புற்று நோய் பாதிப்புகளைத் தரும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!!

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

நமது உடலின் ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவில் தான் பெரும் பங்கு இருக்கிறது. பலவிதமான உணவுகளை நாம் உண்ணுகிறோம். இயற்கையாக கிடைக்கும் உணவு பொருளில் பலவிதமான தயாரிப்பு முறைகள், பதப்படுத்துதல் , சேகரித்து வைத்தல் போன்ற செயல்களினால் அதன் இயற்கை தன்மையில் மாற்றம் ஏற்பட்டு நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.

இவற்றுள் சில பொருட்கள் புற்று நோயை வரவழைக்கும் தன்மை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றன. ஆகையால் இந்த முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.

புற்று நோய் தாக்கத்தில் உணவிற்கு பெரும் பங்கு உள்ளது. உணவை பற்றிய பொதுப்படையான ஒரு தெளிவு நமக்கு ஏற்படும்போது, தீங்கு விளைவிக்கும் உணவுகளை நம்மால் அடையாளம் காண முடியும்.

Cancer causing foods to avoid

நாவிற்கு சுவையூட்டும் பல உணவுகளுக்கு புற்றுநோயை உண்டாக்கக்கூடிய தன்மைகள் உண்டு என்பது அதிர்ச்சி அளிக்க கூடிய செய்தியாகும். ஆகவே அத்தகைய உணவுகளை தவிர்த்து வளமான வாழ்க்கையை நமக்கும் நமது சந்ததிக்கும் கொடுக்க வேண்டும். புற்று நோயை உண்டாக்கக் கூடிய உணவுகளின் பட்டியலை இங்கே கொடுத்துள்ளோம். அவற்றை பற்றி அறிந்து கொண்டு அந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பதப்படுத்தப்பட்ட இறைச்சி:

பதப்படுத்தப்பட்ட இறைச்சி:

இறைச்சியை பதப்படுத்துவதில் பல வகைகள் உள்ளன. இறைச்சியை பதப்படுத்த இரசாயன சேர்க்கைகள், உப்பு, புகை, போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

பதப்படுத்த பட்ட இறைச்சிகளாகிய பன்றி இறைச்சி, சாசேஜ் , பன்றி தொடைக்கறி போன்றவற்றை புதிதாக தோன்ற வைக்க இந்த பதன பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சோடியம் நைட்ரைட் மற்றும் நைட்ரெட் ஆகியவை பதன பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. இவை புற்று நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த பதன பொருட்கள் மூலம் கணைய புற்று நோய் மற்றும் பெருங்குடல் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

புகையூட்டப்பட்ட மற்றும் எரியூட்டப்பட்ட உணவுகள்:

புகையூட்டப்பட்ட மற்றும் எரியூட்டப்பட்ட உணவுகள்:

புகை ஊட்டப்பட்ட மற்றும் பார்பிக்யூ உணவுகள் பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஐட்ரோ கார்பன்களை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதி பொருள் கேன்சரை அதிகரிக்கிறது.

எரியூட்டப்பட்ட உணவுகளை உண்பதால் கணைய புற்று நோய் அதிகரிக்கும் வாய்ப்பு 60% உள்ளதாக கூறப்படுகிறது.

அதிக வெப்பத்தில் சமைக்க படும் உணவுகளில் ஹெட்டிரோசைக்ளிக் அமின்கள் என்னும் வேதிப்பொருள் உற்பத்தியாகிறது. குடல் புற்று நோய் வரும் வாய்ப்புகள் இந்த வேதி பொருளில் அதிகம் உள்ளது.

 மரபணு மாற்றப்பட்ட உணவுகள்:

மரபணு மாற்றப்பட்ட உணவுகள்:

உயிர்தொழில்நுட்ப (Biotechnology) முன்னேற்றத்தால் மரபணு மாற்றப்பட்ட பொருட்களை உணவில் பயன்படுத்த தொடங்கினோம்.

