For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அதிசயப் பழத்த பார்த்திருகீங்களா? அப்போ நீங்க அதிர்ஷ்டசாலிதான்... ஏன் தெரியுமா?

குவாரானா என்னும் அமேசான் மூலிகை பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் இங்கே விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பற்றிய விளக்கமான தொகுப்பை இந்த பகுதியில் காணலாம்.

|

அமேசான் காட்டை பூர்வீகமாக கொண்ட குவாரனா, கொடி வகையைச் சேர்ந்த தாவரமாகும். மேப்பிள் தாவர குடும்பத்தை சேர்ந்த இதன் அறிவியல் பெயர் பாலினியா குபானா ஆகும். குவாரனா செடியின் பழம், மனித கண்ணின் தோற்றத்தை ஒத்திருக்கும். கறுப்பான விதையை வெள்ளை உறை மூடியிருக்கும்.

Guarana

அதன் மீது சிவப்பு நிற கூடு காணப்படும். அளவில் சிறியதாக காணப்படும் குவாரனா, ஏனைய பெர்ரி வகை பழங்களைக் காட்டிலும் வித்தியாசமானது. நம் உடலுக்கு பலவித நன்மைகளைச் செய்யக்கூடிய இயல்பு இதற்கு உள்ளது. பானங்களை தயாரிப்பதற்கு மட்டுமல்ல, மருத்துவ பயன்பாட்டுக்கும் குவாரனாவின் கனி உபயோகப்படுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமேசான் மூலிகை

அமேசான் மூலிகை

அமேசான் பகுதியை சேர்ந்த பழங்குடியினர் வேட்டைக்குச் செல்லும் காலங்களில் இதை சத்து பானமாக பருகி வந்துள்ளனர். இதில் காஃபின் அதிக அளவும், தியோபிலின், தியோபுரோமின் ஆகியவை மிகக்குறைந்த அளவும் காணப்படுவதால், இதிலிருந்து தயாரிக்கப்படும் பானம் உற்சாகத்தையும் ஆற்றலையும் அளிக்கிறது.

உடல் நலத்தில் ஆர்வம் மிகுந்திருக்கும் இந்த நவீன காலகட்டத்தில் மருத்துவ குணங்களுக்காக குவாரனா தாவரம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பிரேசில் நாட்டில் அதிகமாக காணப்பட்டாலும், இதன் விதை பராகுவே நாட்டின் பல பகுதிகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

MOST READ: பாரதப்போரில் வென்றபின் மதுரையில் வைத்து அர்ஜூனன் கொல்லப்பட்டது ஏன் தெரியுமா?

குவாரனாவில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்

குவாரனாவில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள்

குவாரனா விதைகளை 100 கிராம் எடுத்தால் அதில் 1 கிராம் கார்போஹைடிரேடு என்னும் சர்க்கரை பொருள், 50 கிராம் புரோட்டீன் என்னும் புரதம், 2.95 கிராம் கொழுப்பு, 12.21 கிராம் நார்ச்சத்து, 4.6 கிராம் காஃபின், 1.31 கிராம் மோனோசாச்சுரேட், 6 மில்லி கிராம் சோடியம், 146 மில்லி கிராம் பொட்டாசியம், 18 மில்லி கிராம் கால்சியம், 133 மில்லி கிராம் வைட்டமின் ஏ, 90 மில்லிகிராம் வைட்டமின் சி சத்துகள் அடங்கியிருக்கும்.

