Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
பானி பூரியை எப்படி ஆரோக்கியமானதாக மாற்றலாம் தெரியுமா? இந்த நேரத்தில் தெரியாம கூட சாப்பிட்ராதீங்க...!
இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு மாலை நேர சிற்றுண்டி என்றால் அது பானி பூரிதான். இந்தியா முழுவதும் பானி பூரி பல்வேறு பெயர்களில் உட்கொள்ளப்படுகிறது. வட இந்தியாவில் இது கோல்கப்பே என்று அழைக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் புச்கா என்றும், ஒடிசா மற்றும் பீகாரில் குப்சுப் என்றும் அழைக்கப்படுகிறது.
பானி பூரி அனைவராலும் விரும்பப்படும் உணவாக இருந்தாலும் அது ஆரோக்கியமானதா என்ற சந்தேகம் இன்னும் நிலவிதான் வருகிறது. அந்த சந்தேகம் உங்களுக்கு இருந்தால் உங்கள் பானி பூரியை ஆரோக்கியமாக மாற்றுவதற்கு சில வழிகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கோதுமை பூரிகளை தேர்ந்தெடுக்கவும்
பானி பூரி சாப்பிடும்போது, கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் ஆரோக்கியமான பானி பூரியைத் தேர்ந்தெடுக்கவும். சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பானி பூரி உள்ளது. கோதுமையைக் கொண்டு பூரிகளை வீட்டிலேயும் தயார் செய்யலாம்.
ஆரோக்கியமான பில்லிங்கை தேர்ந்தெடுக்கவும்
பொதுவாக பிசைந்த உருளைக்கிழங்கு பானி பூரிக்குள் வைத்து சாப்பிடப்படுகிறது. இதற்கு பதிலாக, நட்ஸ் மற்றும் தானியங்களை பில்லிங்காக பயன்படுத்துங்கள்.
நீங்கள் வேகவைத்த சுண்டல் அல்லது முளைக்கட்டிய பயிர்களை பானி பூரியில் நிரப்பிகளாகப் பயன்படுத்தலாம். இவற்றுடன் மசாலா சேர்த்து சுவையாகசாப்பிடலாம்.
மாலை நேரத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும்
பானி பூரி சாப்பிடுவதற்கென்று ஒரு நேரத்தை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். மதிய உணவு நேரத்தில் பானி பூரி சாப்பிட வேண்டாம், ஏனெனில் இந்த நேரத்தில் நீங்கள் பானி பூரி சாப்பிட்டால் அதனை கணக்கில்லாமல் அதிகமாக சாப்பிடலாம்.
மாலை நேரத்தில் பானி பூரி சாப்பிடுவதே நல்லது, பெரும்பாலும் மாலை 5-6 மணியளவில் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
அதிக உப்பை பயன்படுத்தக்கூடாது
உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனைகள் இருந்தால், பூரி மற்றும் காரமான தண்ணீரில் உள்ள உப்பை குறைக்கவும். பொதுவாக சந்தையில் கிடைக்கும் சாட் மசாலாக்களில் உப்பு அதிகம் இருக்கும்.
சாட் மசாலாவைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, புளி, பச்சை மிளகாய், புதினா, வெல்லம் மற்றும் சிறிது உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி காரமான தண்ணீரை வீட்டிலேயே தயார் செய்யவும்.
பூரியை வேகவைக்கவும்
பாரம்பரிய முறையில் பூரிகளை எண்ணெயில் வறுக்காமல், வேகவைக்கலாம். பலர் பூரிகளை ஏர் பிரையரில் வறுக்க முயற்சிக்கன்றனர், அது பலனளித்தது. நீங்களும் அதை முயற்சி செய்யலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
