எதிர்காலத்தில் நமது உடலில் இருந்து இந்த 10 பாகங்கள் மறைந்து போய்விடும்!

Posted By:
Subscribe to Boldsky

காலங்களின் மாற்றத்தில் பனிமலைகள், காடுகள் போன்ற இயற்கைகள் மட்டும் தான் மாறிக் கொண்டிருக்கிறது என்று நம்புவது மிகப்பெரிய முட்டாள் தனம். நமது மனித உடலில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் என்றாவது அறிந்தது உண்டா?

அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இன்றைய தலைமுறையினரிடம் ஞான பல் என்பது காணாமல் போய்வருகிறது என்பதை சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

இதுப்போல நமது உடலில் வரும் காலத்தில் மறைந்து போகலாம் என கருதப்படும் உடல் பாகங்கள் என்னென்ன என்று இந்த கட்டுரையில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஞான பல்!

ஞான பல்!

கடின உணவுகளை நன்கு மென்று சாப்பிட உதவும் பற்கள் இவை. ஆனால், நாம் இதை சரியாக பயன்படுத்தாமல் வந்த காரணத்தால் ஞான பற்கள் பலர் மத்தியில் முளைப்பது இல்லை என அறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் காலங்களில் ஞான பற்கள் முற்றிலுமாக மறைந்து போகும் நிலை உண்டாகலாம் என அறியப்படுகிறது.

உடல் முடி!

உடல் முடி!

சிலரது தேகத்தில் முடி அதிகமாக இருக்கும், சிலரது தேகத்தில் முடி குறைவாக இருக்கும். முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்களோடு ஒப்பிடுகையில் இந்த காலத்து மக்களுக்கு தேகத்தின் முடியின் அளவு குறைவாக தான் இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த உடல் முடி முற்றிலும் மறைந்து போகலாம் என கருதப்படுகிறது.

கூடுதல் காது தசைகள்

கூடுதல் காது தசைகள்

ஏறத்தாழ அனைத்து விலங்குகளும் அவற்றின் காதினை அசைக்க இந்த தசை தான் உதவுகிறது. இதனால் தான் சில நபர்கள் தங்கள் காதுகளை அசைத்து காண்பித்து அபூர்வமாக ஏதோ செய்வதை போல மகிழ்வார்கள். ஆனால், வரும் காலத்தில் மனிதர்கள் மத்தியில் இந்த தசை மறைந்து போக வாய்ப்புகள் உண்டு.

கழுத்து விலா எலும்பு!

கழுத்து விலா எலும்பு!

இந்த எலும்பு 0.5% மக்களிடையே தான் இருக்கிறது என்றும், சிலருக்கு வலது புறமும், சிலருக்கு இடது புறமும் உடலில் காணப்படுகிறது என கூறுகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னெவென்றால் பறவைகளுக்கு இன்னும் இந்த எலும்பு இருக்கிறது. ஆனால், இந்த எலும்பு பகுதி மனிதர்கள் மத்தியில் வரும் காலத்தில் முற்றிலுமாக மறைந்து போகலாம் என கருதப்படுகிறது.

Image Credits: Commons Wikimedia

ஆண்களின் நிப்பிள்!

ஆண்களின் நிப்பிள்!

ஆண், பெண் இருவருக்கும் நிப்பிள் இருக்கிறது. பெண்களுக்கு இது குழந்தைகளுக்கு பாலூட்ட உதவுகிறது. ஆனால், ஆண்கள் உடலில் இது தேவையற்ற ஒரு அங்கமாக தான் காணப்படுகிறது. வரும் காலத்தில் ஆண்களின் நிப்பிள் மறைந்து போகலாம் என கருதப்படுகிறது.

பால்மாரிஸ் தசை!

பால்மாரிஸ் தசை!

ஏற்கனவே 11% மக்களிடம் இந்த தசை இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தசை தான் மேலே ஏற, தொங்க கைகளுக்கு வலுவை அளிக்கிறது. இந்த தசை வரும் காலத்தில் மனிதர்கள் மத்தியில் மறைந்து போகலாம்.

13வது விலா எலும்பு!

13வது விலா எலும்பு!

மனிதர்கள் மத்தியில் 12 செட் விலா எலும்புகள் காணப்படுகின்றன. ஆனால், சிம்பான்சி, கொரில்லாவிடம் 13 செட்டுகள் இருக்கிறது. மனிதர்களிலேயே 8% பேரிடம் இந்த கூடுதல் ஒரு செட் விலா எலும்பு காணப்படுவதாக தகவல் அறியப்படுகிறது. வரும் காலத்தில் இந்த 13வது செட் விலா எலும்பு முற்றிலும் மறைந்து போகலாம்.

அலைபரப்பி பில்லி தசைகள்!

அலைபரப்பி பில்லி தசைகள்!

விலங்குகள் மத்தியில் அவை தங்களை இதமாக உணர பயன்படுத்திக் கொள்ள உதவும் வகையில் அமைந்திருக்கிறது இந்த அலைபரப்பி பில்லி தசைகள். இது மனிதர்களிடமும் இருக்கிறது. இதை தான் நாம் கூஸ் பம்ப்ஸ் என கூறிவருகிறோம்.

Image Credit: spatialexperiments.wordpress.com

கால் விரல்கள்!

கால் விரல்கள்!

அடுத்த மனித பரிணாம மாற்றத்தில் கால் விரல்கள் உடலை இருந்து மறைந்து போகலாம் என கருதப்படுகிறது. கால் விரல்கள் பல வகைககளில் மனிதர்களுக்கு பயன்பட்டு வருகிறது. ஆனால், அதை பயனப்டுத்தாதிருப்பது இவற்றை உடலில் இருந்து மறைய செய்யலாம்.

மூன்றாம் கண்ணிமை!

மூன்றாம் கண்ணிமை!

கண்களின் கார்னரில் ஒரு நுண்ணிய மடிப்பு பகுதி இருக்கும். குப்பைகள் அண்டாதிருக்க இது உதவுகிறது. வரும் காலத்தில் இதுவும் உடலில் இருந்து மறைய வாய்ப்புகள் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Did You Know? These 10 Parts of the Human Body That Will Disappear in the Future!

Did You Know? These 10 Parts of the Human Body That Will Disappear in the Future!
Story first published: Tuesday, October 3, 2017, 14:00 [IST]