மொத்தத்தில் குவாரனா விதைகளில் 96 கிலோ கலோரி ஆற்றல் அடங்கியுள்ளது. குவாரனா விதை, 0.39 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், 0.15 கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், 0.49 கிராம் பூரித கொழுப்பு அமிலங்கள் மற்றும் 0.54 கிராம் பலபடித்தான பூரிதமில்லா கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

உடல் எடை குறைக்க

உடல் எடை குறைக்க

உடல் எடையை குறைப்பதில் காஃபின் பெரும்பங்கு வகிக்கிறது. குவரனாவில் காஃபின் அதிக அளவில் உள்ளதால் உடல் எடையை குறைப்பதோடு, அதை சீராக பராமரிக்கவும் உதவுகிறது. கொழுப்பு மற்றும் லிப்பிடுகளை உடைத்து கொழுப்பு அமிலங்களாக மாற்றும் செயல்பாட்டுக்கு காரணமான நரம்பு மண்டலத்தில் குவாரனா விதைகள் தாக்கத்தை ஏற்படுத்துவதால், உடற்பயிற்சியின்போது வெளிப்படுத்தப்படும் கொப்பு சத்தினை ஆற்றலாக மாற்றுவதில் இடைப்பட்டு உடல் எடையை சீராக பராமரிக்க இது உதவுகிறது. பசி உணர்வை குவாரனா மட்டுப்படுத்துவதால், நாம் சாப்பிடும் உணவின் அளவும் கட்டுப்படுத்தப்படுகிறது.

மாதவிடாய் கோளாறு

மாதவிடாய் கோளாறு

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் வலி ஆகியவற்றால் அல்லலுறும் பெண்களுக்கு குவாரனா அருமருந்தாக விளங்குகிறது. தினமும் உணவில் குவாரனா விதைகளை சேர்த்துக் கொண்டால் மாதவிடாய் ஏற்படுவதற்கு முந்தைய அறிகுறிகள் மற்றும் மாதவிடாய் கால சோர்விலிருந்து விடுதலை பெற முடியும் என்று பாரம்பரியமாக நம்பப்பட்டு வருகிறது. அறிவியல் பூர்வமாக இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

மனநலத்தை மேம்படுத்தும்

மனநலத்தை மேம்படுத்தும்

இரத்த ஓட்டத்தை அதிகமாக்கக்கூடிய இயல்பு குவாரனாவுக்கு உண்டு. இரத்த ஓட்டத்தை சீராக்கப்படுவதால் மனநலம் மேம்படுகிறது. மேலும் அசதி, மைக்ரேன் வகை ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட அனைத்து தலைவலிகள் தாக்கக்கூடிய வாய்ப்புகள் குறைகின்றன.

MOST READ: இப்படி அங்கங்க கட்டி இருக்கா? அது என்ன கட்டினு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க... கவனமா இருங்க...

சரும அழகுக்கு

சரும அழகுக்கு

குவாரனா, ஆன்ட்டி ஆக்ஸிடண்டு என்னும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான் மற்றும் நுண்கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும் தன்மை ஆகியவற்றை கொண்டிருக்கிறது. ஆகவே, அழகு சாதனங்களில் இளமை தோற்றத்தை அளிக்கும் பூச்சுகள், கிரீம்கள், சோப்புகள் மற்றும் கூந்தலுக்கான தயாரிப்புகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.குவாரனாவிலுள்ள காஃபின், தோலில் சுருக்கம் மற்றும் தளர்வு ஏற்படுவதை தடுத்து சருமத்தை அழகாக பாதுகாக்கிறது. இது அறிவியல்பூர்வமாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செரிமானத்தை தூண்ட

செரிமானத்தை தூண்ட

நச்சுத்தன்மையை அகற்றக்கூடிய இயல்பு குவாரனாவுக்கு உண்டு. ஆகவே, இது செரிமான மண்டல செயல்பாட்டினை சீராக்குகிறது. தாவரத்தில் காணப்படும் ஆக்ஸினேற்ற தடுப்பானான டானின், குவாரனாவில் அதிக அளவில் உள்ளது. இது திசுக்களை இணைக்கும் பண்பு கொண்டது. மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. குவாரனாவிலுள்ள காஃபின், சிறு மற்றும் பெருங்குடல்களை தூண்டுவதால் மலச்சிக்கலை தீர்க்கிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மனதில் ஏற்படும் அழுத்தம் மற்றும் கலக்கத்தை மாற்றக்கூடிய பண்பு குவாரனாவுக்கு உள்ளது. அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்படாவிட்டாலும் மனதை சாந்தப்படுத்தக்கூடிய தன்மை இதற்கு உள்ளது என்று அறியப்பட்டுள்ளது. குவாரனாவில் காஃபின் அடங்கியிருப்பதால் இது உற்சாகமான மனநிலையை அளிக்கிறது. ஆனாலும், குறைவான அளவு மட்டுமே இதை எடுத்துக்கொள்ள வேண்டும். அளவு அதிகமானால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

