For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஒரு கீரை போதும்... நீங்க அவதிப்படற இந்த 10 நோயையும் ஓடஓட விரட்டலாம்...

By Mahibala
|

நம்முடைய முன்னோர்கள் முதல் நவீன காலம் வரை கீரைகள் பற்றிய எண்ணங்கள் எல்லாருக்குமே ஒன்று தான். அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று. நம்முடைய முன்னோர்களின் சமையலில் நிசச்யம் கட்டாயம் தினசரி உணவில் கீரைகள் கிடைக்கும். வீட்டைச் சுற்றியும் தோட்டங்களிலும் உள்ள கீரைகளைப் பறித்து பயன்படுத்தி வந்தார்கள்.

அதில் மிக முக்கியமான ஒரு கீரை தான் மூக்கிரட்டை கீரை. இது வீட்டைச் சுற்றிலும் யாரும் பயிராடமல் தானாகவே முளைத்து வரும். இதை வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் போதும் கல்லீரல் பிரச்சினை, உடல் பருமன், சிறுநீர்ப்பாதை தொற்று, நீரிழிவு, இதய நோய்கள், கண்கள் நோய்கள் அத்தனையையும் விரட்ட முடியும். அது பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கீரைகளின் முக்கியத்துவம்

கீரைகளின் முக்கியத்துவம்

பொதுவாக கீரை என்று சொன்னாலே நமக்குத் தெரிந்ததெல்லாம் முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்றவை தான். ஆனால் அதைத் தாண்டி நம்மைச் சுற்றி ஏராளமான கீரைகள் இருக்கின்றன. அவற்றின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொண்டாலே போதும்ஃ ஆரோக்கியமான முறையில் தினம் ஒரு கீரையை வேறுவேறு சுவையுடன் சாப்பிட முடியும்.

MOST READ: இந்த யூக்கா கிழங்கோட மகிமை தெரியுமா? மாரடைப்பை கூட தடுக்குமாம்...

மூக்கிரட்டை கீரை

மூக்கிரட்டை கீரை

மூக்கிரட்டை கீரை யாரும் விதை போட்டு வளர்வதில்லை. தானாக வேலிகளில் சாதாரணமாக தரைகளில் வேர் விட்டு வளர்ந்து கிடக்கும். நிறைய பேர் இது ஆடு, மாடுகள் சாப்பிடும் இலை என்று மட்டும் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அது அப்படியல்ல. இந்த கீரையில் மற்ற எல்லா கீரைகளைக் காட்டிலும் அதிக அளவில் நோய் தீர்க்கும் ஆற்றல் இருக்கிறது. அது பற்றி கீழே பார்க்கலாம்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

மூக்கிரட்டை கீரையில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 100 கிராம் அளவு கீரையில் வெறும் 1.61 சதவீதம் மட்டுமே கொழுப்புச் சத்து இருக்கிறது. அதேசமயம் 162 மில்லி கிராம் அளவுக்கு சோடியம் இருக்கிறது. நம்முடைய ஒரு நாளைக்கு தேவையான புரதத்தில் 2.26 சதவீதத்தை நிறைவு செய்துவிடுகிறது. 44.8 மில்லி கிராம் அளவு வைட்டமின் சி இருக்கிறது. 142 மில்லி கிராம் அளவுக்கு கால்சியமும் 0.012 மில்லிகிராம் இரும்புச்சத்தும் இருக்கிறது.

கல்லீரலை பாதுகாக்க

கல்லீரலை பாதுகாக்க

நம்முடைய உடலில் கல்லீரல் மிகமிக முக்கியமான உறுப்பு. நம்முடைய உடல் நிலை சரியில்லாத சமயங்களில், மன அழுத்தம், நெஞ்சு வலி போன்ற சமயங்களில் கல்லீரலின் பணி மிக முக்கியமானது. அது அந்த சமயங்களில் அதிதீவிரமாக வேலை செய்து நம்முடைய உயிரைக் காப்பாற்றும். இந்த மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது.

சிறுநீர்ப்பாதை தொற்று

சிறுநீர்ப்பாதை தொற்று

சிறுநீர்ப் பாதை தொற்று பெண்களுக்கு மிகச் சாதாரணமாக வந்துவிடக் கூடிய பிரச்சினையாக இருக்கிறது. ஆண்களுக்கும் வரும். ஆனால் அளவில் பெண்களுக்கு அதிகம். இது நிறைய அசௌகரியத்தைக் கொடுக்கும். பிறப்புறுப்புப் பகுதியில் அரிப்பு, எரிச்சல், நுண் தொற்றுக்கள், பாக்டீரியாக்கள் உள்ளே செல்லுதல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாகவே இருக்கும். அந்த சமயங்களில் மூடு இந்த கீரை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.

MOST READ: இந்திய கிரிக்கெட் வீரர்களோட மனைவிகள் திருமணத்துக்கு முன்பு என்ன வேலை செஞ்சாங்கனு தெரியுமா?

