For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகளிரின் நோய்களுக்கான அருமருந்து வில்வம்

By Sutha
|

வறண்ட மலைப்பிரதேசங்களிலும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் வில்வமரம், இந்துக்களில் சைவ சமயத்தவர்கள் புனிதமாக வழிபடுகின்றனர். சிவபூஜையில் வில்வ இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிவன் துதியில் “ ஏக வில்வம் சிவா அர்ப்பணம் " என கூறப்பட்டுள்ளது.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தின் பல முக்கிய வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அமினோ அமிலங்கள், டிக்டஅமைன், மார்மெசின், மார்மின்,அம்பெல்பெரோன், மர்மிலோசின், ஏஜிலைன், ஆந்த்தோகயனின், ஃபிளேவன், குளுக்கோசைட்டுகள், பால்மிடிக் லினேலெயிக் ஒலியிக் அமிலங்களும் உள்ளன.

மனஉளைச்சல் நீக்கும் வில்வம்

இலைகள், பட்டை, வேர் மற்றும் கனிகள் மருத்துவப்பயன் உடையவையாகும். இலைகள் ஆஸ்துமா, காய்ச்சல் மற்றும் சளி போக்கும். பட்டை இதயத்துடிப்பு, விட்டுவிட்டு வரும் காய்ச்சல் மன உளைச்சல் ஆகியவற்றை தீர்க்கும்.

“தசமூல" என்னும் முக்கிய ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் வில்வ வேர் முக்கிய பங்காற்றுகிறது. இது பசியின்மை மற்றும் மகப்பேறுக்கு பின் ஏற்படும் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

அஜீரணம் போக்கும்

கனிகள் முக்கிய உறுப்பு ஆகும். உடல்நலம் தேற்றும். குளிர்ச்சி தரும். வைட்டமின் சி நிறைந்தது. ஊட்டம் தருவது. மலமிளக்கி, தொடர்ந்த மலச்சிக்கல், தொடர்ந்த வயிற்றுப்போக்கு, அஜீரணம், ஆகியவற்றினை தீர்க்கும். வலுவேற்றியாகவும் உதவுகிறது. காய் தசை இறுக்கும் தன்மை கொண்டது. விதைகள் மலமிளக்கி, மலர்கள் வயிற்றுப்போக்குக்கு எதிரானது. வாந்தியை நிறுத்துகின்றன.

English summary

Health Benefits of vilvam | மகளிர் நோய் தீர்க்கும் வில்வம்

Bilva patra, or vilva leaves otherwise known as the Bel leaf is the most sacred offering to Lord Shiva. Its a herb with very high medicinal value. The vilva leaf has found its presence across the various Puranas and has played an important role in various mythologies.
Story first published: Thursday, June 30, 2011, 10:08 [IST]
Desktop Bottom Promotion