இந்த 4 பொருட்கள் இருந்தா, தாங்க முடியாத உங்க மூட்டு வலி காணாமல் போகும்! எப்படி தெரியுமா?

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

நம் முழங்காலில் உள்ள மூட்டு, இரண்டு பக்க எலும்புகளுக்கு இடையே பந்து போல உருண்டு கொண்டு இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இரு எலும்புகளுக்கும் இடையே உள்ள சவ்வு சேதம் அடைவதால், மூட்டு இயங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இது வலி, வீக்கத்தில் தொடங்கிக் கடைசியில் நடக்க முடியாத நிலையை உருவாக்கிவிடுகிறது.

Try This 4-Ingredient Remedy To Eliminate Joint Pain & Gout

முன்பெல்லாம் 65 வயதுக்கு மேல் எட்டிப்பார்த்த மூட்டு தேய்மானம், இப்போது 35 வயதை கடக்கும்போதே தோன்றி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. மூட்டு வலிக்கு முதுமை மட்டுமே காரணம் அல்ல. பாரம்பரியத் தன்மையாலும், 80 சதவிகிதம் பேருக்கு மூட்டுவலி ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. முன்பெல்லாம் இந்தப் பிரச்னை 40 - 50 வயதினரையே அதிகம் பாதிக்கும். ஆனால், இப்போது இளம் வயதினரும் மூட்டு வலியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.

குறிப்பாக் அதிக உடல் எடை உடையவர்கள், மாடிப்படி அடிக்கடி ஏறி இறங்கும் பழக்கமுடையவர்கள், தரையில் அமர்ந்து எழும் பழக்கமுடையவர்கள், இந்திய முறை கழிப்பிடங்கள் உபயோகிப்பவர்கள், கால்சியம் வைட்டமின் பற்றாக்குறையுள்ளவர்கள், முழங்கால் மூட்டு தேய்மானம் எனும் நோயால் பாதிக்க வாய்ப்புள்ளது.

இதுபோன்ற வலியின்றி, நாம் நலமுடன் வாழவும் வழி உள்ளது. சரியான வாழ்க்கை முறை, உணவு முறை,உடற்பயிற்சி போன்றவைகளில் அக்கறை கொள்ள வேண்டும். அதையும் மீறி வலி வந்துவிட்டால் முறையான சிகிச்சை பெற்று மூட்டு வலிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூட்டு வலி அறிகுறிகள் :

மூட்டு வலி அறிகுறிகள் :

காலை எழுந்ததும் வாந்தி, மலச்சிக்கல், அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். சிறுநீரகத்தில் ஏதாவது தொற்றுநோய் ஏற்பட்டால் கூட இந்த மூட்டில் வீக்கம் ஏற்படலாம்.

அவ்வளவு ஏன், நம் ஈறுகளிலோ தொண்டையிலோ பாதிப்பு ஏற்பட்டால் உடனே அதை எதிர்கொள்ள உடல் நோய் எதிர்ப்பு செல்களை தோற்றுவிக்கும். அவை அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகி நமது திசுக்களுக்கு எதிராகவே செயல் புரியும். அவ்வாறு மூட்டில் வந்து தங்கி வலியை ஏற்படுத்தும்.

சாப்பிடக் கூடாத உணவுகள் :

சாப்பிடக் கூடாத உணவுகள் :

சோளம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, ஓட்ஸ், கேழ்வரகு, தக்காளி, பால் மற்றும் பால் பொருட்கள், மிளகு, சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, அதிகாரம், ஆல்கஹால், முட்டை, வேர்க்கடலை, அதிக சர்க்கரை, வெண்ணெய், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி... இதெல்லாம் மூட்டுவலியை அதிகப்படுத்தற உணவுகள். ஆகவே அவற்றை குறைந்த அளவு சாப்பிட்டால் மூட்டுவலியை தவிர்க்கலாம்.

சாப்பிட வேண்டிய உணவுகள் :

சாப்பிட வேண்டிய உணவுகள் :

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளும் மூட்டுக்கு நல்லது. ஆளிவிதைகள் பாதாம், சாலமன் மீன்கள் போன்றவற்றில் ஒமேகா அதிகம் இருக்கிறது. வலியோட வீக்கமும் சேர்ந்திருந்தா, தினம் இஞ்சியை எடுத்துக் கொள்வதால் நல்ல பலன் தரும்.