இரசாயனங்கள் மூலம் மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், மீன்கள் மற்றும் கோழி, வாத்து போன்றவற்றால் மனிதர்களுக்கு ட்யூமர் வரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

மரபணு மாற்றப்பட்டன தக்காளி, உருளை கிழங்கு, சோயா, சால்மன் வகை மீன்கள் போன்றவற்றால் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகையால் உணவு பொருட்களை வாங்கும் போது மரபணு மாற்றம் செய்யப்படாத உணவுகள் என்று குறிப்பிட்ட உணவுகளை மட்டும் வாங்குவது நன்மை அளிக்கும்.

இனிப்பு பானங்கள் :

இனிப்பு பானங்கள் :

இனிப்பூட்டப்பட்ட பானங்களாகிய சோடா போன்றவற்றில் சுத்தீகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் நிறமூட்டி ,பதனப்பொருள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

வாரத்திற்கு 2 முறைக்கு மேல் சோடாவை பருகுகிறவர்களுக்கு 87% செரிமான மண்டலத்தில் புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பானங்களில் இருக்கும் அதிகமான சர்க்கரை புற்று நோய் செல்களை உருவாக்குகின்றன. இந்த பானங்களில் இருக்கும் இரசாயனமாகிய கேரமல் புற்று நோயை உருவாக்குகிறது.

செயற்கையான இனிப்புகள் அடங்கிய உணவு:

செயற்கையான இனிப்புகள் அடங்கிய உணவு:

இந்த நாகரீக காலத்தில் மனிதர்கள் உடல் எடை விஷயத்தில் அதிக கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து இயற்கை சர்க்கரை இல்லாத உணவுகளை மற்றும் பானங்களை பயன்படுத்துகின்றனர். இவற்றில் செயற்கை சர்க்கரையை சேர்க்க படுகிறது.

இந்த செயற்கை சர்க்கரை, சுத்தீகரிக்கப்பட்ட சர்க்கரையை விட அபாயகரமானது.

செயற்கை இனிப்பூட்டிகளான அஸ்பர்ட்டாம், சச்சரைன் மற்றும் சுக்ரலோஸ் போன்றவை புற்று நோய் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்குகின்றன.

பூச்சிக்கொல்லிகள்:

பூச்சிக்கொல்லிகள்:

இயக்கையாக உற்பத்தியாகும் காய்கறிகள் மற்றும் பழங்களை பூச்சி கொல்லிகளை பயன்படுத்தி அசுத்தம் செய்கின்றனர்.

மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஆப்பிள் , திராட்சை, ஸ்டராபெர்ரி , ஆரஞ்சு போன்றவற்றின் 90% உற்பத்தியில் அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.

பூச்சிக்கொல்லிகள் மனித இனத்திற்கு நச்சுக்களை ஏற்றுகிறது மற்றும் இதில் இருக்கும் வேதி பொருட்கள் கேன்சரை ஊக்குவிக்கின்றன.

பூச்சி கொல்லிகள் பயன்படுத்தாத ஆர்கானிக் பழங்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது.

பொரித்த உணவுகள் :

பொரித்த உணவுகள் :

எண்ணெய்யில் பொரித்த உணவுகளாகிய சிப்ஸ்களில் அகிரிலமிட் என்ற இரசாயனம் உள்ளது. இது புற்று நோயை உண்டாக்குகிறது.

பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யில் ஆல்டிஹைட் என்னும் நச்சு வெளியாகிறது. இதனால் புற்று நோய் உண்டாகிறது.

பல பாஸ்ட் புட் கடைகளிலும் பல முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களைத்தான் பிரென்ச் ப்ரை போன்றவை செய்ய பயன்படுத்துகிறார்கள்.

புற்று நோய் அபாயத்தில் இருந்து நம்மை காக்க மேலே குறிப்பிட்ட உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். செயற்கையாக சுவையூட்டப்பட்ட, நிறமூட்டப்பட்ட உணவுகளை வாங்கி சுவைக்காமல், வீட்டிலேயே செய்த சுத்தமான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cancer causing foods to avoid

Cancer causing foods to avoid
Subscribe Newsletter