உடல் எடையை குறைத்து, மலச்சிக்கலை போக்கும் சிறு கிழங்கு !!

Posted By: gnaana
Subscribe to Boldsky

மரவள்ளிக் கிழங்குகள் போல, வேரில் வளரும் தன்மை மிக்க, சிறு கிழங்குகள், இன்று நெல்லைத் தாண்டிய பணப்பயிராக மாறி, தமிழகத்தில் அதிக இடங்களில் பரவலாகப் பயிரிடப் பட்டு வருகிறது.

வறண்ட பாறை போன்று உள்ள கடினமான நிலப்பகுதிகளைத் தவிர்த்து, சமவெளிகளில், அதிக மணற்பாங்கான, தண்ணீர் தேங்காத பகுதிகளில் விளைபவை, சிறு கிழங்குகள். செம்மண் பகுதியிலும் வளரும். பொதுவாக, மணற்பாங்கான இடங்களில் நன்கு வளரும் இயல்புடைய சிறு கிழங்குகள், சேலம், ஈரோடு மற்றும் நெல்லை மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறு கிழங்குகள்:

சிறு கிழங்குகள்:

சிறிய இலைகளுடன், வேரில் கொத்துக் கொத்தாக உள்ள கிழங்குகள், பெரும்பாலும் அதிக மண்ணுடன், சிறிய உருண்டையான வடிவத்தில் காணப்படுகின்றன. தண்டுகள் மூலம் வளர்க்கப்படும் சிறு கிழங்கு செடிகள், நட்டு ஆறு மாதங்களில் கிழங்குகளை உற்பத்தி செய்ய வல்லவை.

புரதம் மற்றும் தாதுக்கள் நிரம்பி இருக்கும் இந்த சிறு கிழங்குகள், மருத்துவ பலன்கள் அதிகம் கொண்ட காரணங்களினால், பெருமளவு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உள் நாட்டில் சிறு கிழங்குகள் அதிக அளவில், கேரளத்தில் பாலக்காடு போன்ற பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும், சமையலுக்குப் பயன்படுத்தப் படுகின்றன.

கேரளத்தில் இந்த கிழங்குகள் கூர்க்கன் கிழங்குகள் என்றும், தமிழக எல்லையோர கேரள நகரமான பாலக்காட்டில், காவத்தன் கிழங்கு என்றும் அழைக்கப் படுகின்றன. பொதுவாக, தமிழ்நாட்டில் சிவக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு என்றும், கண் வலிக் கிழங்கு என்றும் இந்த சிறு கிழங்குகள் அழைக்கப் படுகின்றன.

சிறு கிழங்கின் பயன்கள் :

சிறு கிழங்கின் பயன்கள் :

உருளைக்கிழங்கின் தாவரக் குடும்பமான சோலானேசி வகையைச் சார்ந்த, சிறு கிழங்குகள், உணவில் உருளைக் கிழங்கு போன்று பயன்படுத்தி வர, உருளையைத் தாண்டிய சுவையுடன், அதிக சத்துடன் விளங்கும் என்கிறார்கள். இந்தத் தன்மைகளினால், சிறு கிழங்குகளை, சைனீஸ் பொட்டேடோ என்கிறார்கள்.

உணவில் பொரியல் அல்லது மசியல் போன்ற முறைகளில் சமைத்து வந்தால், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான பீட்டா கரோடின் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் கிடைக்கும். மேலும், கூடுதலாக, அயன் எனும் இரும்புச் சத்தும், சிறு கிழங்கில் அதிகம் உள்ளது.

உடல் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான புரதச் சத்து, சிறு கிழங்கில், உருளைக் கிழங்கைவிட, இரு மடங்கு கூடுதலாக உள்ளது, இதனால், தமிழகத்தின் சில பகுதிகளிலும் கேரளத்திலும், மக்கள் சிறு கிழங்கை, உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்கின்றனர்.

