For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொட்டாச் சிணுங்கி பெண்ணிற்கு தரும் மருத்துவ நன்மைகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை, மற்றும் மார்பகக்க் கட்டியை போக்க தொட்டாசிணுனியை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

|

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவு பொருட்களை கொண்டு பயனுள்ள குறிப்புகளை பார்த்திருக்கிறோம்.

அவ்வகையில் இன்று தொட்டாச் சிணுங்கியைப் பற்றி பார்க்கலா. தொட்டாசிணுங்கியை விளையாட்டுக்காகவும். கவித்துவமாகவும் நாம் பயன்படுத்தியிருக்கிறோம்ம். ஆனால் அது மிக அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

பெண்களுக்கு மார்பகத்தில் ஏற்படும் கட்டிகளை போக்க தொட்டாசிணுங்கி எவ்வகையில் உதவுகிறது என தெரியுமா?
தொட்டா சிணுங்கி, மஞ்சள், பூண்டு ஆகியவை மருந்தாகிறது.

தொட்டா சிணுங்கியை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் மார்பக கட்டியை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். அதன் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மார்பக கட்டியைக் கரைக்கும் முறை :

மார்பக கட்டியைக் கரைக்கும் முறை :

தொட்டா சிணுங்கி ஒருபிடி எடுத்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி காலை, மாலை குடித்துவர மார்பக கட்டி கரையும்.

பற்று போடுதல் :

பற்று போடுதல் :

தொட்டா சிணுங்கியை பசையாக்கி கட்டிகள் இருக்கும் இடத்தில் மேல்பூச்சாக போட்டு 2 மணி நேரத்துக்குபின் கழுவிவர மார்பக கட்டிகள் கரையும்.

 மருத்துவ நன்மைகள் :

மருத்துவ நன்மைகள் :

தொட்டா சிணுங்கியின் தண்டு பகுதியில் முட்கள் இருக்கும். இளம் சிவப்பு பூக்களை கொண்ட இதை தொட்டவுடன் இலைகள் சுருங்கி கொள்ளும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புத மூலிகை. இதன் காய்கள், இலைகள், பூக்கள் பயனுள்ளதாக விளங்குகிறது.

கிருமி நாசினி :

கிருமி நாசினி :

வீக்கத்தை கரைத்து வலியை குறைக்கும் தன்மை கொண்டது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அகற்றும் தன்மை உடையது.

கருப்பை பாதுகாப்பு :

கருப்பை பாதுகாப்பு :

உள் அழற்சியை போக்கும். கருப்பையில் ஏற்படும் வீக்கம், வலியை சரிசெய்யும். வெள்ளைபோக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்தக்கசிவுக்கு மருந்தாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Medicinal properties of touch me not plant for women

Medicinal properties of touch me not plant for women
Story first published: Friday, March 24, 2017, 16:52 [IST]
Desktop Bottom Promotion