மலச்சிக்கலை குணப்படுத்த வேண்டுமா? இந்த யோகாவை செய்தால் முடியும்!!

Written By:
Subscribe to Boldsky

மலச்சிக்கல் நம்மில் பெரும்பாலோனோர் அவதிப்படுபவர்கள் இருக்கிறார்கள். தினமும் மலச்சிக்கலிலேயே காலைக் கடன் கழிப்பது குடல்களில் வீக்கம், காயத்தை உண்டாக்கி வேறு விதமான பிரச்சனைகளை உண்டாக்கும்.

அதோடு பைல்ஸ் போன்ற பிரச்சனைகளும் வந்தால் அது பெரும் தலைவலியாகிவிடும். மேலும் அறுவை சிகிச்சை வரை கொண்டு சென்று விடும்.

எனவே காலைக் கடனை உபத்திரவம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உணவு உண்பதை எவ்வளவு முக்கியமோ அன்றாட கழிவுகளையும் வெளியேற்றுவது மிக முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் என்ன?

காரணம் என்ன?

சிலருக்கு போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, அதிக கொழுப்பு உணவுகளை உண்பது, நார்சத்து உணவுகளை தவிர்ப்பது ,அது தவிர பரம்பரை ரீதியாகவும் இந்த பிரச்சனை உண்டாகும்.

யோகா :

யோகா :

யோகா என்ற அற்புத சக்தியில் மலச்சிக்கலை போக்க பலவிதமான ஆசனங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் கடி சக்ராசனா.

சில நிமிடங்கள் இந்த ஆசனத்தை செய்ய ஒதுக்குங்கள். இதனால் உங்கள் குடலில் நெகிழ்வுத்தன்மை உண்டாகும். மலச்சிக்கல் தடுக்கப்படும்.

கடி சக்ராசனா :

கடி சக்ராசனா :

கடி என்றால் இடுப்பு பகுதி என்று பெயர். சக்ரா என்றால் சக்ரம் அல்லது சுற்றுதல் என்று பெயர். இடுப்பை சுழன்று செய்யப்படுவதால் சமஸ்கிருதத்தில் கடி சக்ராசனா என்று பெயர் பெற்றது.

செய்முறை :

செய்முறை :

முதலில் தடாசனாவில் நில்லுங்கள். நேராக நிமிர்ந்து முதுகை வளைக்காமல் நிற்கவும். ஆழ்ந்து மூச்சை விட்டபடி, தொடருங்கள்.

பின்னர் கைகளை நீராக நீட்டவும் உள்ளங்கைகள் ஒன்றோடொன்று பார்க்கும்படி நீட்டவும்.

ஆழ்ந்து மூச்சை விட்டபடி உடலை வலப்பக்கம் திருப்பவும். கால்கள் நேராக இருக்க வேண்டும். இடுப்பு வரை மட்டும் வலப்பக்கம் திருப்பவும்.

செய்முறை -2 :

செய்முறை -2 :

பின்னர் வலது கையையையும் உடல் திருப்பிய அதே திசையில் நீட்டுங்கள். இடது கையை மடக்கி வலது பக்கம் நோக்கி படத்தில் இருப்பது போல் வைத்திருங்கள்.

இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்த பின் இயல்பிற்கு வரவும். இதே போல் இடது பக்கமும் செய்யுங்கள். இவ்வாறு இரண்டு முறை செய்து பாருங்கள்.

பலன்கள் :

பலன்கள் :

மலச்சிக்கலை குணபடுத்தும், உடல் எடையை குறைக்க உதவும். சுவாச பாதிப்புகள் சீராகும். மன அழுத்தம் குறையும். முதுகிற்கு நெகிழ்வுத்தன்மை தரும். இடுப்பிற்கு பலம் தரும்.

குறிப்பு :

குறிப்பு :

அடிவயிறு பிரச்சனைகள்,முதுகு தண்டுவட பாதிப்பு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Katichakrasana to relieve constipation

Do this katicjakrasana to relieve constipation problem, and stimulate abdominal parts
Story first published: Tuesday, October 4, 2016, 13:45 [IST]
Subscribe Newsletter