இதயத்தில் ஏற்படும் பல்மனரி வால்வு அடைப்பு பற்றி தெரியுமா? இது ஏற்பட்டால் என்னவாகும்?

முந்தைய காலத்தில் இருந்ததை விட தற்போது மாரடைப்பு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இளைஞர்கள் கூட தற்போது மாரடைப்பால் இறக்கும் நிலை இருந்து வருகிறது.

இன்றைய வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்று யோசித்து பாருங்கள். யாராவது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் கொண்டு இருக்கோமா? கண்டிப்பாக இல்லை நம்முடைய பிஸியான வாழ்க்கை முறையால் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை பின்பற்றி வருகிறோம். இதன் விளைவு ஏராளமான நோய்கள் நம்மை தாக்குகிறது. முந்தைய காலத்தில் இருந்ததை விட தற்போது மாரடைப்பு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இளைஞர்கள் கூட தற்போது மாரடைப்பால் இறக்கும் நிலை இருந்து வருகிறது.

All You Need To Know About A Heart Condition Termed As Pulmonary Stenosis

இதயத்தில் ஏராளமான பாதிப்புகள் இருந்தாலும் நம்மளை அதிகமாக தாக்கும் நோய் பல்மனரி வால்வு அடைப்பு. இதை பல்மனரி ஸ்டெனோசிஸ் என்று கூறுகின்றனர். மும்பையின் ஆசிய ஹார்ட் இன்ஸ்டிடியூட், குழந்தை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சாரங் கெய்க்வாட் கூறுகையில், "பல்மனரி ஸ்டெனோசிஸ் என்பது பல்மனரி இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் தடைபடுவதாகும்.

இந்த பல்மனரி இரத்த குழாய் தான் தூய்மையற்ற இரத்தத்தை ஆக்ஸிஜனேற்றம் செய்வதற்காக இதயத்தின் வலது வெண்ட்ரிக்கிளில் இருந்து நுரையீரலுக்கு எடுத்துச் செல்கிறது. பிறகு இரத்தம் நுரையீரலில் ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டு இதயத்தின் இடது அறைவழியாக உடம்பு முழுவதும் பாய்ச்சப்படுகிறது. இதுவே இதயத்தின் இரத்தம் ஓட்டம் தடைபட்டால் என்னவாகும். உடம்பு முழுவதும் ஆக்ஸிஜனேற்றம் அடையாத நச்சு கலந்த இரத்தமாக மாறி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம்

மன அழுத்தம்

அதிகப்படியான மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு இதயத்திற்கு ஆபத்தானது என்பதை பெரும்பாலான ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. மன அழுத்தம் என்பது இதய நோய்களுக்கு ஒரு காரணியாக அமைகிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர். அதே மாதிரி வயிற்றில் வளரும் குழந்தையும் பல்மனரி வால்வு அடைப்பை பெற்று நீல நிறமாக மாறுகிறது.

பல்மனரி வால்வு அடைப்பு

பல்மனரி வால்வு அடைப்பு

இதயத்தில் வலது வெண்ட்ரிக்கிள் மற்றும் நுரையீரலுக்கும் இடையேயான பல்மனரி வால்வில் அடைப்பு ஏற்படலாம். சில சமயங்களில் அதன் கிளை இரத்த குழாய்களில் கூட அடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்படி இதய குழாய்களில் ஏற்படும் அடைப்பை உடனே கண்டறிய வேண்டும். இல்லையென்றால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே அடிக்கடி இதயத்தை பரிசோதனை செய்து வருவது நல்லது. இதயத்தில் வேறுவிதமான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

ஆரம்ப கால சிகிச்சைகள்:

ஆரம்ப கால சிகிச்சைகள்:

பல்மனரி அடைப்பு லேசாக இருக்கும் போதே நீங்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டால் பாதிப்புகள் பெரிதாக இருக்காது. அடைப்பை கண்டறிய 2D எக்கோ ஸ்கேனிங் முறைகள் பயன்படுகின்றன. இதன் மூலம் தொடர்ச்சியாக மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருவார்கள். ஒருவேளை உங்கள் பல்மனரி அடைப்பு மிகவும் தீவிரமாக இருந்தால் கத்தீட்டர் மூலம் அறுவை சிகிச்சை மேள்கொள்ளப்படும். இந்த ஸ்டெனோசிஸின் ஆரம்ப அறிகுறியாக உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்.

இதர அறிகுறிகள்:

இதர அறிகுறிகள்:

* ஒழுங்கற்ற இதயத்துடிப்பு

* இதயத்தின் ஒலியில் அசெளகரியம் தென்படும். இதை நீங்கள் மருத்துவர் உபயோகிக்கும் ஸ்டெதஸ்கோப் மூலம் அறிந்து கொள்ளலாம்.

* தீவிர சோர்வை உணர்வீர்கள்

* சுவாசிப்பதில் சிரமம் உண்டாகும், குறிப்பாக எந்தவொரு வேலையும் செய்த பிறகு இந்த மூச்சு வாங்கும் பிரச்சனையை சந்திப்பீர்கள்.

* மார்பில் வலி உண்டாகும்

* சில நேரங்களில் மயக்கம் கூட நேரலாம்

* நாள்பட்ட தீவிர அடைப்பு இதயம் செயலிழப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை கூட உண்டாக்கலாம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்மனரி ஸ்டெனோஸிஸ்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்மனரி ஸ்டெனோஸிஸ்

கர்ப்ப காலத்தில் பெண்களின் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் பல்மனரி வால்வு அடைப்பை சந்திக்கின்றனர். இது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கிறது என்கிறார் மருத்துவர் கெய்க்வாட் அவர்கள். இதயத்தில் அடைப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வழக்கமான உடற்பயிற்சி போன்றவை உங்களுக்கு இதய நோய் பிரச்சனை வராமல் தடுக்க உதவும். 25-30 வயதிற்குள் இதய நோய் பரிசோதனைகளை எல்லாரும் செய்யுங்கள். இது இதய நோய்களை முன் கூட்டியே அறிந்து உயிரை காக்க உதவும் என்கிறார் அவர் .

இதயம் தொடர்பான பிற சிக்கல்கள்:

இதயம் தொடர்பான பிற சிக்கல்கள்:

* இதய வால்வு நோய்த்தொற்று இருப்பவர்களுக்கு இதயத்தின் உட்புறத்திலும் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்.

* இதயத்தின் வெண்ட்ரிக்கிள் பகுதி சரியாக பம்ப் செய்ய முடியாத பட்சத்தில் இதய செயலிழப்பு அல்லது மாரடைப்பு உண்டாகிறது. இது கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கத்தை உண்டாக்கும்.

* அரித்மியா பிரச்சினை இருப்பவர்களுக்கு இதயத் துடிப்பு ஒழுங்கற்ற முறையில் துடிக்கும்.

இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க உதவும் உணவுகள்:

இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க உதவும் உணவுகள்:

* முதலில் அதிக கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை தவிருங்கள்.

* ஆப்பிள், சியா விதைகள், மஞ்சள், சல்மான் மீன், பீட்ரூட், ப்ளூபெர்ரி, மாதுளை, வாழைப்பழம், பாதாம் பருப்பு, கீரைகள், பயிறு வகைகள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

* கெட்ட கொலஸ்ட்ரால் உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், எண்ணெய் பலகாரங்கள் வேண்டாம்.

* தினந்தோறும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

* உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion