7 நாட்கள் 7 வகை பத்தியம்!! நீங்களே ஆச்சரியப்படும்படி அற்புதங்கள் நடக்கும்!! எப்படி?

Posted By: Gnaana
Subscribe to Boldsky

உடலையும் மனதையும் வளமாக்கும் உண்ணா நோன்பை எப்படி இருப்பது?!

"நோயிலே படுப்பதென்ன, நோன்பிலே உயிர்ப்பதென்ன!"

வியாதிகள் ஏற்படும்போது சோர்ந்திருப்பவன், உண்ணாநோன்பிருக்கும் போது, தெம்புடனும், புத்துணர்வோடும் இருக்கிறானே என்று அதிசயிக்கிறார் தேசியக்கவி!

"பசித்தபின் புசி!, உண்டது செரித்தபின், அடுத்த வேளை உணவு!" என்பது பெரியோர் வாக்கு!

உண்ட உணவு செரிக்கவும், செரித்த உணவின் ஆற்றல் உடலில் சேரவும், சில காலஇடைவெளிகள் இருக்கின்றன. இந்த காலஇடைவெளிகளை மனதில் வைத்தே, உணவருந்தும் நேரத்தை வகுத்தனர், ஆயினும், செரிமானம் ஆனபின் மட்டுமே, அடுத்த வேளை உணவு என்பதில் தீர்க்கமாக இருந்தனர். எனினும் இன்றுபோல செரிமான பாதிப்புகள் முன்னோருக்கு ஏற்பட்டதில்லை, ஆணாக இருந்தாலும்சரி, பெண்ணாக இருந்தாலும்சரி, அவர்களின் தினசரி உடலுழைப்பில், உண்ட உணவுகள் யாவும் எளிதில் செரிமானமாகிவிடும்.

Follow this 7 days fast. Just check the miracle that happens in you.

இன்றைய நிலை அப்படி இல்லை. உண்ட உணவு செரிமானம் ஆனாலும், ஆகாவிட்டாலும், பசித்தாலும், பசிக்காவிட்டாலும், உணவுநேரத்தில் சாப்பிட்டே ஆகவேண்டும், பிறகு நேரம் கிடைக்காது என்பது ஒருபுறம், மற்றொன்று உணவை உண்ணாமல், வீட்டுக்கு எடுத்துச்சென்றால், திட்டுவதற்கு ஒருகாரணம் கிடைத்து, கூடுதல் அர்ச்சனை வீட்டில் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் அந்த இரணகளத்தில், மதியஉணவே, இரவு உணவாகக்கூடிய அபாயமும் உள்ளதையறிந்தே, அவர்கள் பசிக்காவிடினும் சாப்பிட்டுவிடுவர். விளைவு?

உடலில் செரிமானமாகாமல் மேலும் உணவு சேர்கையில், உடல் உறுப்புகளின் இயக்கம் பாதிப்படைந்து அதனால், உடலில் கெட்டவாயு சேரும், இரத்த ஓட்டம் தடைப்படும், உடல் அதிகசூடாகும் மேலும், மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மாதமிருமுறை விரதம், மாதமொருமுறை பத்திய சாப்பாடு எதனால் கடைபிடித்தனர்?

அனைத்து மதங்களிலும் விரதங்கள் பல வழிமுறைகளில் இருந்தாலும், அவற்றின் நோக்கம் ஒன்றே, பட்டினி கிடப்பது என்பதே, சமயங்களின் ஒரு வழிபாட்டு தத்துவமாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சந்நியாசிகளும் சம்சாரிகளும் எதற்காக பட்டினி கிடக்கின்றனர்?

சந்நியாசிகளும் சம்சாரிகளும் எதற்காக பட்டினி கிடக்கின்றனர்?

மனிதஉடல் உண்டானதில் இருந்து, இறக்கும்வரை ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறது, உடலுக்கு ஒய்வு, உறக்கம் என்றால், மனதுக்கும் அதுவே, ஆயினும் அது தற்காலிகமான ஓய்வுதான் மேலும், அந்த சமயத்திலும் உடலில் இயக்கங்கள் மெதுவாக நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கும்.

வியாதிகள் அணுகாமல் உடல் வியாதி எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க, உடலை பட்டினியில் கிடத்துவர்.

