நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 ஆபத்தான நோய்கள் !!

Written By:
Subscribe to Boldsky

இதய நோயும் , புற்று நோயும்தான் உயிருக்கு ஆபத்தான நோய்களா? அப்படிதான் இன்னும் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகளையும் தவிர்த்து மெல்ல கொல்லும் நோய்களும் இருக்கின்றன.

5 Deadliest diseases you should aware of them

மிக சாதரணமாக எடுத்துக் கொள்ளும் மஞ்சள் காமாலை கூட நிறைய உயிரை குடித்திருக்கிறது என்பது அச்சம் தரக் கூடிய விஷயம். இது போல் பல பிரச்சனைகள் எப்படி உயிருக்கு உலை வைக்கிறது என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிவர் சிரோசிஸ் :

லிவர் சிரோசிஸ் :

கல்லீரல் மிகப்பெரிய பொறுப்பை கொண்ட உறுப்பு, குடிப்பதாலும், அதிக உடல் பருமனாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு தன்னுடைய செயல்களை இழந்துவிடுகிறது. அதனால் உண்டாகும் நோய்தான் கல்லீரல் சிரோசிஸ்.

அறிகுறிகள் :

பசியின்மை, சோர்வு, அடிக்கடி ஏப்பம், வயிறு உப்புசம் ஆகியவை இதன் அறிகுறிகள். இதற்கு சிகிச்சை உடனடியாக கொடுக்காவிட்டால் கல்லீரல் செயலிழப்பிற்கு ஆளாகி அபாய கட்டத்தை நோக்கி தள்ளப்படவேண்டியதிருக்கும்.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) :

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) :

நுரையீரலிலுள்ள காற்றுபைகள் பாதிப்படைந்து சுருங்கி இந்த நோய் உண்டாகும். புகைப்பிடிப்பவர்களுக்குத் மிக அதிகமாக தாக்கும் நோய் இது.

அதோடு கட்டடங்களில் வேலை செய்பவர்கள், பருத்தி ஆலைகளைல் வேலை செய்பவர்களுக்கு இந்த நோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறி :

இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் வெளியே தெரியாது. அதனால்தான் இது தீவிரமான நோயாகும். மூச்சிரைப்பு இதன் அறிகுறியாகும். அடிக்கடி மூச்சு விடுவதில் சிரமம் உண்டானால் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்.

சர்க்கரை வியாதி :

சர்க்கரை வியாதி :

சர்க்கரை வியாதி பற்றி பல கட்டுரைகள் நமது போல்ட்ஸையில் பார்த்திருக்கிறோம். டைப்-1 மற்றும் டைப் 2 சர்க்கரை வியாதிகள் உண்டு.

டைப்-1 சர்க்கரை வியாதி 5% மக்களே பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு மரபியல் ரீதியாக காரணங்கள் அமையும். டைப்-2 - சர்க்கரை வியாதியால் 95% மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு தவறான வாழ்க்கை முறையும், உணவு முறையும் காரணமாகும்.

அறிகுறி :

அளவு கடந்த தாகம், கண் பார்வை திடீரென மங்குதல் அல்லது அதிகரித்தல், அதிக பசி, அடிக்கடி சிறு நீர்க் கழித்தல்,

இன்ஃப்ளூயன்ஸா :

இன்ஃப்ளூயன்ஸா :

இன்ஃப்ளூயன்ஸா சாதரண ஆரோக்கிய மனிதனுக்கு வந்தால் சரியாகிவிடும். ஆனால் சிறு நீரக கோளாறு, இதய நோய்கள் இருப்பவர்களுக்கு வந்தால் தொற்று தீவிரமாகி, உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றுவிடும்.

 நிமோனியா :

நிமோனியா :

நிமோனியா நுரையீரலில் உண்டாகும் கடுமையான தொற்றால் உண்டாகும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை மிகுந்த பலவீனப்படுத்தும். உடல் பலவீனமான குழந்தை மற்றும் வயதானவர்களுக்கு இது வரும் வாய்ப்புகள் அதிகம்.

 செப்டிசீமியா ( செப்ஸிஸ்)

செப்டிசீமியா ( செப்ஸிஸ்)

பொதுவாக செப்டிசீமியா உடலில் ஏதாவ்து ஒரு உறுப்பில் ஆரம்பித்திருக்கும்.

நுரையீரல், சிறு நீரக குழாய், சிறு நீரகம், தோல். அது மெதுவாக பரவி ரத்தத்தில் கலந்து ரத்தக் கட்டியை ஏற்படுத்தி, உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்துவிடும்.

இதற்கு சிகிச்சை அளித்தால் குணப்படுத்தலாம். ஆனால் கவனிக்கப்படாம்லிருந்தால் உயிருக்கு ஆபத்தை தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Deadliest diseases you should aware of them

The 5 important deadliest diseases that may lead to death, you show aware of them.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter