For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சும்மா குதிரை மாதிரி பலம் வரணுமா? இந்த சூரணத்த தேன் கலந்து சாப்பிடுங்க (செய்முறை உள்ளே)

குதிரை போல உடல் வலிமை பெறுவதற்கான இங்கே ஏழு விதமான மூலிகை கலவை பற்றி குறிப்பிட்டுள்ளோம். படித்துப் பயன்பெறுங்கள்.

|

சும்மா குதிரை மாதிரி இருக்க வேணாமா? என்று ஆண்களைப் பார்த்துக் கேட்பதுண்டு. குதிரை மாதிரி என்று சொல்வது என்னவென்றால், உடல் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பது தான்.

7 herbals for strong body

ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். நரம்பு மண்டலமும் தசைகளும் உறுதியாக இருக்க வேண்டும் என்பது தான் அதனுடைய பொருள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் வலிமை

உடல் வலிமை

உடலில் ரத்தம் சீறிப் பாய வேண்டும். அதற்கு நம்முடைய உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் முறையாக நமக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு நாம் சாப்பிடும் உணவுகள் மட்டுமே போதுமானவை அல்ல. அதனால் நம்முடைய உடலை உறுதிப்படுத்துவதற்கான சில மூலிகைகளை நம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை முறையாக எடுத்துக் கொண்டு, உடலை வலிமைப்படுத்தி குதிரை போல பலம் பெறுங்கள்.

ஏழு மூலிகைகள்

ஏழு மூலிகைகள்

ஏழு வகையான இயற்கைப் பொருள்கள் உள்ளன. அவற்றில் ஆறு மூலிகைகள் மற்றும் அதனுடன் ஏழாவதாக பனங்கற்கண்டு சேர்த்து சூரணமாக தயாரித்து சாப்பிட வேண்டும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

1. நிலப் பனங்கிழங்கு

2. தண்ணீர்விட்டான் கிழங்கு

3. இலவம் பிசின்

4. நெருஞ்சில் விதை

5. நீர்முள்ளி விதை

6. பெரும் பூனைக்காலி விதை

7. பனங்கற்கண்டு

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் கீழே காண்போம். அதையடுத்து சூரணம் செய்யும் முறையையும் பார்க்கலாம்.

MOST READ: நெல்லிக்காய் நல்லதுனு யாரு சொன்னா? அதுல இவ்ளோ பக்க விளைவுகளும் இருக்கு...

1. நிலப் பனங்கிழங்கு

1. நிலப் பனங்கிழங்கு

பனங்கிழங்கு உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். ரத்தத்தைப் பெருக்கி தாது உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். உடலுறுவில் தளர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். உடல் உஷ்ணம், காய்ச்சல் ஆகியவற்றைத் தீர்க்கும்.

2. தண்ணீர்விட்டான் கிழங்கு

2. தண்ணீர்விட்டான் கிழங்கு

தண்ணீர் விட்டான் கிழங்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இது இனிப்பு சுவை கொண்டது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. ஆண்மையைப் பெருக்கும் மூலிகைகளில் இதுவும் ஒன்று.

3. இலவம் பிசின்

3. இலவம் பிசின்

இலவம் பிசின் உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல மூல நோய்க்கும் ஆண்மையைப் பெருக்குவதிலும் மிக முக்கியப் பணியாற்றுகிறது இந்த இலவம் பிசின்.

வெங்காயத்தை சின்ன சின்ன வெட்டிக்கொண்டு அதனுடன் சிறிது பனை வெல்லம் சேர்த்து பாலில் கலந்து குடித்தால் மூலம் தீரும்.

4. நெருஞ்சில் விதை

4. நெருஞ்சில் விதை

நெருஞ்சில் விதை சூரணத்தை மோரில் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் நிற்கும். சிலருக்கு சிறுநீர் கடுப்பு மற்றும் ரத்தம் வடிதல் ஏற்படும். இதற்கு நெருஞ்சிலை இடித்து சாறெடுத்து மோரில் கலந்து குடிக்க வேண்டும். தசைகளை வலுவாக்கி, நரம்பு மண்டலத்தை துடிப்புடன் வைத்திருக்கும்.

5. நீர்முள்ளி விதை

5. நீர்முள்ளி விதை

நீர்முள்ளி விதையை பொடியாகவுா அல்லது மாத்திரைகளாகவோ சாப்பிட்டு வந்தால், ஆண்மை விருத்தி ஏற்படும். விந்து நீர்த்துப் போகாமல் கெட்டிப்படும். உடலுக்குக் குறிர்ச்சியைத் தரும் தாது விருத்தியை அதிகரிக்கும்.

6. பெரும் பூனைக்காலி விதை

6. பெரும் பூனைக்காலி விதை

வெல்வெட் பீன் என்று அழைக்கப்படுகிறது. பூனைக்காலி செடிகள், வேலிகளில், சாலையோரங்களில், சாதாரணமாகக் காணப்படும் ஒரு வகை கொடி. இதனுடைய பூக்கள், வேர்கள் மற்றும் விதைகள் நரம்புகளை வலுவாக்கி, ஆண்மை பாதிப்புகளைச் சரிசெய்கிறது. மலச்சிக்கலையும் போக்கும்.

7. பனங்கற்கண்டு

7. பனங்கற்கண்டு

பனங்கற்கண்டு வைட்டமின் நிறைந்தது என்பதால், நம்முடைய முன்னோர்கள் சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டை தான் பயன்படுத்தினார்கள். சளி, இருமலுக்கு நல்லது. வாய் துர்நாற்றத்தைப் போக்கக் கூடியது. உடல் சோர்வைப் போக்கும் சிறுநீரகக் கல் பிரச்சியையைத் தீர்க்கும்.

MOST READ: வீட்ல ரெடிமேட் மாவு வாங்கி இட்லி, தோசை பண்றீங்களா? இத படிச்சா இனி வாங்கவே மாட்டீங்க

சூரணம் செய்முறை

சூரணம் செய்முறை

பனங்கற்கண்டை தவிர மேற்கண்ட அனைத்து பொருள்களையும் வெள் நிற காட்டன் துணியில் சுற்றி, ஆவியில் வேக வைக்க வேண்டும். ஒரு 20 நிமிடம் கழித்து வெளியில் எடுத்து, மற்றொரு ஈரமில்லாத துணியில் போட்டு, வீட்டுக்குள்ளேயே நிழலிலேயே நன்கு உலர்த்தி, பின் பனங்கற்கண்டையும் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொடியை தேன் அல்லது நெய்யில் ஒரு ஸ்பூன் அளவு குழைத்து காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். குதிரை மாதிரி பலம் பெறுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 herbals for strong body like horse

here we are suggest seven herbal mix for strong body like horse.
Story first published: Tuesday, September 18, 2018, 17:10 [IST]
Desktop Bottom Promotion