உடல்பருமன்

உடல்பருமன்

எடையைக் குறைக்க, கொழுப்பை கரைக்க நாமும் என்னென்னவோ செய்து பார்க்கிறோம். சாப்பிடுகிறோம். ஆனால் ஒன்றும் பயனளிப்பதில்லை. எடை குறைப்பற்கு நாமும் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் என்ன ஆயுர்வுத சித்த மருந்துகளானாலும் அதில் இந்த மூக்கிரட்டையும் நிச்சயம் உட்பொருளாக இருப்பதை உங்களால் பார்க்க முடியும். உடம்பில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கி, உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய பொட்டாசியம், எலக்ட்ரோலைட்ஸ்களை சேமித்து எடையைக் குறைக்க உதவுகிறது.

சிறுநீர்கடுப்பு

சிறுநீர்கடுப்பு

சிறுநீர் கழித்தல் என்பது உடலின் செயல்பாடுகளில் மிக முக்கியமானது. ஏனென்றால் நம் உடலில் அதிகப்படியாக இருக்கிற கழிவுகள், தண்ணீர், கொழுப்பு ஆகியவற்றைக் கரைத்து வெளியேற்றி விடும். ஆனா்ல சிலருக்கு அடிக்கடி சிறுநீர்க்கடுப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்கவே சிரமமாகிவிடும். அதிலும் கோடை காலத்தில் நீர்க்கடுப்பு அதிகமாகவே இருக்கும். அதைத் தடுத்து சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை பயன்படுகிறது.

நீரிழிவு

நீரிழிவு

இன்றைய காலக்கட்டத்தில் 100க்கு 70 சதவீதம் பேருக்கு நீரிழிவு பிரச்சினை இருக்கிறது. இந்த நீரிழிவை முறையாகக் கட்டப்பாட்டுக்குள் வைக்கவில்லை என்றால் அது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆனால் இந்த மூக்கிரட்டை இலையில் இருக்கும் சாறு நம்முடைய ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதோடு நமக்குத் தேவையான பிளாஸ்மா இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்து, நீரிழிவு நோயைத் தடுக்கிறது.

கண்ணுக்கு நல்லது

கண்ணுக்கு நல்லது

பொதுவாகவே கீரைகள் கண் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று நமக்குத் தெரியும். அதிலும் இந்த மூக்கிரட்டை கீரை கண் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளைத் தீர்க்கிறது. குறிப்பாக, இந்த செடியின் வேர்ப்பகுதியை இடித்து, அந்த சாறினை ஜூஸ் போல குடித்து வந்தால், மாலைக்கண் நோய் போன்ற பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

MOST READ: மனிதனுக்கு திடீர்னு மரணம் வருவது எதனால்? அதை எப்படி தவிர்க்கலாம்?

இதயக் கோளாறுகள்

இதயக் கோளாறுகள்

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இருந்து மூக்கிரட்டை வேர் நம்மை காப்பாற்றும். ஏனென்றால் இது இதயத்துக்குச் செல்லும் அழுத்தத்தைத் தவிர்க்கும்.

மூட்டுவலி

மூட்டுவலி

பெரும்பாலும் இப்போதெல்லாம் இளம் வயதிலேயே மூட்டுவலி பாடாகப் படுத்துகிறது. இந்த மூக்கிரட்டை இலையை மை போல அரைத்து மூட்டுப் பகுதிகளில் பற்று போடுங்கள். ஒரே வாரத்தில் உங்களுடைய மூட்டுவலி எப்படி பறந்து போகுதுனு பாருங்க.

வயிற்றுப் பிரச்சினைகள்

வயிற்றுப் பிரச்சினைகள்

வயிற்றுப் பிரச்சினைகள், ஜீரணக் கோளாறு, வயிற்றுப் புழுக்கள் போன்ற அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்து விடும் ஆற்றல் இந்த மூக்கிரட்டை கீரைக்கு உண்டு.

MOST READ: நீங்களே நினைச்சு பார்க்காத அளவு டக்குனு வெயிட் குறையணுமா? அதுவும் ஆரோக்கியமா? இதோ

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

பெரும்பாலான உணவுப் பொருள்களில் பக்க விளைவுகள் இருக்கத் தான் செய்யும். எதுவாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகத்தானே மாறும். அவ்வளவெல்லாம் இந்த கீரைக்கு பயப்பட வேண்டும். இதிலும் சின்ன சின்ன பக்க விளைவுகள் உண்டு.

ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதனால் இதயத் துடிப்பில் சிறிது மாற்றம் ஏற்படலாம்.

எத்தனால் அழற்சி இருக்கிறவர்கள் இந்த கீரையை பயன்படுத்தாதீர்கள். அதேபோல் கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த கீரையைக் கொடுக்காமல் இருப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Health Benefits Of Punarnava

Punarnava has been used in medicine since ancient times and is particularly popular in Ayurvedic medicine. It offers a whole range of health benefits. It is extremely good for the liver and prevents infections from occurring in it. It is a diuretic and can prevent kidney stones from occurring. It is good for patients with arthritis and diabetes. It can treat urinary tract infections, heavy menstruation, fibroids, and clotting in women. It fights obesity and prevents heart failure from occurring.
Desktop Bottom Promotion