Latest Updates
-
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்.. -
மே 8 கிரகப்பிரவேசம்: உங்கள் புதிய வீட்டில் செல்வம் கொழிக்க இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க! -
World Asthma Day 2026: ஆஸ்துமா குணமாக இந்த கசாயத்தை 30 நாட்கள் குடிங்க..- கூறும் ஆயுர்வேத டாக்டர்!
மாரடைப்பை வரத்தூண்டும் கெட்ட கொலஸ்ட்ரால் குறையணுமா? இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க..
High Cholesterol Diet In Tamil: உலகளவில் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொலஸ்ட்ராலை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சிக்காவிட்டால், அதன் விளைவாக இதய நோய்கள் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயம் அதிகரிக்கும்.
உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த என்ன தான் மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் பெரிதும் உதவியாக இருந்தாலும், நாம் உண்ணும் சில உணவுகளும் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி புரிகின்றன.

குறிப்பாக சூரியனின் ஒளிக்கதிர்களில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி புரிவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படிப்பட்ட வைட்டமின் டி சூரிய கதிர்களில் மட்டுமின்றி, நாம் உண்ணும் ஒருசில பழங்களிலும் காணப்படுகின்றன.
நீங்கள் உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வைட்டமின் டி அதிகம் நிறைந்த மஞ்சள் நிற பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் கொலஸ்ட்ரால் காரணமாக ஏற்படும் மாரடைப்பின் அபாயத்தைத் தடுக்கலாம்.
வாழைப்பழம்
ஆண்டு முழுவதும் விலைக் குறைவில் கிடைக்கும் மஞ்சள் நிற வாழைப்பழத்தில் பொட்டாசியம் மட்டுமின்றி, வைட்டமின் டி சத்துக்களும் நிறைந்துள்ளன. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனையைக் கொண்டவர்கள், அதைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வைட்டமின் டி நிறைந்த வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வாருங்கள்.
மாம்பழம்
தற்போது கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், மாம்பழ சீசனும் தொடங்கிவிடும். மார்கெட்டுகளில் பலவிதமான மாம்பழங்களை நாம் காணக்கூடும். உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்து, அவற்றை எளிய வழியில் கட்டுப்படுத்த விரும்பினால், மாம்பழத்தை சாப்பிடுங்கள். ஏனெனில் மாம்பழத்தில் வைட்டமின் டி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளன.
அன்னாசிப்பழம்
மற்றொரு சுவையான மஞ்சள் நிற பழம் தான் அன்னாசி. இனிப்பும், புளிப்பும் கலந்த அன்னாசிப் பழத்தில் வைட்டமின் டி ஏராளமான அளவில் உள்ளன. மேலும் இந்த பழத்தில் புரோமிலைன், நார்ச்சத்து போன்றவை உள்ளதால், இவை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை எதிர்த்துப் போராடி எளிதில் வெளியேற்றும்.
பப்பாளி
வாழைப்பழத்திற்கு அடுத்தப்படியாக ஆண்டு முழுவதும் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய பழம் தான் பப்பாளி. இந்த பப்பாளியில் வைட்டமின் சியைத் தவிர, வைட்டமின் டி, நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளதால், இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, கொலஸ்ட்ராலும் கட்டுப்படும்.
எலுமிச்சை
பலரும் எலுமிச்சை வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழமாக மட்டுமே அறிவோம். ஆனால் இந்த எலுமிச்சையில் வைட்டமின் டி சத்துக்களும் வளமான அளவில் நிறைந்துள்ளன. ஆகவே கொலஸ்ட்ரால் பிரச்சனையைக் கொண்டவர்கள் அடிக்கடி எலுமிச்சை ஜூஸ் தயாரித்துக் குடிப்பது நல்லது.
பீச்
பீச் பழத்தில் வைட்டமின் டி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன. இந்த பழத்தை கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி வாங்கி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கட்டுப்படுவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பழங்கள் அனைத்தும் கொலஸ்ட்ரால் பிரச்சனையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றன. உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருந்து அதை எளிதில் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் விரும்பினால், இந்த பழங்களை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் நல்ல பலனைப் பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications