆயின்மென்ட் போல் ஆகிவிடும். நாள்தோறும் 2-3 முறை இதை தடவ வேண்டும்.

  ஹெலிகிரைசம் தாவர எண்ணெய்

  ஹெலிகிரைசம் தாவர எண்ணெய்

  ஹெலிகிரைசம் நறுமண எண்ணெய் விலை உயர்ந்ததாக இருந்தாலும் நரம்பு சிலந்திக்கு அருமருந்தாகும். 2-4 துளி எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்த்தால் விரைவில் இந்த நோயில் இருந்து விடுதலை அடையலாம்.

  ஒரு சொட்டு ஹெலிகிரைசம் தாவர எண்ணெய், 3-4 துளிகள் துளசி எண்ணெய், புன்னை (சிப்ரஸ்) மற்றும் கோலக்காய்(வின்டர் கிரின்) எண்ணெய் தலா ஒரு துளி எடுத்து கொண்டு இதனை கலந்து பாதிக்கப்பட்ட நரம்புகளில் மென்மையாக இதயம் நோக்கி மேற்புறமாக தடவி வர வேண்டும். இதை தினமும் செய்ய வேண்டும்.

  நறுமண எண்ணெய் கம்ப்ரஸ்

  நறுமண எண்ணெய் கம்ப்ரஸ்

  செவ்வந்தி எண்ணெய், கேரட் விதை எண்ணெய், லாவண்டர் எண்ணெய், செயின்ட் ஜான் வேர் கசாயம் ஆகியவற்றில் தலா மூன்று துளிகள் எடுத்து கொண்டு இதனை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். ஒரு மென்மையான துணியை இந்த கரைசலில் நனைத்து, அந்த துணியை வலி உள்ள இடத்தில் 2-3 மணி நேரம் வைக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் வலி குறையும். புன்னை எண்ணெய், எலுமிச்சை எண்ணெய், ஜீரேனியம் எண்ணெய், பம்ப்ளிமாஸ் (கிரேப் ஃப்ரூட்) எண்ணெய், ஜுனிபர் பெர்ரி, ஆரஞ்சு மற்றும் சாமந்தி எண்ணெய் போன்றவைகளும் இந்த நோயில் இருந்து விடுபட கை கொடுக்கும்.

  வல்லாரை

  வல்லாரை

  தற்போது மூலிகை மருத்துவத்தில், வல்லாரை சோர்வுகளை குறைக்க, வலி, வீக்கங்களை குறைக்கவும், கால் கனத்த உணர்வுகளை குறைக்கவும், நரம்புகளில் இருந்து திரவம் வெளியேறுவதை நிறுத்தவும் பயன்படுகிறது. வல்லாரை டீ நரம்பு சிலந்தி வியாதிக்கு நல்ல மருந்தாகும். இந்த டீயை தயாரிக்க ஒரு டேபிள்ஸ்பூன் வல்லாரை இலைகளை ஒரு கப் சுடுநீரில் போட்டு சுமார் 10-15 நிமிடங்களுக்கு மூடி வைத்து விட வேண்டும். பிறகு இதை வடிகட்டி தேவைப்பட்டால் தேன் கலந்து 2-3 முறை நாள்தோறும் குடிக்க வேண்டும்.

  பின் குறிப்பு : கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின் இதை குடிக்கலாம்.

