தினமும் இந்த ஜூஸ் குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் மேஜிக் என்ன எனத் தெரியுமா ?

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

உங்களுக்கு ஏற்கனவே தெரியும் மஞ்சள் ஒரு மகத்தான மருந்துப் பொருள் என்பது. ஆமாங்க இதில் அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆன்டி கேன்சர் பொருட்கள் போன்றவைகள் உள்ளன. தினமும் கொஞ்சம் மஞ்சளை உங்கள் உணவுப் பழக்கத்துடன் சேர்த்து கொண்டால் உங்களுக்கு எண்ணிலடங்காத நன்மைகள் கிடைக்கும்.

மஞ்சளானது அல்சீமர் நோய், அழற்சி பிரச்சினை, வாதம், டைப் 2 டயாபெட்டீஸ், PMS மற்றும் மாதவிடாய் வலி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

உங்கள் உடல் நலத்திற்காக சிறந்த முறைகளை நீங்கள் தேடி கொண்டு இருந்தால் உங்களுக்கு இந்த மஞ்சள் ஜூஸ் மிகவும் சிறந்தது.

Add A Daily Dose Of Fresh Turmeric Juice To Your Diet & Notice The Magic!

இந்த ஜூஸில் மற்ற பொருட்களை காட்டிலும் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் புற்று நோய் வளர்வதற்கான டிஎன்ஏ மியூட்சினை தடுத்து புற்று நோய் வராமல் செய்கிறது.

இந்த பொருள் மேலும் நுரையீரல் நோய், மூளை பிரச்சினை மற்றும் நிறைய வகையான கேன்சர்கள் குடல் மற்றும் கல்லீரல் புற்று நோய் போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது.

எனவே இக்கட்டுரையில் மஞ்சள் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகளை பற்றி பார்க்க போறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் :

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல் :

இந்த ஜீஸ் பலவிதமான நோய்களுக்கு எதிராக நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி மற்றும் ஃப்ளு காய்ச்சலுக்கு இந்த மஞ்சளில் ஆன்டி வைரல் பொருட்கள் இருப்பதால் சிறந்தது. தூங்குவதற்கு முன் தினமும் ஒரு கப் மஞ்சள் ஜூஸ் குடித்து வந்தால் மிகவும் நல்லது.

 சளி மற்றும் இருமல் தொல்லை விடுபட :

சளி மற்றும் இருமல் தொல்லை விடுபட :

இது ஒரு ஆயுர்வேத முறைப்படி சளி மற்றும் இருமல், மூச்சுப் பிரச்சினை போன்றவற்றை போக்கும் வழியாகும். மூச்சுப் குழல் பகுதிகளிலும், நுரையீரல், நெஞ்சு போன்றவற்றில் உள்ள சளிகளை வெளியேற்றி அதற்கு காரணமான நுண்ணுயிரிகளையும் விரட்டி அடிக்கிறது.

சீரண பிரச்சினை :

சீரண பிரச்சினை :

மஞ்சள் உங்கள் சீரண சக்தியை அதிகரித்தல், வயிறு வீக்கம் சரி செய்தல் , வாயு, நெஞ்செரிச்சல் சரி செய்தல் ,பித்த பையில் பைல் அதிகரித்தல், கொழுப்பை கரைத்தல் போன்றவற்றை செய்கிறது . தினமும் மஞ்சள் கலந்த ஜீஸ் குடித்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

கல்லீரல் டானிக்

கல்லீரல் டானிக்

மஞ்சளில் உள்ள குர்குமின் பொருள் கல்லீரல் ஈரல் அழற்சி மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் போன்றவற்றை சரியாக்குகிறது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை பித்த நீரை அதிகரித்து வெளியேற்றுகிறது.

இரத்தத்தை சுத்தப்படுத்துதல்

இரத்தத்தை சுத்தப்படுத்துதல்

மஞ்சள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஒரு சிறந்த பொருளாகும். இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுததுகிறது.

மாசு மருவற்ற சருமம்

மாசு மருவற்ற சருமம்

மஞ்சள் சருமம் மிருதுவாகுவதற்கும், சரும கோடுகள், சருமம் வயதாகுதல் போன்றவற்றை சரியாக்குகிறது. இந்த மஞ்சள் ஜூஸை தினமும் குடித்தால் கல்லீரல் புள்ளிகள், தழும்புகள் மற்றும் சரும வெடிப்புகள் மறைந்து முகம் பளிச்சென்று மாறும்.

தனிச்சை நோயெதிர்ப்பு நோய்கள் :

தனிச்சை நோயெதிர்ப்பு நோய்கள் :

இந்த மஞ்சள் ஜூஸ் உங்களுக்கு விடுதலை தருகிறது. பல காரணங்களால் நமது நோயெதிர்ப்பு சக்தி செல்கள் நமது உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு எதிராகவே செயல்படுவதால் ஆட்டோ இம்னியூ டிஷூஸ் வருகிறது. எனவே மஞ்சள் இந்த நோயிலிருந்து காப்பதோடு மட்டுமில்லாமல் அந்த நோயின் ஆணி வேரையும் கண்டறிந்து களைகிறது.

என்னங்க இந்த மஞ்சள் கலந்த ஜூஸை நீங்களும் தினமும் குடித்து உங்கள் உடலை நோயில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Add A Daily Dose Of Fresh Turmeric Juice To Your Diet & Notice The Magic!

Add A Daily Dose Of Fresh Turmeric Juice To Your Diet & Notice The Magic!
Story first published: Wednesday, July 26, 2017, 8:00 [IST]