ஜீரண சக்தியை அதிகப்படுத்த வேண்டுமா? அர்த்த சக்ராசனா செய்து பாருங்கள்!!

Written By:
Subscribe to Boldsky

இளம் வயதில் கல்லும் சாப்பிட்டாலும் கரைந்து போக வேண்டும் என பெரியவர்கள் கூறுவார்கள். நாம் கண்டைதையும் சாப்பிட்டு ஜீரண சக்திக்கே செக் வைக்கின்றோம்.

அஜீரணம், மலச்சிக்கல், என படிப்படியாக ஒவ்வொரு பிரச்சனைகளை இரைப்பைக்கு தந்துவிடுகிறோம்.

உங்கள் ஜீரண சக்தியை சரிப்படுத்த உண்ணும் உணவோடு யோகாவையும் செய்யுங்கள். இதனால் ஜீரண மண்டலம் வலுப்பெறும். ஜீரணித்து தக்க பலத்தை தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அர்த்த சக்ராசனா :

அர்த்த சக்ராசனா :

அர்த்த என்றால் பாதி என்று சமஸ்கிருதத்தில் அர்த்தம். சக்ரா என்றால் சக்ரம் போன்று. அரை வட்ட சக்கரம் போல் செய்யப்படும் இந்த யோகா வயிறுப் பகுதிகளில் அதிக ரத்த ஓட்டத்தை அளிக்கிறது. இதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.

அர்த்த சக்ராசனா :

அர்த்த சக்ராசனா :

இந்த யோகாவை செய்வதற்கு சிறிது கடினமாக இருந்தாலும். நன்றாக பேலன்ஸ் செய்து, செய்யும்போது உங்கள் உடலிற்கு நல்ல நெகிழ்வுத்தன்மையை அளிக்கும். எப்படி செய்வது என பார்க்கலாம்.

செய்முறை :

செய்முறை :

முதலில் தடாசனாவில் நில்லுங்கள். கால்களை நேராக வைத்து முதுகை வளைக்காமல் நிமிர்ந்து நிற்கவும்.

செய்முறை :

செய்முறை :

பின்னர் மெதுவாக கையை மேலே தூக்கி பின்பக்கம் வளைக்கவும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடலை வளையுங்கள். கைகள் மடங்காமல் வளைத்தபடி ஆழ்ந்து மூச்சை விடுங்கள்.

செய்முறை :

செய்முறை :

கால்கள் நேராக இருக்க வேண்டும். உங்கள் உடலை தாங்குமாறு பாதங்களை அழுத்த பேலன்ஸ் செய்து கொள்ளுங்கள். இந்த நிலையில் சில நொடிகள் இருந்த பின் மெதுவாய் பழையபடி இயல்பு நிலைக்கு வரவும்.

 பலன்கள் :

பலன்கள் :

தோள்பட்டை, கைகளுக்கு வலு தருகிறது. கீழ் இடுப்பு வலியை போக்குகிறது. மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்தும். இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை த்டையில்லாமல் சீராக அனுப்புகிறது.

பலன்கள் :

பலன்கள் :

ரத்த அழுத்தத்தை சம்ன்படுத்துகிறது. நுரையீரல் பிரச்சனைகளை சீர் செய்கிறது. வயிற்றுப் பகுதிகளிலுள்ள உறுப்புகளுக்கு பலம் தருகிறது.

குறிப்பு :

குறிப்பு :

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், முதுகு தண்டு பிரச்சனை இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ardha chakrasana to improve digestion

DO this Ardha chakrasana to improve digestion
Story first published: Wednesday, September 28, 2016, 7:00 [IST]