  பைன் மர பட்டைகள்

  பைன் மர பட்டைகள்

  பைன் மர பட்டைகளில் "ஓலிகோமெரிக் பிராந்தோசைடினைன்" என்னும் பொருள் இருப்பதால் இது நரம்பு சிலந்திக்கு அருமருந்தாக செயல்படும். இந்த பட்டைகள் நமது இரத்த திசுக்களில் உள்ள பிரச்சனைகளை சரியாக்கி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். புதிய பைன் மர பட்டைகளை எடுத்து கொள்ள வேண்டும். கடற்கரை பகுதியில் உள்ள பைன் மர பட்டைகள் கிடைத்தால் இன்னும் சிறப்பு. இந்த பட்டைகளை நன்கு கழுவி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 8 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதில் இந்த பட்டைகளை போட்டு மூடி வைத்து, தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். பின்னர் இதை மெல்லிய துணியின் மூலம் வடிகட்டி, ஒரு ஜாரில் ஊற்றி வைத்து கொள்ள வேண்டும். பயன்படுத்திய இந்த பட்டைகளை பாத்திரத்தில் போட்டு 4 கப் தண்ணீர் சேர்த்து மறுபடியும் கொதிக்க விட வேண்டும். தண்ணீர் பாதியாக வற்றிய பின், வடிகட்டி ஏற்கனவே உள்ள ஜாரில் இதையும் சேர்த்து விட வேண்டும். இந்த மொத்த பைன் நீரையும் மறுபடியும் கொதிக்க விட்டு, 1/4 கப் அளவுக்கு வற்றிய பின் இதை, ஒரு ஜாரில் ஊற்றி வைத்து விட வேண்டும். நாள்தோறும் 2-3 முறை வலி உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.

  குறிப்பு : பைன் மர சாற்றை மாத்திரைகள் மூலமாக எடுத்து கொள்ளும் போது, ஒரு நாளுக்கு 45-360 மில்லி கிராம் அளவு அல்லது 50-100 மில்லி கிராம் அளவு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

  MOST READ: இந்த பழம் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அடுத்த முறை சாப்பிடறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க...

  திராட்சை விதை எண்ணெய்

  திராட்சை விதை எண்ணெய்

  திராட்சை விதை எண்ணெய் மற்றும் ஜொஜோபா எண்ணெய் தலா மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்து கொண்டு, இதை 8 துளிகள் எலுமிச்சை எண்ணெய் / புதினா எண்ணெய் / ஜீரேனியம் எண்ணெய் அல்லது நமக்கு பிடித்த ஏதேனும் ஒரு நறுமண எண்ணெயுடன் கலந்து கொள்ள வேண்டும். இதை நரம்பு சிலந்தியினால் பாதிக்கப்பட்ட கணுக்கால், கால்கள் அல்லது வலி உள்ள இடத்தில் நன்கு தடவி கீழிருந்து மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். அதாவது பாதத்தில் இருந்து கால்கள் நோக்கி செய்ய வேண்டும்.

  நாம் இந்த திராட்சை விதை எண்ணெயை மாத்திரை மாதிரியோ அல்லது கேப்ஸுல்கள் அல்லது சிரப் மாதிரி கூட எடுத்து கொள்ளலாம். நாள்தோறும் ஒரு வேளை 150 மி.கிராம் சாப்பிட வேண்டும் அல்லது ஒரு நாளுக்கு மூன்று வேளை 50 மி.கிராம் சாப்பிட வேண்டும். ஸ்பைடர் வெயினால் ஏற்படும் வலி, வீக்கம், கால் கூச்சல் மற்றும் கால் எரிச்சல் போன்றவற்றை இது குறைக்கும். அல்லது நேரடியாகவே நாம் திராட்சை விதைகளை சவைக்க வேண்டும் அல்லது திராட்சை விதைகளை பொடியாக்கி எடுத்து கொண்டு சூப்களில் கலந்து சாப்பிடலாம். இது கசந்தாலும் உடம்புக்கு மிகவும் நல்லது.

  குறிப்பு: இந்த மருந்தை கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும், இரத்த அடர்த்தியை குறைக்க மாத்திரை சாப்பிடும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும்.

  ஹார்ஸ் செஸ்நட்

  ஹார்ஸ் செஸ்நட்

  இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த, இந்த ஹார்ஸ் செஸ்நட் டானிக் போல செயல்படும். ஹார்ஸ் செஸ்நட்டில் இருந்து எடுக்கப்படும் சாறு, நரம்பு சிலந்திக்கு சிறந்த மருந்தாகும். இதில் 'எஸ்குலின்' எனப்படும் டாக்ஸிக் மூலப்பொருள் உள்ளதால் இதை பச்சையாகவோ அல்லது டீ போன்றோ சாப்பிட கூடாது. இது நச்சு தன்மை அற்றது. 300 மி.கிராம் அளவு ஹார்ஸ் செஸ்நட்டின் சாற்றை தினமும் இரண்டு முறை சாப்பிட வேண்டும்.