பாலக்காடு பகுதிகளில், திருவாதிரைத் திருநாளில், விரதமிருக்கும் வீடுகளில் வைக்கப்படும் திருவாதிரைக் களியோடு, ஏழுதான் குழம்பு எனும் ஏழுவகை காய்கறிகள் கொண்ட, சிறப்பு குழம்பில், சிவ கிழங்கு எனப்படும், இந்த சிறு கிழங்கு அவசியம் இடம் பெற்றிருக்கும்.

 சிறு கிழங்கின் மருத்துவ நன்மைகள்:

சிறு கிழங்கின் மருத்துவ நன்மைகள்:

சிறு கிழங்கில் உள்ள தாதுக்கள், உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் மிக்கவை. உடலில் தேங்கியுள்ள கொழுப்பைப் குறைக்கும். உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய இயக்கத்தை சரியாக்கும், சிறுநீரகம் மற்றும் வயிற்று பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

 சரும பொலிவிற்கு :

சரும பொலிவிற்கு :

சருமப் பொலிவு மற்றும் முக மருக்கள் போக்கும் கிரீம்கள் மற்றும் முகப்பூச்சுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு கிழங்கில் இருந்து எடுக்கப்படும், போர்ஸ்கோலின் எனும் வேதிப்பொருள், இரத்த அழுத்த கோளாறுகளை சரி செய்து, இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளை விலக்கி, உடல் நலத்தைக் காக்கிறது.

ஆஸ்துமா :

ஆஸ்துமா :

உடலில் வாதம் எனும் வாயு பாதிப்புகளை விலக்கி, இடுப்பு மற்றும் கை கால் மூட்டு வலியை குணமாக்கும்.சுவாச பாதிப்புகளான ஆஸ்துமா மற்றும் புற்று வியாதிகளை குணமாக்கும் வல்லமை மிக்கது என்கிறார்கள்.

கண் பார்வை :

கண் பார்வை :

மேலும், கண் விழித் திரை பாதிப்புகள் போன்ற கண் பார்வைக் குறைபாடுகளைக் களையும் ஆற்றல் மிக்கது, சிறு கிழங்கு என்கின்றனர், மூலிகையாளர்கள்.

சிறு கிழங்கின் மருத்துவ பயன்கள்.

சிறு கிழங்கு, ஆண்டுகளின் இறுதியில் இருந்து பொங்கல் பண்டிகை வரை, மார்கெட்டில் கிடைக்கும். அந்தக் காலங்களில், இந்தக் கிழங்கை, உணவில் சேர்த்து வரலாம், அல்லது, அதிகம் கிடைக்கும் நேரங்களில், அவற்றை நன்கு காய வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, சமையலில் மாவு போலப் பயன்படுத்தி, கட்லெட் மற்றும் வடை போடப் பயன்படுத்தலாம்.

சிறு கிழங்கு, பொதுவாக, அதிக அளவு மண்ணுடன் காணப்படும். கிழங்கை உபயோகிக்க, ஒரு சாக்கு அல்லது துணியில் இந்தக் கிழங்குகளை இட்டு, அம்மி அல்லது கருங்கல்லில் அடிக்க, ஒட்டியுள்ள மண்ணும், கிழங்கின் மேல் தோலும் உதிர்ந்து விடும். பின்னர் நன்கு அலசி, பயன்படுத்தலாம்.

கொழுப்பு குறையும் :

கொழுப்பு குறையும் :

சிறு கிழங்கை, உலர்த்தி, அதை நீரில் இட்டு, நன்கு கொதிக்க வைத்து, பருகி வர, உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்கள் கரைந்து வெளியேறும். உடல் எடை குறைந்து, உடல் பொலிவாகும்.

உடலில் இரத்த ஓட்டம் சீராகி, இதய பாதிப்புகள் விலகும். உடலில் உள்ள வாத கோளாறுகள் சரியாகி, மூட்டு , இடுப்பு வலி நீங்கும்.

சிறு கிழங்கை, சமைத்து உண்பதன் மூலம், அவற்றில் உள்ள ஊட்டச் சத்துக்கள், அனைத்து வயதினருக்கும் நல்ல பலன்களைக் கொடுத்து, உடல் நலனை காக்கக் கூடியது.

