For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளம் வயதினரை அதிகமாக தாக்கும் இதய நோய்… உஷார்….

பொதுவாக மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பெரிய பிரச்னை. ஆனால், ஒரு 20 ஆண்டு காலமாக மாரடைப்பு என்பது இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்பட்டு வருவதை பார்க்க முடிகிறது.

|

பொதுவாக மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பெரிய பிரச்னை. ஆனால், ஒரு 20 ஆண்டு காலமாக மாரடைப்பு என்பது இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. இது குறித்த ஒரு ஆய்வின் மூலமாக, டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

Heart Disease And Young Adults: Know The Possible Triggers And Prevention Tips

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இதயத்தை சுற்றிள்ள இரத்த குழாய்கள் மற்றும நரம்புகள் பாதிக்கப்படக்கூடும். இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளவிருப்பது என்னவென்றால், இளம் வயதினருக்கு இதய நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களும், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகளும் தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளம் வயதினருக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்:

இளம் வயதினருக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்:

கட்டுப்படுத்தப்படாத உயர் இரத்த அழுத்தம்

சத்தமில்லாமல் ஆளை கொல்லும் உயர் இரத்த அழுத்தம் என்று கூறுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சரியாக உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், கொழுப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுதல், அதிகமான உடல் எடை, அதிகப்படியான மனஅழுத்தம், புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் போன்ற முக்கிய காரணங்களாலேயே பெரும்பாலான இளம் வயதினருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்னைக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ள தவறினால், அவை பக்கவாதம், மாரடைப்பு, இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, கண் கோளாறு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்துவிடும்.

அதிகப்படியான கொழுப்பு

அதிகப்படியான கொழுப்பு

கொழுப்பு சத்து என்பது மனித உடலுக்கு தேவையான அத்தியாவசியமான உயிரியல் மூலக்கூறு மற்றும் இன்றியமையாத ஒன்று. தமனிகள் உட்பட உடலின் சில இரத்த நாளங்களில் கொழுப்புகள் தக்க வைக்கப்படும். இந்த பகுதிகளில் அதிகமான கொழுப்பு தேங்கும் போது, இரத்தமானது குறிப்பிட்ட பகுதிக்கு சீராக செல்வது தடைப்பட்டு, ஆன்ஜினா அல்லது மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

ஒருவர் எவ்வளவு அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்கிறாரோ அவருக்கு இதய நோய்களுக்கான ஆபத்தும் அதிகரிக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல் என்பது புகைப்பிடிப்பவரை மட்டுமல்லாது அருகில் இருப்பவர்கள், குறிப்பாக குழந்தைகளையே அதிகமாக பாதிக்கிறது. நல்ல ஆரோக்கியமான மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைத்து நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்தால், புகைப்பிடிக்கும் பழக்கத்தில் கவனம் செலுத்தி அதனை நிறுத்துவதற்கான வழியை முதலில் கண்டறிய வேண்டும்.

குடும்ப வரலாறு

குடும்ப வரலாறு

உலக இருதய கூட்டமைப்பு கூறுவதன் அடிப்படையில், குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் இருந்தால் அவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று தெரிய வருகிறது. உதாரணத்திற்கு, குடும்பத்தில் இரத்த சொந்தங்கள் யாருக்காவது, 55 வயதிற்கு முன்பே மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், அந்த நபருக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளதாம்.

உடல் பருமன்

உடல் பருமன்

இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அதிகமாக வாய்ப்பு ஏற்படுத்துவது அதிகமான உடல் எடை தான். உலக இருதய கூட்டமைப்பின் அடிப்படையில், அதிகமான உடல் எடை கொண்ட ஒரு நபருக்கு உயர் இரத்த அழுத்தம், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதர கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.

மாசடைந்த காற்று

மாசடைந்த காற்று

ஒரு விரிவான ஆய்வறிக்கையில், மாசடைந்த சூழல் ஒரு மனிதனின் இரத்த அழுத்தத்தையே மாற்றும் என்று கூறப்படுகிறது. பக்கவாதம், இதய செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் அரித்மியா போன்ற பல்வேறு பிரச்னைகளை அதிகரிக்க செய்ய மூலக்காரணமாக அமைவது காற்று மாசுபாடு என்பது தெரிகிறது. காற்று மாசுபாட்டின் வெளிபாடு, மாரடைப்பை இரட்டிப்பாக்கி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதய நோய் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள்:

இதய நோய் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிமுறைகள்:

வழி #1

உங்கள் குடும்ப வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். உடன்பிறந்தோர், பெற்றோர், முன்னோர்கள் யாருக்கேனும் இதய நோய் இருந்ததா, அவர்களுக்கு எத்தனை வயதில் அந்த பிரச்னை ஏற்பட்டது உள்ளிட்டவை குறித்து தெரிந்து வைத்து கொள்வது சிறந்தது.

வழி #2

வழி #2

உங்கள் லிப்பிட் சுயவிவரம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை தொடர்ந்து சரிபார்க்கவும். வருடத்திற்கு ஒரு முறையாவது முழுமையான உடல் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

வழி #3

வழி #3

ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்களுக்காவது மிதமான-தீவிரம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சி அவசியம்.

வழி #4

வழி #4

புகைபிடிக்காதீர்கள் மற்றும் இரண்டாவது கை புகைப்பதைத் தவிர்க்கவும். புகைபிடிப்பதை விட்டுவிட உதவும் மருந்து அல்லது சிகிச்சையைப் பற்றி உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேளுங்கள்.

வழி #5

வழி #5

நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள், மிதமான புரதங்கள் மற்றும் வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் குறைவான கொழுப்புள்ள உணவுகள், தோல் இல்லாமல் மீன் மற்றும் கோழி போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள். துரித தொகுக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு, காற்றேற்றப்பட்ட பானங்கள், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்திடவும்.

வழி #6

வழி #6

குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். அலுவலக வேலைகளை வீட்டில் பார்ப்பதை தவிர்க்கலாம். நேரம் கிடைக்கும் போது விடுமுறைகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வாருங்கள். வாழ்க்கை துணை மற்றும் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். உளவியல் நிபுணரை அணுகி பேசுவது சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Heart Disease And Young Adults: Know The Possible Triggers And Prevention Tips

Several reasons increase the risk of heart diseases in young adults. Know the possible reasons below.
Desktop Bottom Promotion