For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலை வலுவாக்கும் மூங்கில் நெல்

By Mayura Akilan
|

Bamboo Plants
திருமணத்தின் போது மணமக்களை வாழ்த்துபவர்கள் “ஆல் போல் தத்து அருகது போல வேரோடி, மூங்கில் போல் சுற்றம் முசியாமல்" என வாழ்த்துவர். அந்தளவிற்கு தன் இனத்தோடு பலஆண்டுகள் இணைந்து கணுக்கணுவாய் தோன்றி வளரக் கூடியது மூங்கில்

மூங்கிலானது தொடர்ந்து வேரிலிருந்து கன்று தோன்றி வளர்ந்து வளர்ந்து பல தலைமுறை தாவரங்களும் புதராக ஒன்றாக இருக்கும். இது நூறு அடி உயரம் வளரக்கூடிய பல பருவப் புதர் மரம். இது வெப்பமண்டல ஆசியாவினைச் சார்ந்தது. அதிக பயனுள்ள தாவரமான மூங்கில் மருத்துவ குணம் கொண்டது. இதன் இலைகள்,வேர், கன்றுகள் போன்ற பல பகுதிகள் மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. துவர்ப்பி, உரமாக்கி, காமம் பெருக்கி. கபம், பித்தம், குட்டம், ரத்த தோஷம், விரணம், வீக்கம், வயிறு குளுமை செய்யும்.

எலும்புகளை வலுவாக்கும்

இலைச்சாறு பால் உணர்வு ஊக்குவியாக கருதப்படுகிறது. இளங்கன்றுகள் மயக்கம், பித்தம் போக்கி ஜீரணத்தினைத் தூண்டும். கிருமிகளினால் தாக்கப்பட்டு சீழ்பிடித்த காயங்களுக்கு பற்றாக பூசப்படுகிறது. இதன் சாறு சிலிக்காவினை அதிக அளவில் கொண்டுள்ளது. குருத்து எலும்புகளுக்கு வலுவு தரும். வலுவு இழந்த எலும்புகளை குணப்படுத்தும்.

வயிற்றுப்புழுக்களை கொல்லும்

வேர் தசையிருக்கி, குளிர்ச்சி தரும். மூட்டு வலி மற்றும் பொதுவான பலவீனத்தைத் தசை சரிவு வலியினை தடுக்கும். மாதவிடாயின் போது ஏற்படும் வலி போக்கும். வயிற்றில் உள்ள புழுக்களைப் போக்கி வயிற்றினை வலுப்படுத்தும்.

மூங்கில் நெல்

மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்குமாம். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த நெல்லினை வேக வைத்து உண்பதால் அவர்களின் உடல் வலிமையாக உள்ளது. 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும்.

மருத்துவ உதவிப்பொருட்கள்

மூங்கில்கள் நோய் எதிர்ப்புத் தன்மை கொண் டவை என்பதால், அதன் மூலம் மருத்துவ மற்றும் முதல் உதவிப் பொருட்களை தயாரிக்கலாம் என, இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூங்கில் நார்களைக் கொண்டு தயாரிக்கப்படும், "நாப்கின்'கள், சந்தையில் விற்கப்படும் மற்ற வகை, "நாப்கின்'களை விட மலிவானதாக இருக்கும். மூங்கில் நார்கள், அதன் கூழ்களில் இருந்து பெறப் படுகின்றன. மரத்தாது போன்ற தன்மை கொண்ட இவை, தண்ணீரை உறிஞ் சும் தன்மை கொண்டவை என்பதோடு மென்மையானது, நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் தன்மை கொண்டது.அதனால், இதன் மூலம் மருத்துவப் பொருட்கள் தயாரிக்கலாம்.

வணிகரீதியாக பயன்படும் மூங்கில்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் பன்னெடுங் காலமாக பயிரிடப்படுகிறது. இந்தியக் காடுகளின் பரப்பளவில் மூங்கில் 12.8 சதவீதம் காகித ஆலைகள், ரேயான் தொழிற்சாலைகளிலும் மூலப்பொருளாக, பெருமளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

வலுவாகவும், நீண்டகாலம் கெடாமலும் இருப்பதால், வீடு கட்டவும், கால்நடைத் தீவனங்கள் தயாரிக்கவும், விவசாயத் தொழில்களுக்கும், மேஜை, நாற்காலிகள், கலைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. உலகச் சந்தையில் மூங்கில் பொருள்களின் மதிப்பு ஆண்டுக்கு 10 மில்லியன் டாலராக உள்ளது. 2015-ம் ஆண்டில் 20 மில்லியன் டாலராக உயரும் என்கிறார்கள். இந்தியாவில் மூங்கில் உற்பத்திப் பொருள்களின் மதிப்பு ரூ.6,505 கோடி. மூங்கில் தேவை பெருமளவுக்கு அதிகரித்து வருகிறது. எனவே மூங்கிலை, தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்ய தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்து வருவது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது.

English summary

Health benefits of bamboo | உடலை வலுவாக்கும் மூங்கில் நெல்

Different parts of bamboo plants have long been used to treat variety of diseases because of its various curative properties. Bamboo can help in cleaning and healing of wounds by promoting blood circulation. This may help in treating ulcers.
Story first published: Saturday, August 27, 2011, 16:59 [IST]
Desktop Bottom Promotion