குவாரனாவில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் என்னும் ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்டுகள் உள்ளதால் இது இரத்தக்கட்டுகளை நீக்குவதோடு இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதய இரத்தக்குழாய்களில் அடைப்புகளை உருவாக்கக்கூடிய கெட்ட கொலஸ்டிராலை குவாரனா குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக, இதை பயன்படுத்துபவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறைந்துவிடுகிறது.

ஆற்றல் அளிக்கிறது:

ஆற்றல் அளிக்கிறது:

காஃபின், பொதுவாகவே ஆற்றலை அளிக்கக்கூடியது. இது குவாரனாவில் பெருமளவு உள்ளது. மூளையை ஓய்வெடுக்கச் செய்யும் அடினோசைனின் செயல்பாட்டை தடுப்பதால், அசதி ஏற்படாமல் பாதுகாத்து உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. மத்திய நரம்பு மண்டலம் மற்றும் இதய தசையான மையோகார்டியம் ஆகியவற்றை குவாரனாவிலுள்ள ஃப்ளோவனாய்டுகளும் ஆல்கலாய்டுகளும் தூண்டுகின்றன. ஆகவே, அசதி நீங்கி விழிப்புணர்வு கூடுகிறது.

MOST READ: இந்த செடியும் விதையும் பார்த்திருக்கீங்களா? இவ்ளோ அற்புதத்த செய்யும்...

நுண்ணுயிரிகளை பாதுகாக்க

நுண்ணுயிரிகளை பாதுகாக்க

ஆபத்து விளைவிக்கக்கூடிய நுண்ணுயிரிகளான ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூடன்ஸ், எஸ்கெரிஷியா கோலி உள்ளிட்டவற்றின் வளர்ச்சியை குவாரனா விதைகள் தடுக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதிலுள்ள காஃபின் மற்றும் டானின் ஆகியவை நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் தன்மையை அளிக்கின்றன.

வலி நிவாரணி

வலி நிவாரணி

குவாரனாவிலுள்ள காஃபின் வலி நிவாரணியாக செயல்படுகிறது. இரத்த ஓட்டத்தை தூண்டுவதன் மூலம் உடல் வலியை குறைப்பதோடு, ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகள் மற்றும் மாதவிடாய் கால வலி ஆகியவற்றிலிருந்து விடுபட குவாரனா உதவுகிறது.

பாலியல் வேட்கையை அதிகரிக்க

பாலியல் வேட்கையை அதிகரிக்க

காஃபின் உள்ள காரணத்தால் குவாரனா இயற்கையாக பாலியல் வேட்கையை தூண்டும் பண்பை பெற்றுள்ளது. சாப்பாட்டில் இதை சேர்த்துக்கொள்வதால் தாம்பத்ய வாழ்வு ஈர்ப்பு நிறைந்ததாக விளங்கும்.

குவாரனாவை பயன்படுத்துவது எப்படி?

குவாரனாவை பயன்படுத்துவது எப்படி?

குவாரனா, பெர்ரி போன்று தோற்றமளிப்பதால் அதை அப்படியே சாப்பிடலாம் என்ற நினைத்தால் அது தவறாகும். கண்ணை கவரும் வண்ணம் இருப்பதால் பலர் இப்படித்தான் நினைக்கிறார்கள். பொதுவாக குவாரனாவின் விதைகள் தான் அதிக பலன் தருபவை. குவாரனா விதைகள், பொடி வடிவில், காப்ஸ்யூல் என்னும் குளிகை வடிவில், திரவ வடிவில் மற்றும் மெல்லக்கூடிய சூயிங்கமாகவும் கிடைக்கிறது.