இயற்கை வைத்தியம் :

இயற்கை வைத்தியம் :

உங்களுக்கு மூட்டு வலி மற்றும் கெளட் (குறுத்தெலும்பு வீக்கம்) பிரச்சினை இருக்கா? அதற்கு இந்த இயற்கை முறை உங்களுக்கு நல்ல தீர்வளிக்கும்.

இதில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் வெள்ளரிக்காய் ஜூஸ் ஆகும் . இந்த வெள்ளரிக்காய் ஜூஸில் நிறைய அல்கலைன் அடங்கி இருப்பதால் மூட்டுகளில் தேங்கி இருக்கும் யூரிக் அமில படிகத்தை இது கரைக்கிறது.

இந்த ஜூஸை குடிக்கும் போது சிறியதாக மூட்டுகளில் வலி ஏற்படும். இதற்கு காரணம் அங்கே தேங்கியுள்ள நச்சுக்களை இந்த ஜூஸ் வெளியேற்றுவதன் அறிகுறியாகும்.

மேலும் இந்த ஜூஸில் செலரி மற்றும் இஞ்சி இருப்பதால் மூட்டுகளை சுத்தப்படுத்தும் போது அழற்சி ஏற்படுவதையும் இப்பொருட்கள் தடுக்கிறது.

இந்த இயற்கை முறை ரெசிபி உங்கள் மூட்டு வலி மற்றும் கெளட் போன்ற யூரிக் அமில படிக தேக்கத்திற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

1 மீடியம் வடிவம் வெள்ளரிக்காய்

1 கொத்து செலரி

1 லெமன்

1 அங்குலம் இஞ்சி வேர்

 செய்முறை :

செய்முறை :

இந்த ஜூஸை தயாரிக்கும் முன் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பாதி லெமன் மற்றும் இஞ்சி வேரை பயன்படுத்தி ஜூஸ் தயாரிக்கவும்.

குடிக்கும் முறை :

குடிக்கும் முறை :

இந்த ஜூஸை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால் உங்கள் மூட்டு வலி வீக்கம் மற்றும் கெளட் பிரச்சினை உடனடியாக குணமாகும். உங்கள் பிரச்சினை சரியாகும் வரை இந்த முறையை பின்பற்றுவது உங்களுக்கு நன்மை அளிக்கும்.

வெள்ளரிக்காய் நன்மைகள்:

வெள்ளரிக்காய் நன்மைகள்:

சமீபமாக வந்த ஆய்வறிக்கைகளில் வெள்ளரிக்காயை எடுத்துக் கொள்வதால் மூட்டு வலி குணப்படுத்துவதாக தெரியவந்துள்ளது. வெள்ளரியில் சோடியம், கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இருக்கிறது. இது உடல் எடையையும் குறைக்க உதவுகிறது.

 செலரி :

செலரி :

சோடியம் உப்பு அதிகமாய் இருப்பதால் இது மூட்டு வீக்க நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலைகளையும் மெல்லிய தண்டுகளையும் சாறாக்கி அருந்த வேண்டும். இந்த முறையில் அருந்தினால் மூட்டு வீக்கம் குணமாகும்.

மூட்டு வலிக்கு எலுமிச்சை :

மூட்டு வலிக்கு எலுமிச்சை :

எலுமிச்சை மூட்டுகளில் தேங்கும் யூரிக் உப்பை கரைக்கிறது. வீக்கங்களை குறைக்க எலுமிச்சை ஒரு அற்புத மருந்தாகும். வலி நிவாரணியகவும் செயல்படுகிறது.

இஞ்சி :

இஞ்சி :

இஞ்சி வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. வலியைப் போக்கி நிவாரணம் தருகிறது. இஞ்சி மற்றும் எலுமிச்சை கலவையை தொடர்ந்து உட்கொள்ளும்போது மூட்டு வலி காணாமல் போகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Try This 4-Ingredient Remedy To Eliminate Joint Pain & Gout

Try This 4-Ingredient Remedy To Eliminate Joint Pain & Gout
Story first published: Monday, October 16, 2017, 13:48 [IST]
Subscribe Newsletter