  குறிப்பு : இது குமட்டல், அரிப்பு, செரிமான பிரச்சினை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். உங்களுக்கு கல்லீரல்,சிறுநீரக பிரச்சினை, இரத்த போக்கு பிரச்சினை இருந்தாலோ அல்லது நீங்கள் இரத்த அடர்த்தியை குறைக்கும் மாத்திரைகள், இரத்த உறைவதை தடுக்கும் மாத்திரைகள், ஆன்டி பிளேட்லெட் மாத்திரை சாப்பிடுபவர்களாக இருந்தாலோ இந்த ஹார்ஸ் செஸ்நட்டை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் இதை தவிர்க்க வேண்டும்.

  பட்சர்ஸ் ப்ரூம்

  பட்சர்ஸ் ப்ரூம்

  நரம்புகளை சுருக்குவதன் மூலமும், வலுப்படுத்துவதன் மூலமும் இது நரம்பு சிலந்தியிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும். குறைந்தபட்சம் 300 மி.கிராம் அளவு பட்சர்ஸ் ப்ரூமை தினமும் சாப்பிட வேண்டும். அல்லது இதை டீ போல் தயாரித்து நாள்தோறும் 1-2 முறை குடிக்கலாம். இதை தயாரிக்க ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய பட்சர்ஸ் ப்ரூமை, கொதிக்கும் நீரில் போட்டு மேலும் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும்.

  ஜின்க்கோ பைலோபா

  ஜின்க்கோ பைலோபா

  ஜின்க்கோ பைலோபாவில் இருந்து தயாரிக்கப்படும் சாறு, இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவும், இரத்த திசுக்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் செல்லவும் துணைபுரியும். 40 மி.கிராம் அளவு ஜின்க்கோ பைலோபா சாற்றை தினமும் மூன்று வேளை எடுத்து கொள்ளலாம். அல்லது இதிலிருந்து தயாரிக்கப்பட்ட மாத்திரைகளையும் சாப்பிடலாம். பெரியவர்கள் தினமும் 120 மி.கிராம் அளவாவது கண்டிப்பாக எடுத்து கொள்ள பட வேண்டும்.

  குறிப்பு : உயர் ரத்த அழுத்தம் பிரச்சினை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

  பில் பெர்ரி

  பில் பெர்ரி

  பில் பெர்ரி சாறு இரத்த நுண்குழாய்கள் உறுதியாக இருக்கவும், புதிய இரத்த நுண்குழாய்கள் தோன்றவும் முக்கிய பங்கு வகிக்கிறது. 20-40 மி.கிராம் அளவு பில் பெர்ரி சாற்றை தினமும் மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

  MOST READ: செத்தும் கொடுத்தார் சீதக்காதி!! இவரோட உண்மைக் கதை தெரியுமா?

  விட்ச் ஹேசல் (உலர் இலை சாறு)

  விட்ச் ஹேசல் (உலர் இலை சாறு)

  விட்ச் ஹேசல் சாற்றில் பஞ்சை நனைத்து நேரடியாக நரம்பு சிலந்தி பாதிக்கப்பட்ட பகுதியில் தடவலாம். அதே போல் விட்ச் ஹேசல் மற்றும் ஹார்ஸ் டேல் என அழைக்கப்படும் மூலிகை செடியின் சாற்றையும் ஒன்றொடு ஒன்று கலந்து மசாஜ் செய்யலாம். இதற்கு மேல் சில துளிகள் ஈமு எண்ணெய் விட்டு தேய்க்க நரம்பு சிலந்தி சரியாகும். அல்லது விட்ச் ஹேசலை கொண்டு டீ தயாரித்தும் குடிக்கலாம்.

