For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப்ளாக் டீ.. க்ரீன் டீ ரெண்டுல எது பெஸ்ட்? உங்களுக்காக சில சுவையான தகவல்கள்!!

தேநீர் மிகவும் நன்மையளிக்கும் வகையில் பல குணங்களை கொண்டுள்ளது. இதனைப் பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை காண்போம்.

By Ambika Saravanan
|

தேயிலை ஒரு பசுமைத் தாவரம். இதன் பெயர் கமெலியா சினென்சிஸ் (Tea, Camellia sinensis). இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

அசாம், டார்ஜ்லிங் மற்றும் தமிழகத்தின் நீலகிரி ஆகிய ஊர்கள் தேயிலைக்கு சிறப்புப் பெற்றவையாகும். சிறப்பான சுவை கொண்டதால் டார்ஜ்லிங் தேயிலை தனிச்சிறப்பு வாய்ந்தது. உலகத்தில் வேறெங்குமே இந்த வகை தேயிலை பயிரிடப்படுவதில்லை.

Green tea or Black tea-which is the best? Impacts of drinking tea many times

அசாம் தேயிலையின் பளிச்சென்ற நிறத்தால் அது உலகப் புகழ் பெற்றது. இதன் தேநீர் மிகவும் சுவை உடையதாகும். தேநீரை அதிகமாக சுவைக்க விரும்புவோர் நீலகிரி தேயிலையை தேர்வு செய்வர்.

இது சரிவான மலைப்பகுதிகளில் பயிரிடப்படுவதாகும். உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேயிலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேயிலை வகைகள்:

தேயிலை வகைகள்:

தேநீரின் நிறத்தை பொறுத்து தேயிலையின் வகைகள் பிரிக்கப்படுகின்றன. அவை கருப்பு தேயிலை, பச்சை தேயிலை , வெண்மை தேயிலை ஆகியவை. குறைவான கொழுப்பு அளவு மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்டுகள் ஆகியவை தேநீரில் உள்ளதால் இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

பற்களின் ஈறுகளின் வளர்ச்சிக்கு இவை உதவுகின்றன.தேநீர் அருந்துவதால் சரும புற்று நோய் வராமல் தடுக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேயிலையில் ஃப்ளோரைடு அதிகம் இருப்பதால் பற்கள் சொத்தையாகாமல் காக்கிறது.

கருப்பு தேயிலை மற்றும் பச்சை தேயிலை ஆகிய இரண்டுமே பயிரிடப்படுவதில் ஒற்றுமை இருந்தாலும் அதன் அறுவடையில் வித்தியாசப்படுகிறது.

பிளாக் டீ என்பது கருப்பு தேயிலை இரசாயனக் கலவையில் ஆக்சிஜனுடன இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுகிறது..

ஆனால் க்ரீன் டீ யின் பச்சை தேயிலை அவ்வாறு ஆக்ஸிஜனுடன் சேர்க்கப்படுவதில்லை. பிளாக் டீயில் 10% பாலிபீனால்களுள்ளது. க்ரீன் டீயில் 40% பாலிபீனால்கள் உள்ளது.

 கருப்பு தேநீர் (பிளாக் டீ )

கருப்பு தேநீர் (பிளாக் டீ )

பயன்கள்:

கருப்பு தேநீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை சர்க்கரை அல்லது பால் போன்ற எந்தவொரு சேர்க்கையும் இல்லாமல் அருந்துவது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

1. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை பிளாக் டீ அருந்துவதால் தடுக்கப்படுகிறது.

2. வாய் வழி புற்று நோய் வராமல் தடுப்பதில் பிளாக் டீயின் பங்கு அதிகமானது.

3. இதில் காஃபின் குறைந்த அளவு இருப்பதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

இது சுவாச அமைப்பு, சிறுநீரகம் மற்றும் இதய இயக்கத்தை சீராக்குகிறது.

4. பிளாக் டீயில் உள்ள ஒரு பதன பொருள் வைரஸிலிருந்து உடலை காத்து நோய்யெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

5.பிளாக் டீயில் அமினோ ஆசிட் இருப்பதால் நமது கவனம் அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்கிறது.

பிளாக் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது:

பிளாக் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது:

1. ஒரு நாளைக்கு 4 கப்புகளுக்கு அதிகமாக அருந்துவது உடல் பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.

2.அதிகமான பிளாக் டீ எடுத்துக் கொள்வதால் உறக்கம் பாதிப்படைகிறது.

3. அதுவும் வெறும் வயிற்றில் பிளாக் டீ எடுத்துக் கொள்வதால் வயிறு எரிச்சலடைந்து இரைப்பை பிரச்சனைகள் உருவாகும்

 க்ரீன் டீ :

க்ரீன் டீ :

பயன்கள்:

1. இது மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

2. தங்கள் எடையை குறைக்க விரும்புவோர் க்ரீன் டீயை அருந்துவது எளிதான வழி. இது தேவையற்ற கொழுப்பை எரிக்கிறது. உடல் திறனை அதிகரிக்கிறது.

3. க்ரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக இருப்பதால் புற்று நோய் அபாயத்தை இது தடுக்கிறது. குறிப்பாக மார்பக புற்று நோய், பெருங்குடல்புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது.

4. க்ரீன் டீயில் பாலிபீனால்கள் உள்ளன.இவை மூலக்கூறுகள்(molecules) மற்றும் செல்களை முறிவதிலிருந்து பாதுகாக்கிறது. நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது.

5. தோல் சுருக்கங்கள் , வயதான அறிகுறிகள் போன்றவை க்ரீன் டீ அருந்துவதால் குறைகிறது.

க்ரீன் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது:

க்ரீன் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது:

1. க்ரீன் டீயை ஒரு நாளைக்கு 5 கப்புகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகிவை உண்டாகும் வாய்ப்புள்ளது.

2. க்ரீன் டீ நாம் உண்ணும் உணவிலுள்ள இரும்பு சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளதால், அதிகமாக க்ரீன்டீ எடுத்துக் கொண்டால் இரும்பு சத்து குறைபாடு தோன்றும்.

3. க்ரீன் டீயில் காட்சின் (catechin) என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் உடலின் பாதுகாப்பு செல்களை அவை அழிக்கின்றன . உணவை ஆற்றலாக மாற்றுவதை இது தடுக்கிறது. க்ரீன் டீயை அதிகமாக பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல .

நாள் முழுதும் தேநீரை சுவைப்பதை விடுத்து உடல் புத்துணர்ச்சிக்காக மட்டும் இதை அருந்துவதால் எந்த பிரச்னையுமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Green tea or Black tea-which is the best? Impacts of drinking tea many times

Green tea or Black tea-which is the best? Impacts of drinking tea many times
Desktop Bottom Promotion