ஆண்களை அதிகம் தாக்கும் நோய்கள்!

Posted By: Aashika
Subscribe to Boldsky

மருத்துவ உலகில் பல்வேறு நோய்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது. வாழ்க்கைமுறை மாற்றம், உணவுப்பழக்கம்,சூழல் பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்படும் போது ஏற்படும் நோய்கள் ஒரு பக்கம் என்றால் நோய் பாதிப்புகளில் ஆண்களை மட்டும் அதிகம் தாக்கும் நோய்களைப் பற்றிய ஒரு அறிமுகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 டிஎம்டி :

டிஎம்டி :

டச்சினி மஸ்குலர் டிஸ்ட்ரபி (Duchene Muscular Dystrophy) எனப்படும் ஒரு வகை நரம்பு தசை சிதைவு நோய் ஆண் குழந்தைகளையே அதிகமாக தாக்குகிறது. நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்வது, மரபணு குறைபாடுகள் காரணமாக இந்நோய் ஏற்படும். ஆண்களிடம் பொதுவாக ஒரு "எக்ஸ்", ஒரு "ஒய்" குரோமோசோம் உள்ளன. "எக்ஸ்" குரோமோசோம்கள் சிதைவுறும் போது இந்நோய் உருவாகிறது.

Image Courtesy

 ஹீமோபீலியா :

ஹீமோபீலியா :

இதுவும் எக்ஸ் க்ரோமோசோம்கள் பாதிக்கப்பட்டால் ஏற்படும். இவர்களுக்கு காயம் ஏற்பட்டால் ரத்தக்கசிவு இருந்து கொண்டே இருக்கும். ரத்தம் உறையாது. குறிப்பாக மூட்டு பகுதிகளில் காயம்பட்டால், ரத்தக்கசிவு ஏற்படுவதுடன் உடனடியாக பெரிதாக வீங்கி விடும். மரபணுவில் ஏற்படும் பாதிப்பு என்பதால், ஹீமோபிலியா நோய் உண்டாவதில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உண்டு. நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.

அல்சைமர் :

அல்சைமர் :

அறுபது வயதிற்கு பிறகு ஆண்களை அதிகம் தாக்கும் நோய் இது. நாளுக்கு நாள் மறதியை அதிகரித்துக் கொண்டேயிருக்கும் என்பதால் தக்க சமயத்தில் கண்டறிந்து சிகிச்சையளிகக் வேண்டியது அவசியம்.

அதிகம் உணர்சிவசப்படுவர் :

அதிகம் உணர்சிவசப்படுவர் :

ஆண்களின் உடலில் பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரான் வயதாக வயதாக குறைய ஆரம்பிக்கும். இதனால் அவர்களுக்கு உடலுறவில் அதிக நாட்டம் இருக்காது. இதன் விளைவாக அதிகமாக உணர்ச்சிவசப்படுவர்.

 புரோஸ்டேட் புற்றுநோய் :

புரோஸ்டேட் புற்றுநோய் :

ஆண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் ஒன்று இது. அவர்களது புரோஸ்டேட் சுரப்பியில் பாதிப்பு உண்டாவதால் சிறுநீர்தொற்று, கிட்னி பாதிப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

இதயநோய் :

இதயநோய் :

40 வயதிற்கு மேல் ஆண்களை தாக்குகிற நோய்களில் இதய நோய்க்கு முக்கிய இடமுண்டு. மன அழுத்தம், தூகக்மின்மை, உடல் பருமன் போன்றவைகளால் தான் இது ஏற்படுகிறது.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

இந்தியாவில் ஆண்களை அதிக தாக்கும் முக்கிய நோய்களில் முதலிடம் வகிப்பது சக்கரை வியாதி. 40 களிலேயே சர்க்கரை வியாதியின் அறிகுறிகள் தென்படுகிறது. அதனைத் தொடர்ந்து சர்க்கரை நோயால் டயாபடிக் ரெட்டினோபதி எனப்படும் கண்பார்வை இழப்பு, கால்கள் செயலிழக்கும் பிர்ச்சனைகள் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: diabetes
English summary

List Of Diseases That Should Affect Men

List Of Diseases That Should Affect Men
Story first published: Tuesday, July 11, 2017, 15:45 [IST]