பட்டினி கிடப்பதால் உடலுக்கு ஏதாவது பாதிப்புகள் உண்டா?

பட்டினி கிடப்பதால் உடலுக்கு ஏதாவது பாதிப்புகள் உண்டா?

இதனால், உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைத்து, உடல் நலம் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை. எனினும், இரத்த அழுத்த பாதிப்பு மற்றும் சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள், உடல் நலமான பின், விரதம் இருத்தல் நலம்.

 உண்ணாநோன்பை எப்படி கடைபிடிக்கவேண்டும்?

உண்ணாநோன்பை எப்படி கடைபிடிக்கவேண்டும்?

உடல் உறுப்புகளின் இயக்கத்துக்கு சற்றே ஒய்வளிக்க அக்காலத்தில் கடை பிடித்த உண்ணாவிரதத்தில் பலவகைகள் காணப்படுகின்றன. எந்த உணவும் எடுத்துக் கொள்ளாத கடுமையான விரதம், தண்ணீர் மட்டும் பருகும் மிதமான விரதம், ஒருவேளை உணவு மட்டும் எடுத்துக்கொள்வது, பழச்சாறு மட்டும் பருகி இருக்கும் விரதங்கள் என்று பலவிதம் இருந்தாலும், தண்ணீர் மட்டும் பருகிக்கொண்டு இருக்கும் விரதம், பரவலாக காணப்படுகிறது.

 முதல் நாள் :

முதல் நாள் :

முற்காலங்களில் உண்ணாநோன்பு என்பது ஒருநாள் மட்டும் இருப்பதல்ல, ஒருவாரம் இருப்பதாக இருந்தது. முதல்நாள் வாழை, மாம்பழம் போன்ற பழவகைகளை மட்டும் சாப்பிட வேண்டும்.

இரண்டாவதுநாள்

இரண்டாவதுநாள்

ஆரஞ்ச், திராட்சை போன்ற பழங்களின் சாறை மட்டும் அருந்த வேண்டும்,

மூன்றாம்நாள்

மூன்றாம்நாள்

மூன்றாவது நாளில் வெறும் தண்ணீர் மட்டும் பருக வேண்டும்.

நான்காம்நாள்

நான்காம்நாள்

தண்ணீர் கூட அருந்தாமல் முழு பட்டினி இருக்க வேண்டும்.

 ஐந்தாம்நாள்

ஐந்தாம்நாள்

ஐந்தாம் நாள் ரிவர்சில் ஆரம்பிக்க வேண்டும்.. தண்ணீர் மட்டும் அருந்த வேண்டும்

6 மற்றும் 7 ஆம் நாட்கள் :

6 மற்றும் 7 ஆம் நாட்கள் :

ஆறாம்நாள் பழச்சாறு குடிக்க வேண்டும். ஏழாம்நாள் பழங்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு இருந்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

படித்தவுடன் மலைப்பாக இருக்கிறதா?! இன்றைய வாழ்வியல் சூழலில் இதெல்லாம் சாத்தியமா, ஒருநாள் ஒரு வேளை விரதம் இருப்பதே பெரும்பாடு, இதில் ஒருவாரமா என்ற கேள்வி மனதில் எழும், நியாயமானதே! ஆயினும் இதன் காரணத்தை நாம் அறியலாம்.

நன்மைகள் :

நன்மைகள் :

முதல் மூன்று நாட்களில் உடலின் கழிவுகள் முற்றிலும் வெளியேறி, உடல் ஆற்றல் மிகும், உடல் சக்தி அதிகரித்தபின், பசி எடுக்காது, பின்னர் மீண்டும் இயல்பாக உணவு உண்ணும் நிலைக்கு திரும்பலாம், இதன்மூலம் உடலும் மனமும் புத்துணர்வடைவதை, நாம் உணர முடியும்!

தெம்பு :

தெம்பு :

உடலில் புதுதெம்பும் சக்தியும் தோன்றி, மனதில் மகிழ்ச்சியையும் அமைதியையும் உண்டாக்கி, செயல்களிலும் பேச்சிலும் நேர்மறை கருத்துகள் பிரதிபலித்து, மற்றவர்களுக்கும் புத்துணர்வையும் உற்சாகத்தையும் அளிக்கும்.

