உங்கள் சிறு நீரகத்தை பத்திரப்படுத்த இதெல்லாம் செய்யுங்க!!

Written By:
Subscribe to Boldsky

சிறு நீரகம் கழுவுகளை வெளியேற்ற மட்டுமில்லை. ரத்தத்தை சுத்தப்படுத்தும், விட்டமின் டி உற்பத்தி இங்குதான் நடைபெறுகிறது.

5 ways to keep your kidney healthy

விட்டமின் சியுடன் சேர்ந்து ஆஸ்டியோஃபோரோஸிஸ் வராமல் தடுக்கப்படுகிறது.

நமது உறுப்புகளில் மிக முக்கியமானதும் கூட. அது அதிக பாரத்தை தாங்குவதால் அதனை பாதுகாப்பதும் முக்கியம். உங்கள் சிறு நீரகத்தை பத்திரப்படுத்த முக்கியமான வழி எது தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தூக்கம்?

தூக்கம்?

5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான தூக்கம் சிறு நீரக நோயைத் தரும் என சமீபத்தில் போஸ்டனில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது. நல்ல ஆழ்ந்த தூக்கம் உங்கள் மொத்த ஆரோக்கியத்திற்கும் கியாரண்டி.

நீர் ?

நீர் ?

ஒரே சமயத்தில் மிக அதிக நீர் குடித்தாலும் சிறு நீரகத்திற்கு அயர்ச்சியை தரும். அதே சமயம் குறைவான நீரும் சிறு நீரகத்தில் கழிவுகளை அதிகம் சேர்க்கும். ஆகவே அவ்வப்போது நீரை குடித்துக் கொண்டேயிருப்பது மிக நல்லது.

நடமாடிக் கொண்டிருத்தல் :

நடமாடிக் கொண்டிருத்தல் :

ஒரே இடத்தில் அமராமல் ஓடியாடிக் கொண்டிருந்தால் உங்கள் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.ஏனென்றால் ரத்தம் நாள்முழுவதும் சீரு நீரகத்தில் பாய்ந்து கொண்டேயிருக்கும். ரத்த அழுத்தம் அதிகமாகும் போது அது சிறு நீரகத்தின் செயல்களையும் பாதிப்பதால் நோய்கள் உருவாகும். ஆகவே உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஃப்ரெண்ட்லி உணவுகள் :

ஃப்ரெண்ட்லி உணவுகள் :

எல்லா பெர்ரி வகை பழங்களும் உங்கள் சிறு நீரகத்திற்கு மிகவும் உகந்தது. ஆப்பிள், பசலைக் கீரை பூண்டு, பீட்ரூட், கேரட், மாதுளை, ஆகியவை சிறு நீரகத்திற்கு ஏற்றது.

பெண்களுக்கு 50 வயதிற்கு பின் ஈஸ்ட்ரோஜன் சுரக்கத் தூண்டும் பேரிச்சம் பழம், தக்காளி, செர்ரி, கேரட் ஆகியவற்றை கட்டாயம் உணவில் சேருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 ways to keep your kidney healthy

5 ways to keep your kidney healthy
Story first published: Wednesday, December 28, 2016, 12:25 [IST]
Subscribe Newsletter