  ஹாவ்தோர்ன்

  ஹாவ்தோர்ன்

  ஹாவ்தோர்னிலிருந்து தயாரிக்கப்படும் சாற்றில் பயோஃபிளேவனைடுகள், விட்டமின் சி,சல்பர் மற்றும் ஜின்க் சத்துகள் உள்ளதால் இது நரம்பு சிலந்திக்கு சிறந்த மருந்தாகும். 200 மி.கிராம் அளவு இந்த சாற்றை தினமும் மூன்று வேளை சாப்பிட வேண்டும். இது டானிக் மற்றும் மாத்திரை வடிவங்களில் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் டீயில் இந்த நோய்க்கு நல்ல மருந்து. ஒரு டேபிள் ஸ்பூன் ஹாவ்தோர்ன் செடியின் மலர்களை, 1/2 கப் சுடுநீரில் கலந்து இந்த டீ தயாரிக்கலாம்.

  செவ்வந்தி டீ

  செவ்வந்தி டீ

  செவ்வந்தி டீயும் சரி, எண்ணெயும் சரி இரண்டுமே நரம்பு சிலந்தியை குணப்படுத்தக்கூடியது. இந்த டீ தயாரிக்க காய்ந்த செவ்வந்தி மலர்கள் 2-3 டேபிள்ஸ்பூன் எடுத்து கொண்டு இதனை ஒரு கப் சுடுநீரில் கலந்து பின்னர் மூன்று நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதை வடிகட்டி தேவைப்பட்டால் தேன் அல்லது எலுமிச்சை கலந்து குடிக்கலாம்.

  ரோஸ்மேரி

  ரோஸ்மேரி

  நரம்பு சிலந்தியினால் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ரோஸ்மேரியில் அதிகம் இருப்பதால் இது இந்த நோய்க்கு நல்ல மருந்தாக செயல்படும். இரத்தத்தை சுத்திகரிக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவும் இதன் சாறு பயன்படுகிறது.

  செய்ய வேண்டியவை :

  செய்ய வேண்டியவை :

  தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலை வலுப்படுத்தும் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உடற்பயிற்சிகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கால்களை எப்போதும் தூக்கிய நிலையிலே வைக்க வேண்டும். படுக்கும் போது அல்லது உறங்கும் போது கூட கால்களை உயர்த்தியவாறே உறங்க முயற்சிக்க வேண்டும்.

  உடல் எடை அதிகம் இருப்பது நரம்பு சிலந்தி பிரச்சனைக்கு முக்கிய காரணம். அதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும். பழங்கள், பச்சை காய்கறிகள், முழு கோதுமை உணவுகள், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  MOST READ: தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் நிகழும் மாற்றம் என்ன தெரியுமா!

  செய்யக்கூடாதவை

  செய்யக்கூடாதவை

  கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது. அதைப் போல் கணுக்கால் மேல் கணுக்கால் போட்டும் உட்கார்வதை தவிர்க்க வேண்டும். ஹை ஹில்ஸ் வைத்த செருப்புகளை அணியக்கூடாது. நீண்ட நேரம் நிற்பது அல்லது உட்கார்வதை தவிர்க்க வேண்டும். அப்படி நீண்ட நேரம் வேலை செய்யுமாறு சூழ்நிலை ஏற்பட்டால், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய இடைவெளி எடுத்து கொண்டு கொஞ்சம் தூரம் நடப்பது, உட்காரும் நிலையை மாற்றி உட்கார்வது, கொஞ்சம் நேரம் நிற்பது அல்லது ஸ்ட்ரேட்சிங் செய்வது போன்றவற்றை செய்யலாம்.

  நீண்ட நேரம் அமர்ந்து இருக்கும் போது, கால்களை நாற்காலி அல்லது ஸ்டூல் உதவியுடன் சிறிது உயர்த்திய நிலையிலேயே வைத்து கொள்வது சிறந்தது. இறுக்கமான ஆடைகளை அணிவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குடிப்பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை அறவே விட்டு விட வேண்டும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  21 Home Remedies to Get Rid of Spider Veins

  Spider veins are tiny purple, red, and blue swollen vessels that appear similar to a web of twisted and thin jagged lines.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more