For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த இலை தெரியுமா? இதுல டீ போட்டு குடிச்சா நடக்கற அற்புதம் தெரியுமா?

|

ஹவ்தோர்ன் எனும் இதயக்கனி நமக்கு ஏராளமான நன்மைகளை அளிக்க கூடிய தாவரம். இதன் அறிவியல் பெயர் க்ரெடகஸ் மோனோகினா என்று கூறப்படுகிறது. இது ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் வட ஆசியா போன்ற நாடுகளில் வளரக் கூடிய தாவரமாகும். ரோஸ் குடும்பத்தை சார்ந்த இந்த தாவரத்தில் அடர்ந்த சிவப்பு நிற பெர்ரி பழங்கள் காணப்படுகின்றன.

Hawthorn

இதன் இலைகள், பூக்கள், பழங்கள், தண்டுகள் ஏன் பட்டை கூட மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதனால் தான் பல ஆண்டுகளாக இதை மருத்துவ துறையில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சிவப்பு பழங்கள் சீரண பிரச்சனை, இதய பிரச்சினை மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதயக்கனி

இதயக்கனி

சீனர்கள் இந்த பழத்தை தான் நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு 'இதய மூலிகை' என்ற பெயரும் உண்டு. காரணம் இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதய ஆரோக்கியத்தையும், சீரண மண்டலத்தையும் மேம்படுத்துகிறது. இதை மே-ட்ரீ, முள்ஆப்பிள் என்று பல பேர்களில் அழைக்கின்றனர்.

MOST READ: எதும் வேண்டாம்... இந்த சீக்ரெட் பொருள மட்டும் சாப்பிடுங்க... எடை சும்மா விறுவிறுனு குறையும்

ஹெல்த் நன்மைகள்

ஹெல்த் நன்மைகள்

இந்த மூலிகை இரத்த ஓட்டத்தை அதிகரிக்க, இரத்த குழாய் பாதிப்பை சரி செய்ய, இரத்த குழாயை விரிவடைய செய்ய, அனிஸ்சிட்டி, மன அழுத்தம் தூக்கமின்மை பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. இது ஒரு ஆல் ரவுண்டர் மூலிகை என்றே கூறலாம். இந்த மூலிகையை டீ, டிஞ்சர் மற்றும் சிரப் வடிவிலும் பெறலாம்.

இதன் நன்மைகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்

ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

விட்டமின் பி1

விட்டமின் பி2

விட்டமின் சி

கால்சியம்

இரும்புச் சத்து

பாஸ்பரஸ்

ப்ளோனாய்டுகள், ஹைப்ரோசைடு

க்யூர்சிட்டின்

வைட்ரிஷின்

ரூட்டின்

பீனட்டக்கிளைக் ட்ரைட்டர்பீன்ஸ்

அக்கான்டோலிக் அமிலம்

நியோட்கோலிக் அமிலம்

குளோலைன்

அசிட்டைல்குளோலைன்

குளோரோஜெனிக் அமிலம்

காபிக் அமிலம்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

இதன் ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. விட்டமின் சி இரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இது சிறந்து விளங்குகிறது. இதய நோய் தொடர்பான பிரச்சினைகளை குறைத்து ஆற்றலை அதிகரித்தல், மூச்சுப் பிரச்சினையை குறைத்தல், சோர்வை போக்குதல் போன்ற வேலைகளை செய்கிறது. ஆஞ்சினா, நெஞ்சு வலி, இதயத்திற்கு இரத்தம் சரியாக செல்லாமல் இருத்தல் போன்ற பிரச்சினைகளையும் களைகிறது. ஆஞ்சினா சிகச்சைக்கு இந்த மூலிகை சிறந்தது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதிலுள்ள ப்ரொந்தோகானைடிடின்ஸ் என்ற பொருள் இரத்த குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது. இதிலுள்ள ஆர்கானிக் பொருட்களான சபோனின்கள், கேட்ச்சின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதயத்திற்கு ஆபத்தான செல்களின் பெருக்கத்தை அழிக்கிறது.

MOST READ: ரூட்டின் சத்து இந்த உணவுலாம் இருக்காம்... அத சாப்பிட்டா புற்றுநோய், மாரடைப்பு வராதாம்...

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த

இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்தி நார்மலாக்குகிறது. எனவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.

சீரண சக்தியை அதிகரித்தல்

சீரண சக்தியை அதிகரித்தல்

இதன் பழங்கள் மற்றும் சாறு நமக்கு இருக்கும் சீரண பிரச்சனைகளை சரி செய்கிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் மலச்சிக்கல், வயிறு மந்தம், வயிற்று வலியை சரி செய்கிறது. ஏன் வயிற்று அல்சர் கூட குணமாகி விடுமாம்.

கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு

கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு

இந்த மூலிகை கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இதிலுள்ள ப்ளோனாய்டுகள் கெட்ட கொழுப்புகளை குறைத்து இரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதை தடுக்கிறது. 2016 ல் நடத்திய ஆய்வின் படி எச்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து எல்டிஎல், கல்லீரல் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு கொழுப்புகளை குறைக்கிறது.

மெட்டபாலிசம் அதிகரித்தல்

மெட்டபாலிசம் அதிகரித்தல்

நமது உடல் மெட்டா பாலிசத்தை அதிகரித்து தேவையற்ற கலோரிகளை எரிக்கிறது. மெட்டா பாலிச அளவை சமநிலையில் வைக்கிறது.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பு

மெட்டபாலிச அளவை அதிகரித்து தேவையற்ற கலோரிகளை எரிப்பதால் உடல் எடை வெகுவாக குறைந்து விடும்.