தேநீர், காஃபி மற்றும் ஏனைய பானங்களில் இப்பொடியை கலந்து குடிக்கலாம். ஒரு நாளைக்கு 3 முதல் 6 கிராம் அளவு பொடியை மட்டுமே உட்கொள்ளவேண்டும். அதையும் மூன்று அல்லது நான்கு முறையாக பிரித்தே எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் அருந்தும் பழச்சாற்றில் (ஜூஸ்) ஒரு தேக்கரண்டி குவாரனா பொடி சேர்த்துக்கொள்ளலாம்

யோகர்ட் என்னும் நிலைப்படுத்தப்பட்ட தயிர் மற்றும் பழக்கூழ் போன்றவை அருந்தும்போது ஒரு தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளலாம்.

நீரை கொதிக்க வைத்து தேயிலை அல்லது காஃபி பொடி சேர்த்து, தேவைப்பட்டால் பால் கலந்து அத்துடன் ஒரு தேக்கரண்டி குவாரனா பொடியை சேர்த்து குவாரனா தேநீர் அல்லது காஃபி தயாரித்து அருந்தலாம்.

MOST READ: உடம்பு சும்மா எப்பவும் தளதளனு வெச்சிக்கணுமா? இத மட்டும் செஞ்சாலே போதும்...

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

ஏனைய மூலிகைகள் மற்றும் பழங்களைப் போன்றே குவாரனாவும் சில பக்க விளைவுகளை தரக்கூடியது. குவாரனா பயன்படுத்தும்போது அவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள், குவாரனா விதைகளை உண்ணலாம். ஆனாலும் அதன் அளவு 200 மில்லி கிராமுக்கு அதிகமானால், அதாவது அதிக அளவில் உட்கொண்டால் கருச்சிதைவு நேரக்கூடும். கருவில் வளரும் குழந்தை பாதிக்கப்படக்கூடும். தாய்ப்பால் அருந்தும் பச்சிளங்குழந்தைகளுக்கு குவாரனா தீங்கு விளைவிக்கக்கூடும். ஆகவே, பாலூட்டும் தாய்மார் குவாரனா விதைகளை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.

மன உளைச்சல்

மன உளைச்சல்

குவாரனா விதைகளுக்கு மனக்கலக்கத்தை குறைக்கும் பண்பு உண்டு. ஆனால், அதையே அதிக அளவு உட்கொண்டு விட்டால், காஃபின் உடலில் ஏராளமாக சேர்ந்து மனக்கலத்தை உருவாக்கிவிடும் அபாயம் உள்ளது.

நீரிழிவுக்கு ஏற்றதல்ல

நீரிழிவுக்கு ஏற்றதல்ல

நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதில் குவாரனா குழப்பத்தை உருவாக்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே, நீரிழிவு பாதிப்புள்ளோர் இதை எடுத்துக்கொள்ளவேண்டாம்.

MOST READ: குபேரன் அருளால் கோடி கோடியாக லாபம் கிடைக்கப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

வலிப்பு

வலிப்பு

குவாரனாவில் காஃபின் உள்ளதால் வலிப்பு, நடுக்கம் உள்ளோர் உட்கொள்ள வேண்டாம் என்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். வலிப்பினை கட்டுப்படுத்துவதற்காக கொடுக்கப்படும் மருந்துகளை செயலாற்ற விடாமல் குவாரனா தடுக்கக்கூடும். ஆகவே, இவ்வகை ஆரோக்கிய பிரச்னை உள்ளோர் குவாரனா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Guarana Benefits Of The Exotic Seeds Of Energy

Native to the Amazon, Guarana is a Brazilian climbing plant valued for its fruit and its seed. A member of the maple family, Guarana belongs to the Sapindaceae and is scientifically termed as Paullinia cupana. Although the plant is commonly found in Brazil, the seeds are largely produced in parts of Paraguay as well
Story first published: Friday, May 10, 2019, 11:04 [IST]
Desktop Bottom Promotion