For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவருக்கு மாரடைப்பு இளமையிலேயே வருவதற்கு இதெல்லாம் தான் காரணம் தெரியுமா?

பல மூளை நோய்களைப் போலவே, பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இதுக்குறித்த போதுமான விழிப்புணர்வு மக்களிடையே இல்லை.

|

எப்போது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் இடையூறு உண்டாகிறதோ, அப்போது பக்கவாதம் ஏற்படுகிறது. இது நிகழ்ந்தவுடன், மூளையில் உள்ள செல்கள் இறக்க ஆரம்பிக்கின்றன. பக்கவாதம் ஒரு முடியாத மற்றும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நிலை. மேலும் மில்லியன் கணக்கான இந்தியர்கள் இதை உணராமல் பெரும் ஆபத்தில் உள்ளனர்.

Lifestyle Habits That Are Increasing Your Risk of a Heart Attack

பல மூளை நோய்களைப் போலவே, பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இதுக்குறித்த போதுமான விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. பல முறை இரத்தக்குழாய்களில் உள்ள பிளேக்குகளால் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் போது, ஒருகட்டத்தில் இதயத்திற்கு செல்லும் இரத்தம் முற்றிலும் தடுக்கப்படும். இந்நிலையில் தான் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படலாம்.

ஒருவரது இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கு பல்வேறு பழக்கங்கள் காரணங்களாக இருக்கின்றன. அவற்றில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடைய மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கும் மோசமான வாழ்க்கை முறை போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்போது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் வாழ்க்கை முறை காரணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக உப்புள்ள உணவுகளை உண்பது

அதிக உப்புள்ள உணவுகளை உண்பது

சோடியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்பவர்களுக்கு, பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக உப்புள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வது உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கும். இப்படி உணவில் அதிக உப்பு சேர்த்து சாப்பிடும் பழக்கம் தான், உலகளவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பக்கவாதம் அல்லது மாரடைப்பு வழக்குகளுக்கு காரணமாகும். ஒரு நாளைக்கு 2,000 மில்லிகிராம் அல்லது அதற்கும் குறைவான உப்பை எடுத்து கொள்பவர்களுடன் ஒப்பிடும் போது, தினமும் 4,000 மில்லிகிராம் உப்பு எடுப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

சுறுசுறுப்பாக இல்லாமல் இருப்பது

சுறுசுறுப்பாக இல்லாமல் இருப்பது

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக உடற்பயிற்சி செய்து கொண்டு இருப்பது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, இதயத்தை வலிமையாகவும் வைத்துக் கொள்ளும். எனவே தினமும் ஒருவர் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் தற்போதைய கொரோனா தொற்றுநோய் காரணமாக வெளியே செல்வதற்கான வாய்ப்புக்கள் குறைந்து, அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை இருப்பதால், பலருக்கும் உடலில் சோம்பேறித்தனம் அதிகரித்துவிட்டது. இதன் விளைவாக ஏராளமானோருக்கு மாரடைப்பும் வந்துள்ளது. உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாது என்று நினைத்தால், தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய முயலுங்கள்.

புகைப்பழக்கம்

புகைப்பழக்கம்

புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு இதய நோய்க்கான அபாயம் அதிகம் உள்ளது. ஏனெனில் சிகரெட்டில் உள்ள புகையிலை தமனிகளில் அடைப்பு உண்டாக்கி, மூளைக்கு மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தைத் தடுக்கும். ஆய்வு ஒன்றில் கூட சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் இரத்த அழுத்தத்தைக் அதிகரிப்பது, இரத்தத்தை கடினமாக்குவது மற்றும் தமனிகளில் ப்ளேக்குகளை அதிகம் உருவாக்குவது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு முறை ஒருவர் சிகரெட் பிடிக்கும் போதும், அவரது உடலில் 5,000 கெமிக்கல்கள் செல்கின்றன. அதில் ஒரு கெமிக்கல் தான் கார்பன் மோனாக்சைடு. இது இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஆக்சிஜன் அளவைக் குறைத்து, இதயத்தில் சேதத்தை ஏற்படுத்தும். சமீப காலமாக பக்கவாதம் அல்லது மாரடைப்பால் ஏற்படும் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றின் ஒரு பங்கு புகைப்பழக்கத்தான் தான்.

ஆல்கஹால் அருந்துவது

ஆல்கஹால் அருந்துவது

மது அருந்துவது, அதிகப்படியான குடிப்பழக்கம் போன்றவை ஒருவருக்கு பக்கவாதம் அல்லது மாரடைப்பின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும். உண்மையில் 1725 ஆம் ஆண்டு முதல் ஆல்கஹால் பக்கவாதம் ஏற்படும் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு நாரளக்கு இரண்டு முறைக்கு மேல் மது அருந்துவது உயர் இரத்த அழுத்த பிரச்சனையை உண்டாக்கும். மேலும் ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு மது பானங்களை அருந்துவது மாரடைப்பின் அபாயத்தை 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும். மேலும் ஒரு நாளைக்கு நான்குக்கும் மேற்பட்ட பானங்கள் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 35 சதவீதம் வரை அதிகரிக்கும்.

அளவுக்கு அதிகமான மன அழுத்தம்

அளவுக்கு அதிகமான மன அழுத்தம்

மன அழுத்தம் மாரடைப்பு/பக்கவாதத்தை ஏற்படுத்துமா என்று நீங்கள் கேட்கலாம். ஆம், மன அழுத்தம் ஒருவருக்கு அதிகமானால், அது மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்தும். ஒருவருக்கு மன அழுத்தம் பல காரணங்களால் ஏற்படலாம். ஆனால் எதுவாயினும், மன அழுத்தத்துடன் ஒருவர் நீண்ட காலமாக இருந்தால், அது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கும். மேலும் தற்போதைய வாழ்க்கை முறையானது மன அழுத்தம் நிறைந்ததாகவே இருக்கிறது. எனவே இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோகா, தியானம் மற்றும் குடும்பத்தினருடன் சந்தோஷமாக பேசி விளையாடுவது போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் தினமும் ஈடுபடுங்கள். குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களுடன் விளையாடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lifestyle Habits That Are Increasing Your Risk of a Heart Attack

Here we listed some lifestyle habits that are increasing your risk of a heart attack. Read on..
Story first published: Monday, July 19, 2021, 13:08 [IST]
Desktop Bottom Promotion