Latest Updates
-
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..
இந்த குளிர்காலத்துல ஆஸ்துமா, இருமல் னால அவதிப்படுறீங்களா? இந்த ஒரு மருந்தை சாப்பிட்டு பாருங்க!!
குளிர்காலத்தில் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் உண்டாகும்.அதுவும் ஆஸ்துமா,இருமல் ஆகியவற்றால் குழந்தைகள்,பெரியவர்கள் பாதிக்கப்படுவார்கள்.அவர்களுக்கான பாட்டி வைத்தியமுறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
ஆஸ்துமா குணப்படுத்த முடியாத நாள்பட்ட பிரச்சனை. குளிர்காலத்தில் மிக அதிகமாகிவிடும். இதனால் மூச்சு விடாதபடி சளி நுரையீரல் முழுவதும் கட்டிக் கொண்டு, சுவாசிப்பதில் பாதிப்பை தரும்.
இதற்கு ஆஸ்துமா அட்டாக் என்று பெயர். ஆனால் எப்போதுமே ஆஸ்துமா வராமல் கட்டுக்குள் வைக்க முடியும்.

இயற்கை வைத்தியத்தில் இது சாத்தியம். பக்க விளைவுகள் இல்லை நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்குகிறது. கிருமிகளை அழிக்கும். எப்படியென பார்க்கலாம்.

தேவையானவை :
உலர் திராட்சை - 10 கிராம்
இஞ்சி தூள் - 10 கிராம்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய நெல்லிக்காய் - 2

தயாரிக்கும் முறை :
ஒரு சுத்தமான பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த நெல்லிக்காயை போட்டு கொதிக்க விடவும். நெல்லிக்காயின் வெளிப்புறம் வேகும் வரை வைக்கவும்.

தயாரிக்கும் முறை :
பின்னர் அடுப்பை அணைத்து நீர் ஆறிய பின் நெல்லிக்காயிலிருக்கும் விதைகளை நீக்கி அவற்றை மிக்ஸியில், அரைத்துக் கொள்ளுங்கள்.

தயாரிக்கும் முறை :
அரைத்த நெல்லிக்காயில் இப்போது உலர் திராட்சைகளையும் சேர்த்து அரையுங்கள். நன்றாக பேஸ்ட் போல் ஆனதும், அதனுடன் இஞ்சி தூளையும் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றுங்கள். பின்னர் இதனை ஒரு சுத்தமன கன்டெய்னரில் எடுத்துக் கொள்ளுங்கள். மருந்து ரெடி.

எப்படி சாப்பிட வேண்டும்?
தினமும் மூன்று வேளைக்கு 5 கிராம் அளவு இந்த மருந்தை சாப்பிடுங்கள். இது சாப்பிடும்போது அதிக தாகம் எடுக்கும். ஆகவே வெதுவெதுப்பான நீரை அருந்துங்கள்.

பலன் :
இது ஆஸ்துமா இருமல் மட்டுமல்லாது நுரையீரல் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து உங்களை காப்பாற்றும்.



Click it and Unblock the Notifications