மூட்டு வலிக்கு :

மூட்டு வலிக்கு :

சிறு கிழங்கில் உள்ள அஸ்கார்பிக் அமிலச் சத்து, வைட்டமின் C பாதிப்பால், உடலில் ஏற்படும் வியாதி எதிர்ப்பு சக்தி குறைபாடு, எலும்பு வலுவிழத்தல், மூட்டு வலிகள் மற்றும் உடல் சரும தளர்ச்சி போன்ற பாதிப்புகளுக்கு, சிறந்த மருந்தாகிறது.

 ரத்தத்தை சீராக்க :

ரத்தத்தை சீராக்க :

இரத்த ஓட்டத்தை சீராக்கும் நியாசின் எனும் வைட்டமின் சத்து, சிறு கிழங்கில் மிகுந்துள்ளது. இதை வேக வைத்து அல்லது குழம்பில் இட்டு சாப்பிட, மேற்சொன்ன பாதிப்புகள் விலகி, உடலுக்கு ஆற்றலும், வலுவும் கிடைத்து, உடல் நலம் மேம்படும். சமையலில் உருளைக் கிழங்குக்கு மாற்றாக, சிறு கிழங்கில் கூட்டு மற்றும் பொரியல் செய்வது எப்படி, எனப் பார்க்கலாம்.

சத்தான சிறு கிழங்கு கூட்டு :

சத்தான சிறு கிழங்கு கூட்டு :

சிறு கிழங்கின் தோலை உரிப்பதுதான், தாய்மார்களுக்கு பெரும் சுமையாக இருக்கும், அதை மேலே சொன்ன முறையில் சுத்தம் செய்து கொள்ள, வெண்ணிற கிழங்கு கிடைக்கும். அதை நீரில் சற்று நேரம் ஊற வைத்து, வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் இட்டு, சிறிது எண்ணை ஊற்றி கடுகு ஜீரகம் தாளிக்கவும், அதில் சிறு துண்டுகளாக நறுக்கிய சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி இவற்றை இட்டு சற்று நேரம் வதக்கி வர வேண்டும்.

சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, அதன் பின் சிறிது இந்துப்பு இட்டு, பின்னர் வேக வைத்த சிறு கிழங்கை, வாணலியில் இட்டு, சிறிது தண்ணீர் விட்டு, சற்று கலக்கி, மூடி வைக்கவும். நன்கு வெந்ததும், இறக்கி, கறி வேப்பிலை தாளித்து இட, மிகவும் சுவையான, வாசனைமிக்க, சிறு கிழங்கு கூட்டு ரெடி.

வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி :

வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி :

சிறு கிழங்கின் உயரிய தாதுக்களின் வேதித் தன்மைகளால், அவை அதிக அளவில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. அதன் காரணமாக, சமயங்களில் இந்தக் கிழங்குகளின் விலை, உள்ளூர் மார்க்கெட்டில் அதிக அளவில் அதிகரித்தாலும், விலையேற்றப் பயன், விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை.

இதன் இலாபம் தரும் ஏற்றுமதி வணிக வாய்ப்புக்காக, அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் அதிக அளவில் பயிரிடுவதால், அறுவடை நேரத்தில், இவற்றின் விலை குறைந்து, நஷ்டத்தையே சந்திக்கிறார்கள்.

மனிதர்களுக்கு அளவற்ற நற்பயன்களைத் தரும் ,சிறு கிழங்கு, அவற்றைப் பயிரிடும் விவசாயிகளுக்கும் வளம் தர, வாயுத் தொல்லை என்று நம்மில் பலர், உணவில் சேர்க்கத் தயங்கும் உருளைக் கிழங்குக்கு மாற்றாக, சாப்பிட சுவையாக இருக்கும், உடல் நலம் காக்கும், சிறு கிழங்கை, உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு அநேக நன்மைகள் கிடைக்கும்!, விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயருமே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

benefits of siru kizhangu to reduce body fat

Benefits of siru kizhangu to reduce body fat
Story first published: Wednesday, November 29, 2017, 17:00 [IST]