நேர்மறை எண்ணம் :

நேர்மறை எண்ணம் :

விரதம் என்பது உடலை மட்டும் பட்டினி போடுவதல்ல, அத்துடன் மனதையும் பட்டினி போட்டு எந்தஎண்ணங்களும் அதில் தோன்றவிடாமல், புலன்களை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மனதை ஒருநிலையில் செலுத்தி, இயற்கையை சிந்திக்கவும், இறைவனை துதிக்கவும் செய்கையில், அங்கே, ஒருமித்த சிந்தனையில் யாவும் வசமாகும்.

விரதம் இருந்துவிட்டு, பின்னர் உணவை ஒரு வெட்டுவெட்டுவதும், விரதம் இருக்கும்வேளைகளில் பிறருடன் வாக்குவாதம் செய்வதும், பொய் வஞ்சனை செய்வதுமான செயல்களை மேற்கொள்வோர், விரதம் இருக்காமல் இருப்பது நல்லது, அவர்கள் மேற்கொள்ளும் விரதம், விழலுக்கு இரைத்த நீர் போல, நன்மையளிக்காது என்பர், பெரியோர்!

சிறுநீரக கோளாறு குணமடையும் :

சிறுநீரக கோளாறு குணமடையும் :

மாதமிருமுறை அல்லது மாதமொருமுறை உண்ணாவிரதம் இருப்போரின் உடல்நலம் சீராகிறது, இரத்த அழுத்த பாதிப்புகள், இதயக் கோளாறுகள் சிறுநீரக கோளாறுகள் வயிற்று பாதிப்புகள் போன்றவை, குணமாகி, அவர்களின் உடல்நலம் வலுவடைகின்றன.

கொழுப்பு குறையும் :

கொழுப்பு குறையும் :

மேலும், வயிற்றிலுள்ள கழிவுகள், தேவையற்ற கொழுப்புகள் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும், உடல்எடை சீராகும். உடலின் செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு கிடைத்து, சுவாசம் சீராகி, இரத்த ஓட்டம் மேம்பட்டு, இரத்தம் இயல்பாகும். உடல் தசைகள் தளர்வாகி, வியாதிகளை ஏற்படுத்தும் கிருமிகள் அழிந்துவிடும். மனம் தெளிவாகி, நற்சிந்தனைகள் தோன்றும்.

எனக்கு விரதம் இருக்க விருப்பம்தான், ஆனால் முடியவில்லையே!

எனக்கு விரதம் இருக்க விருப்பம்தான், ஆனால் முடியவில்லையே!

வருந்த வேண்டாம், வறியோர் சிறியோர் என மனிதரை பேதப்படுத்தாமல், எல்லோரிடமும் அன்புகொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகள் அளித்து, அவர்களின் சிரமங்களை, தனதாக எண்ணி, உதவிகள் செய்துவந்தால், விரதங்கள் இருந்த பலனை அடையலாம், என சமயநூல்கள் உரைக்கின்றன.

பிறர் துன்பம்கண்டு மனம்வாடி, தாமாக உதவிகள்புரிந்து, இறை சிந்தனையில் வாழ்வோரை, வியாதிகள் அணுகாது, அணுகினாலும், வந்தசுவடு தெரியாமல் வெளியேற இறைவன் அருள்வார், என்கின்றன புராணங்கள்.

எனினும், நான் இன்னும் அந்த அளவுக்கு மனம் பக்குவப்படவில்லை, விரதம் இருக்கவும் முடியவில்லையே, என்ன செய்வது என்கிறீர்களா?

உங்களுக்காக ஒரு எளிய விரதம்,இதோ!

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்."

ஏற்கெனவே உண்ட உணவு செரித்ததை உணர்ந்து, அதன்பின் உண்டுவர, உடலுக்கு மருந்து எதுவும் தேவையில்லை, உடல் நலமுடன் விளங்கும் என்கிறார், வள்ளுவப் பெருந்தகை!. உண்மைதானே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Follow this 7 days fast. Just check the miracle that happens in you.

Follow this 7 days fast. Just check the miracle that happens in you.