Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
கவர்ச்சியான உடல் தோற்றத்தை கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?
Rashmika Mandanna: நாம் ஒவ்வொருவரும் ஒல்லியான வடிவமான உடலை பெற விரும்புகிறோம். உடல் எடையை குறைத்து கவர்ச்சியான நல்ல வடிவமான உடலை பெற நாம் பல்வேறு முயற்சிகளை செய்தாலும், அதற்கான பலன் நமக்கு கிடைப்பதில்லை. ஆனால், சினிமா நட்சத்திரங்களால் மட்டும் எப்படி எப்போதும் வடிவமான உடலை பெற்றிருக்க முடிகிறது என்று பலமுறை வியந்து பார்த்திருப்போம்.
அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் மற்றும் உடற்பயிற்சிகளை செய்கிறார்கள் என்று யோசித்திருப்போம். அந்த வகையில், இன்று தமிழ், தெலுங்க, கன்னட திரையுலகில் முன்ணி நடிகையாக இருக்கும் ரஷ்மிகா மந்தனாவின் ஃபிட்டான உடலைப் பற்றிய ரகசியங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டுள்ளார். ராஷ்மிகாவின் திறமையான நடிப்புக்கு மட்டுமின்றி, அவரின் தோற்றமும், அழகும் அவருக்கு தனித்தன்மையை கொடுக்கிறது.
தனது உடல் வடிவத்தை பராமரிக்க அதிக கவனம் செலுத்தும் ராஷ்மிகா, அடிக்கடி தனது உடற்பயிற்சி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவார். ராஷ்மிகா மந்தனாவின் ஃபிட்னஸ் மந்திரம், சமச்சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி அமர்வுகளைத் தவிர வேறில்லை.
ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை
நாம் ஒல்லியாக அழகாக இருப்பதை விட ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியம் என ராஷ்மிகா நம்புகிறார். அதனால், அவர் தனது உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறார். தனது உடல் எடைய பராமரிக்க, வாரத்திற்கு 4-5 முறை ஜிம்மிற்கு செல்கிறார். தனது உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உடற்பயிற்சி மற்றும் உணவுத் திட்டத்தைப் பின்பற்றுகிறார்.
உடற்பயிற்சிகள்
கிக் பாக்ஸிங், ஸ்கிப்பிங், நடனம், நீச்சல், ஸ்பின்னிங், யோகா மற்றும் விறுவிறுப்பான நடை போன்ற செயல்பாடுகளை ராஷ்மிகா செய்து வருகிறார். கார்டியோவிற்கான இந்த நடவடிக்கைகள் தவிர, தசையை வளர்ப்பதற்கான எடை பயிற்சியையும் ராஷ்மிகா மேற்கொள்கிறார். கார்டியோ வாஸ்குலர் பயிற்சிகள் மற்றும் எடைப் பயிற்சி ஆகியவற்றின் கலவையானது அவரது வொர்க் அவுட் வழக்கத்தை முழுமையாக்குகிறது.
சுறுசுறுப்பான பயிற்சி
ஃபுல் பாடி ஃபோம் ரோல் மற்றும் ஸ்ட்ரெச் போன்ற வார்ம் அப் பயிற்சிகளுடன் ராஷ்மிகா தனது உடற்பயிற்சியை தொடங்க ஆரம்பிக்கிறார். இந்த பயிற்சிகளை இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் செய்த பிறகு, இடுப்பு உந்துதல் மற்றும் மருந்து பந்து ஸ்லாம்கள் போன்ற சுறுசுறுப்பான பயிற்சிகளையும் செய்துவருகிறார்.
கடுமையான உடற்பயிற்சி
எளிமையான உடற்பயிற்சி முதல் கடுமையான பயிற்சி வரை பல வொர்க்அவுட்களை செய்து வரும் ராஷ்மிகா, உடல்நிலையை பராமரிப்பதில் நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். பெஞ்ச் புஷ்-அப், ஐசோமெட்ரிக் புஷ்-அப் மற்றும் வெயிட் பிளேட்களுடன் புஷ்-அப் உள்ளிட்ட பல-கூட்டு பயிற்சிகளை மேற்கொள்ளும் அவர், ஒவ்வொன்றிலும் எட்டு முதல் பத்து வரை மூன்று முறை செய்கிறார். டம்பல்ஸுடன் கூடிய உடல் பயிற்சியில் ஸ்னாட்ச் மற்றும் புஷ் பிரஸ் போன்ற பயிற்சிகளும் உள்ளது.
உணவு திட்டம்
முழு சைவ உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் ராஷ்மிகா மந்தனா, தினமும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிப்பதன் மூலம் தனது நாளைத் தொடங்குகிறார். டயட்டீஷியன் ஆலோசனைப்படி இப்போது ஆப்பிள் சைடர் வினிகருக்கு மாறியதாக அவர் தெரிவித்திருந்தார்.
நீரேற்றமாக இருப்பது
நாள் முழுவதும் தங்களை நீரேற்றமாக வைத்திருப்பதற்காக நிறைய தண்ணீர் குடிக்கிறார். இது ராஷ்மிகாவின் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, சரும மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை வழங்குகிறது. மதிய உணவிற்கு தென்னிந்திய உணவுகளை சாப்பிட விரும்பும் அவர், அரிசி சாப்பிடுவதை தவிர்க்கிறார். மேலும், இரவு உணவிற்கு காய்கறி சூப் அல்லது பழங்களை சாப்பிடுகிறார்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு
பெரும்பாலும் ராஷ்மிகா, வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட விரும்புவார். சாதம், நொறுக்குத் தீனிகள், வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் உண்பதை முற்றிலும் தவிர்க்கிறார். கடுமையான டயட்டைப் பின்பற்றினாலும், அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்ளும் செய்கிறார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆரோக்கியமான உணவுகளையும் அவர் எடுத்துக்கொள்கிறார்.
இதேபோன்ற உணவு திட்டங்களையும், உடற்பயிற்சிகளையும் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களையும் செய்து நீங்களும் ஒல்லியான வடிவமான உடலை பெறலாம். நல்ல உடல் வடிவம் நல்ல தோற்றத்தையும் நம்பிக்கையையும் நமக்கு கொடுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



