Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
ஆண்களே! உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க ஹார்மோன் சரியில்ல-ன்னு அர்த்தம்... உஷார்..
Hormone Imbalance In Men: பொதுவாக ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் பெண்களுக்கு தான் ஏற்படும் என்றும், அவர்கள் மட்டும் தான் இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் நிறைய பிரச்சனைகளை சந்திப்பதாகவும் பலரும் நினைக்கின்றனர். ஆனால் பெண்களைப் போன்றே ஆண்களுக்கும் இப்பிரச்சனை உண்டு. இதைப் பற்றி அதிகம் விவாதிக்கப்படுவதில்லை.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால், அது ஒருவரது உடல், மனம் மற்றும் உணர்ச்சிகளில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் வயதான காலத்தில் ஏற்படும். இது தவிர மன அழுத்தம், உடல் பருமன், தைராய்டு பிரச்சனைகள் போன்றவற்றாலும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும்.

இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கு சரியான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இல்லாவிட்டால், அது வாழ்க்கையையே நரகமாக்கிவிடும். கீழே ஆண்களிடையே காணப்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. விறைப்புத்தன்மை குறைபாடு
ஆண்களின் உடலில் ஹார்மோன் சமநிலையாக இல்லாவிட்டால் காணப்படும் முக்கியமான அறிகுறிகளுள் ஒன்று விறைப்புத்தன்மை குறைபாடு ஆகும். அதாவது உடலில் ஹார்மோன் சீராக இல்லாவிட்டால், அது பாலியல் ஆசையை குறைப்பதோடு, உறவின் போதும் துணையை திருப்திப்படுத்த முடியாமல் சிரமப்பட நேரிடும். எனவே இப்படியான பிரச்சனையை சந்தித்தால், உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சமநிலையில் இல்லை என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
2. தொடர்ச்சியான உடல் சோர்வு
நீங்கள் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? உடல் சோர்வு பல நோய்களின் முக்கிய அறிகுறியாக உள்ளன. எனவே எப்போது நீங்கள் அதிக உடலுழைப்பும் இல்லாமல் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறீர்களோ, அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள். முக்கியமாக தொடர்ச்சியான உடல் சோர்வுடன், மிகுந்த உடல் பலவீனத்தை சந்திப்பது ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் முக்கியமான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
3. மனநிலை மாற்றங்கள்
பெண்களுக்கு மட்டும் தான் மனநிலையில் ஏற்றஇறக்கங்கள் ஏற்படும் என்பதில்லை. ஆண்களுக்கும் ஏற்படும். அதுவும் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல், ஒருவித எரிச்சல் உணர்வை அதிகமாக சந்தித்தால், உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுடன் உள்ளது என்று அர்த்தம். இப்படியான மனநிலை மாற்றங்களை அடிக்கடி சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. உடல் மெலிந்து போவது
சமீப காலமாக நீங்கள் மெலிந்து கொண்டிருக்கிறீர்களா? அதுவும் மிகப்பெரிய அளவில் வித்தியாசத்தை உங்களால் காண முடிகிறதா? அப்படியானால் அதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். மேலும் உடல் மெலிந்து போவது பல ஆரோக்கிய பிரச்சனைகளின் முக்கிய அறிகுறியாக இருப்பதால், காரணமின்றி உடல் மெலிவதை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.
5. தலைமுடியில் மாற்றங்கள்
உங்களின் தலைமுடியில் திடீரென்று மாற்றத்தை கண்டாலோ அல்லது தலைமுடி அதிகமாக உதிர்வதாக உணர்ந்தாலோ, உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். ஏனென்றால் காரணமின்றி தலைமுடி உதிர்தல், முடி மெலிந்து போவது போன்றவை ஹார்மோன் பிரச்சனைகளின் முக்கிய அறிகுறிகளுள் ஒன்றாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications