மூட்டு வலி குணமாக இந்த எண்ணெய்யை போட்டு மசாஜ் பண்ணுங்க!

Written By:
Subscribe to Boldsky

மூட்டு வலி என்பது ஒரு வயதிற்கு மேல் பலரை பாதிக்கிறது. மூட்டுகளில் வலி உண்டானால் சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வது போன்ற அன்றாட வேலைகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. ஏன் நடப்பதற்கு கூட மிகவும் சிரமப்படுபவர்களை நாம் நமது தினசரி வாழ்க்கையில் கண்டிருப்போம்.

மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்து விடுகிறது... இந்த மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேல் தான் வருகிறது.. எத்தனை பணம் செலவழித்தாலும் பரவாயில்லை இந்த மூட்டு வலி மட்டும் போனால் போதும் என்று தான் இருக்கிறார்கள்...

ஆனால் உண்மையில் இந்த மூட்டுவலிக்கான தீர்வை தேடி நீங்கள் எங்கேயும் அலைய வேண்டிய அவசியம் இல்லை.. உங்களது அருகிலேயே இருக்கும் சில மூலிகைகளே இதற்கு மருந்தாக அமைகின்றன..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.

விளக்கெண்ணை

விளக்கெண்ணை

விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சுப் பழச்சாற்றில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.

மூட்டு வீக்கம்

மூட்டு வீக்கம்

கடுகுரோகிணி, ஆதண்டை வேர், சங்கன் வேர், புங்கன் வேர் ஆகியவற்றை இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். முடக்கொத்தான் சாறு, வெங்காயச் சாறு, சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றுடன் பொடிகளை கலந்து எட்டு மணி நேரம் வெயிலில் காயவைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வீக்கம் குறையும்.

மூக்கிரட்டை வேர்

மூக்கிரட்டை வேர்

மூக்கிரட்டை வேரை கைப்பிடியளவு எடுத்து நன்கு கசக்கி அதனை, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

மூட்டுக்களில் கட்டவும்

மூட்டுக்களில் கட்டவும்

கணப்பூண்டு இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி மூட்டுகளில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.

பூண்டு

பூண்டு

பூண்டின் இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு நன்கு வதக்கி மூட்டில் கட்டி வந்தால் மூட்டுவலி குறையும்.

எருக்கு

எருக்கு

எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி மூட்டு வீக்கங்களீன் மீது வைத்து சிறிது நேரத்திற்கு கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.

இஞ்சி

இஞ்சி

250 கிராம் இஞ்சி சாறில், 150 கிராம் நல்லெண்ணெய் கலந்து வலி, வீக்கம் உள்ள இடத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து வந்தால் மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி குறையும்.

கொய்யா இலை

கொய்யா இலை

கொய்யா இலைகளை நன்றாக விழுது போல அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பூசி வந்தால் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் குறையும்.

ஆமணக்கு வேர்

ஆமணக்கு வேர்

ஆமணக்கு வேரை நன்கு சுத்தம் செய்து 4 லிட்டர் தண்ணீர் விட்டு 1 லிட்டராக வற்றும் வரை நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து நீர் முழுவதும் ஆவியாகி எண்ணெய் மட்டும் இருக்கும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அந்த எண்ணெயை வடிகட்டி மூட்டுகளில் தடவி வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகியவை குறையும்.

உபயோகிக்கும் முறை:

உபயோகிக்கும் முறை:

இந்த எண்ணெயை தினமும் குளிப்பதற்கு முன்னர் மூட்டுகளில் நன்றாக தேய்த்து 15 நிமிடங்களுக்கு பிறகு குளியுங்கள். குளித்த பின்னர் இந்த எண்ணெயை மீண்டும் மூட்டுகளில் தேய்த்து மூட்டுகளை துணியால் நன்றாக கட்டி வைத்து வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் குறையும்

நிலக்குமிழ்

நிலக்குமிழ்

நிலக்குமிழ் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மூட்டுக்களின் மீது ஒத்தடம் கொடுக்க‌ மூட்டுவலி குறையும்.

பால்

பால்

சூடான பாலில் 3 ஏலக்காயை உடைத்துப் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து தினமும் இரவில் குடித்து வந்தால் மூட்டு வலி குறையும்.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா

அஸ்வகந்தா பொடி 5 கிராம் எடுத்து 40 மில்லி பால் சேர்த்து 160 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, நீர் வற்றி பால் மட்டும் தங்கும் போது எடுத்து குடிக்க மூட்டுவ‌லி க‌ட்டுப்ப‌டும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயுடன் 5 மடங்கு விளக்கெண்ணெய் கலந்து சிறிது கற்பூரம் சேர்த்து மூட்டு வலியின் மீது தேய்த்து வர மூட்டு வலி குறையும்.

அத்திப்பால்

அத்திப்பால்

அத்திப்பாலை சேகரித்து வலி காணும் இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

அமுக்கரா இலை

அமுக்கரா இலை

அமுக்கரா இலை, வேர் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து பற்று போட மூட்டு வலி, மூட்டு வீக்கம் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

natural remedies for joint pain

natural remedies for joint pain
Story first published: Saturday, November 25, 2017, 16:09 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter