Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
ஏன் பீட்ரூட் சாப்பிட்டதும் சிறுநீர் சிவப்பாக மாறுகிறது?
பீட்ரூட் உடல் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க உதவுகின்றது. சத்துக்கள் நிறைந்த இது உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன், நோயை தீர்க்கவும் பயன்படுகின்றது. அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
நம்முடைய முன்னோர்கள் அரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தனர். அவர்களின் ஆரோக்கியமான உணவுகளில் பீட்ரூட் முக்கியமான ஒன்றாக விளங்கியது.
மேழும் இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகின்றது. அத்தகைய சிறப்பு வாயந்த பீட்ரூடின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
பீட்ரூடில் குளோரின் இருப்பதால், இது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை அதிகரிக்கின்றது. மேழும் இதில் உள்ள ஒவ்வாமையை குறைக்கும் பண்புகள், பித்தப்பை, சிறுநீரகங்கள் மற்றும் நிணநீரை சுத்திகரிக்க உதவுகிறது.
பீட்ரூடில் அதிக அளவு ஊட்டச்சத்து காணப்படுவதால், இது நீரிழிவு நோயை குணப்படுத்த உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை பலப்படுத்துகின்றது. தூக்கம் பிரச்சினைகள், இரத்த சோகை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு கோளாறுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை குணப்படுத்தவும் இது உதவுகின்றது.

ஏன் சிறு நீர் சிவப்பாகிறது?
பீட்ரூட்டை உட்கொள்வதால் சிறுநீர் சிவப்பு நிறமாக மாறலாம். எனவே அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். பீட்ரூட்டின் சிவப்பு நிறத்திற்கு காரணம் அதிலுள்ள பீடாசையனின் ஆகும்.
பீட்டாசயனைனை கல்லீரலால உடைக்க முடியாமல் போகும்போது அவை சிறு நீரில் கலந்து சிவப்பாக மாறுகிறது. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்சினோஜன்களுக்கு எதிராக செல்களை பாதுகாக்கின்றது.

புற்று நோயை தடுக்கும் :
பீட்ரூட் ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடெண்டாகவும், நோய் அழற்சி எதிர்ப்பு காரணியாகவும் பயன்படுகின்றது. இதிலுள்ள ஒரு வகையன நார் பொருட்கள், பெருங்குடல் புற்று நோயை தடுக்க உதவுகின்றது.

2. கல்லீரல் தொற்றுகளை அழிக்கின்றது:
பீட்ரூடில் உள்ள பீடானைன் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. இது பீட்ரூடின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்றாகும்.

3. மாதவிடாய் கோளாறுகள்
பீட்ரூடில் அதிக அளவில் இரும்பு சத்து உள்ளது. இது உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகமாக்கும். எனவே இது மாதவிடாய் கோளாறுகள் மற்றும் மாதவிடாய் அறிகுறிகளின் சிகிச்சைக்கு உதவுகிறது.

5. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றது:
பீட்ரூட்டில் அதிக அளவில் உள்ள நைட்ரேட் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது. ரத்த அழுத்தத்தை குறைக்க தினந்தோறும் இரண்டு டம்ளார் பீட்ரூட் சாறு அருந்துவது நல்லது.

6. அழற்சியை கட்டுப்படுத்துகின்றது:
பீட்ரூட்டில் உள்ள ஆன்டி ஆண்டியாக்ஸிடண்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க்து வீக்கத்திற்கு எதிராக போராட உதவுகிறது.

7. மலச்சிக்கலை தீர்க்கின்றது:
பீட்ரூட் சாறு செரிமானம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவுகின்றது. மேலும் இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றது. இந்த சாதகமான செரிமானம் சார்ந்த விளைவுகள் மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகின்றது.

8. இரத்தசோகையை குணப்படுத்துகின்றது :
பீட்ரூடில் அதிக அளவில் இரும்பு சத்து உள்ளது. எனவே இது இரத்த சிவப்பணுக்கள் அதிகரித்து இரத்த சோகையை தடுக்கிறது.

9. தோல் சார்ந்த நன்மைகள்:
பீட்ரூட்டில் நம்ப முடியாத அளவில் ஃபோலேட் உள்ளது. இது ஒரு அற்புதமான வயது அதிகரிப்பை எதிர்க்கும் காரணியாகும். எனவே இது தோல் பிரச்சினைகள் தீர்க்க உதவுகிறது.

10. மனநிலையை அதிகரிக்கிறது:
பீட்ரூட் சாற்றில் அதிக அளவில் பீடைன் மற்றும் டிரிப்தோன் உள்ளது. இது மனதிற்கு அமைதி அளிக்கின்றது. எனவே இது மன அழுத்த சிகிச்சைக்கு உதவுகின்றது.

12. பிறப்பு குறைபாடுகளை தடுக்கிறது:
இதில் அதிக அளவில் ஃபோலேட் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது. எனவே இதை கர்பிணிப் பெண்கள் மிதமான அளவில் உட்கொள்ளுமாறு அறிவுருத்தப்படுகின்றார்கள். ஃபோலேட் மற்றும் ஃபோலிக் அமிலம் பிறப்பு சார்ந்த குறைபாடுகளை தீர்க்க உதவுகின்றது.



Click it and Unblock the Notifications