குறிப்பு : ஹவ்தோர்னை தினமு‌ம் உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்க்க விரும்பினால் ஒரு முறை மருத்துவரை ஆலோசித்து கொள்வது நல்லது.

புற்றுநோயை தடுத்தல்

புற்றுநோயை தடுத்தல்

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்களின் பெருக்கத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது. உடம்பில் உள்ள நச்சுக்களையும்வெளியேற்றி விடும்.

MOST READ: அட! நம்ம யோகிபாபு ஹேர்ஸ்டைல்... இன்னும் நெட்ல எப்படி வெச்சு செஞ்சிருக்காங்கனு பாருங்க...

இன்ஸோமினியா

இன்ஸோமினியா

தூக்கமின்மை அல்லது இன்ஸோமினியா போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம். இந்த மூலிகையை எடுத்துக் கொண்டு வந்தால் இரவில் எந்தவொரு இடையூறும் இல்லாமல் நிம்மதியான உறக்கத்தை பெற முடியும்.

அனக்ஸிட்டியை தடுத்தல்

அனக்ஸிட்டியை தடுத்தல்

மனநிலை பாதிப்புகளான மன அழுத்தம், டென்ஷன், அனிஸ்சிட்டி போன்றவற்றை சரி செய்து மனநிலையை சீராக வைக்கிறது. ஆற்றலை அதிகரித்து ஹார்மோன் அளவையும் சமநிலையில் வைப்பதால் நல்ல மனநிலையை பெறலாம்.

கண் பார்வை அதிகரிக்கும்

கண் பார்வை அதிகரிக்கும்

ஹவ்தோர்னில் உள்ள விட்டமின் ஏ கண்பார்வையை அதிகரிக்கிறது. கண்புரையை தடுக்கிறது.

இதய ஆரோக்கிய ரெசிபி

இதய ஆரோக்கிய ரெசிபி

தேவையான பொருட்கள்

1 கப் உலர்ந்த ஹவ்தோர்ன் பெர்ரி பழங்கள்

1 ஆப்பிள் நறுக்கியது (விதை நீக்கி)

1 டீ ஸ்பூன் துருவிய இஞ்சி

3 ஏலக்காய் (நசுக்கியது)

1 வெண்ணிலா பீன் (பாதி நறுக்கியது)

1 பட்டை

1 எலும்பிச்சை பழத் தோல்

2 டேபிள் ஸ்பூன் உலர்ந்த செம்பருத்தி பூ

1/3 கப் சர்க்கரை சேர்க்காத மாதுளை ஜூஸ்

1/2 கப் தேன்

2 கப் பிராந்தி

செய்முறை

எல்லா மூலிகை, பழங்கள் மற்றும் மசாலாக்களை ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.

அதனுடன் மாதுளை சாறு, தேன் கலந்து கொள்ளவும். ஜாரில் மீதியளவு பிராந்தி சேருங்கள். 4 வாரங்கள் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக குலுக்கி விடுங்கள்.

இதை வடிகட்டி சூரிய ஒளி படாத இடத்தில் வையுங்கள். தாராளமாக 1 வருடங்களுக்கு இந்த ஜூஸை நீங்கள் குடித்து வரலாம்.

ஹவ்தோர்ன் டீ

ஹவ்தோர்ன் டீ

தேவையான பொருட்கள்

உலர்ந்த ஹவ்தோர்ன் பெர்ரி

500 மில்லி லிட்டர் தண்ணீர்

தேன் (சுவைக்கேற்ப)

பயன்படுத்தும் முறை

அடுப்பில் வைத்து இரண்டு நிமிடங்கள் தண்ணீரை சூடுபடுத்த வேண்டும். கொதிக்கின்ற நீரில் 4-5 பெர்ரி பழங்களை போடுங்கள். தீயை குறைத்து 8-10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இப்பொழுது சாற்றை இறுத்து டீயை குடிக்கலாம்.

அதனுடன் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கொள்ளுங்கள்.

க்க விளைவுகள்

க்க விளைவுகள்

அதிகமாக ஹவ்தோர்னை எடுத்துக் கொள்ளும் போது பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

வயிறு மந்தம்

வியர்த்தல்

சோர்வு

குமட்டல்

தலைவலி

கிளர்ச்சி

தலைசுற்றல்

படபடப்பு

மூச்சு விட சிரமம்

தீவிர அழற்சி

இதயம் சீரற்ற தன்மை

மனநிலை மாற்றம்

மூக்கில் இரத்தம் கசிதல்

இன்ஸோமினியா

MOST READ: 2019 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் இருக்கும் டயட் எது தெரியுமா? இப்படியும் ஒரு டயட்டா?

கவனத்தில் வைக்க வேண்டியவை

கவனத்தில் வைக்க வேண்டியவை

கருவுற்ற பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் இதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

குழந்தைகளுக்கு இந்த மூலிகையை கொடுக்க வேண்டாம்.

டைகோக்ஸின், பீட்டா-பிளாக்கர்ஸ், கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ் (CCB கள்), நைட்ரேட்டுகள், பைனீஃபைர்ரைன் மற்றும் பாஸ்போடைஸ்டெரேஸ் -5 போன்ற மருந்துகள் ஹவ்தோர்ன் உடன் வினைபுரியக் கூடியது. எனவே இந்த மருந்துடன் இதை எடுப்பதை தவிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

11 Lesser Known Health Benefits Of Hawthorn The Heart

Scientifically termed as Crataegus monogyna, hawthorn is a thorny, flowering shrub native to Europe, North America, and northern Asia. Hawthorn berries or haws (the tiny sweet red berries) are the most widely used part of the plant. However, the leaves, flowers, berries, stems, and even the bark, have long been used in herbal medicine since ages.
Story first published: Saturday, May 11, 2019, 16:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more