Latest Updates
-
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
உடம்புல இந்த சத்து அதிகமானால்.. இதய நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை சந்திக்க நேரிடும்... உஷார்...
Side Effects Of Taking Too Much Protein In Tamil: புரோட்டீன் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்தாகும். இது அமினோ அமிலங்களை உருவாக்குகிறது. நமது உடலானது இந்த அமினோ அமிலங்களைக் கொண்டு தான் தசைகள் மற்றும் எலும்புகளை வலிமையாக்கவும், சரிசெய்யவும் செய்கிறது மற்றும் இது ஹார்மோன்கள் மற்றும் நொதிகளின் உருவாக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் புரோட்டீன்கள் உடலுக்கு ஆற்றலையும் வழங்குகிறது. இப்படிப்பட்ட புரோட்டீனை தினமும் நாம் போதுமான அளவில் உட்கொள்ள வேண்டும். அதற்கு இயற்கை நமக்கு புரோட்டீன் நிறைந்த ஏராளமான உணவுகளை அளித்துள்ளது.

என்ன தான் புரோட்டீன் உடலுக்கு நன்மை விளைவிக்கும் சத்தாக இருந்தாலும், அதை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அதன் காரணமாக ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒருவர் ஒரு நாளைக்கு எடுக்கும் புரோட்டீனின் அளவானது, அவரது உடல் செயல்பாடுகளைப் பொறுத்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதில் சராசரியாக பெண்கள் ஒரு நாளைக்கு 46 கிராமும், ஆண்களுக்கு 56 கிராம் புரோட்டீனும் பரிந்துரைக்கப்படுகிறது. அதிகளவில் புரோட்டீனை உட்கொண்டால், அதன் விளைவாக இதய நோய் முதல் சிறுநீரக இழப்பு வரை சந்திக்க நேரிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்போது புரோட்டீனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.
உடல் பருமன்
அளவுக்கு அதிகமாக ஒருவர் புரோட்டீனை உட்கொண்டால், அது ஆரோக்கியமற்ற உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதுவும் அதிகமாக புரோட்டீனை எடுக்கும் போது அது உடலில் கொழுப்புக்களாக தேங்கி, உடல் பருமனை அதிகரித்துவிடும்.
வாய் துர்நாற்றம்
அதிகளவு புரோட்டீனை உட்கொண்டு, கார்போஹைட்ரேட்டை குறைத்தால், அதன் விளைவாக உடலினுள் அழுகிய பழத்தின் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கெமிக்கல்களின் உற்பத்தி அதிகரித்து, கடுமையான வாய் துர்நாற்றத்தை சந்திக்க நேரிடும். எனவே இப்படிப்பட்ட சூழ்நிலையில் புரோட்டீன் உட்கொள்வதைக் குறைத்து, நீரை அதிகம் குடித்து, தினமும் 2 முறை பற்களைத் துலக்க வேண்டும்.
புற்றுநோய் அபாயம்
அதிகளவு புரோட்டீனை உட்கொள்வது பல்வேறு ஆபத்தான ஆரோக்கிய பிரச்சனைகளான புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்துவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மருத்துவர்களும், மாட்டிறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றை அதிகம் உட்கொள்பவர்களுக்கு குடல், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயம் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர்.
வயிற்றுப்போக்கு
புரோட்டீனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு, நார்ச்சத்து எடுப்பதைக் குறைக்கும் போது, அதன் விளைவாக கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும். எனவே இதைத் தவிர்க்க, நீரை அதிகம் பருக வேண்டும், காப்ஃபைன் பானங்களைத் தவிர்க்க வேண்டும், வறுத்த மற்றும் கொழுப்புள்ள உணவுகளை குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சிறுநீரக சேதம்
அதிகளவு புரோட்டீனை எடுக்கும் போது, அதன் விளைவாக சிறுநீரகங்கள் தான் அதிகம் சேதமடையும. ஏனெனில், அமினோ அமிலங்களில் நைட்ரஜன் அதிகம் காணப்படுவதால், அந்த நைட்ரஜனை வெளியேற்ற சிறுநீரகங்கள் கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். எனவே தான் அதிக புரோட்டீன் சிறுநீரகங்களை சேதப்படுத்துகின்றன.
இதய நோய்
ஒருவர் உட்கொள்ளும் புரோட்டீன் வகையைப் பொறுத்து, அது இதயத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுவும் தாவர வகை புரோட்டீன்களான பருப்பு வகைகள், நட்ஸ், விதைகள், மீன் மற்றும் கடல் உணவுகள் போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மைகளை ஏற்படுத்தினாலும், மாட்டிறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவை உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, இதய நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே எந்த வகை புரோட்டீனை நீங்கள் தினமும் எடுக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.
எப்போது ஒருவர் புரோட்டீனை அதிகம் உட்கொள்ள வேண்டும்?
ஒருவர் பின்வரும் காரணங்களுக்காக மட்டுமே புரோட்டீனை அதிகம் உட்கொள்ள வேண்டும். அவை:
* தசைகளை வளர்ச்சி அடைய முயற்சிக்கும் போது
* காயங்கள் விரைவில் குணமாக
* தசைகளின் அடர்த்தியை பராமரிக்க முயற்சிக்கும் போது
* தினமும் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது போன்ற தருணங்களில் புரோட்டீனை அதிகம் உட்கொள்ளலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
