Just In
- 5 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- 15 hrs ago
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- 16 hrs ago
உங்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டும் உங்க உதட்டை எவ்வாறு பராமரிக்கணும் தெரியுமா?
- 16 hrs ago
தேசிய மருத்துவர் தினத்தன்று மருத்துவர்களை கௌரவிக்க இந்த மெசேஜ்களை அவர்களிடம் கூறுங்கள்...!
Don't Miss
- News
யார் நிஜ "இந்துத்துவா"? பதவி விலகலுக்கு முன் "யோகி" வழியில் உத்தவ் தாக்கரே போட்ட உத்தரவு
- Sports
இப்படி ஒரு சோதனையா.. டிராவிட் எதிரே உள்ள 3 பெரும் பிரச்சினைகள்.. இங்கி, அணியை சமாளிப்பது கடினம்தான்!
- Technology
பில்ட்-அப்பை பூர்த்தி செய்யுமா Nothing Phone 1: CEO சொன்ன முக்கிய விஷயம்!
- Movies
அஜித் சார், எங்களுக்கும் ஒரு கார்டு கிடைக்குமா?... ஆசையாக கேட்கும் ரசிகர்கள்
- Automobiles
20 வருசம் ஆனாலும் "மாஸ்" குறையல, இவ்வளவு விஷயங்களை யாருமே எதிர்பார்க்கல, Mahindra Scorpio - N எப்படி இருக்கு?
- Finance
பிரெஞ்ச் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது... வேற லெவலில் இந்திய ட்ரோன் ஸ்டார்ட் அப் நிறுவனம்!
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இதயத்துலயும் புற்றுநோய் வருமா? வந்தா இந்த அறிகுறிலாம் வெளில தெரியும்...
இதய புற்றுநோய் என்பது இதயத்தில் உருவாகும் ஒரு கட்டியால் வகைப்படுத்தப்படும் புற்றுநோயின் மிக அரிதான வடிவமாகும், இது இதய முதன்மை கட்டி என அழைக்கப்படுகிறது. இத்தகைய கட்டிகள் 75% தீங்கற்றவை (புற்றுநோயற்றவை) அதே நேரத்தில் வீரியம் மிக்க (புற்றுநோய்) வடிவம் 2000 இல் சுமார் 1 நபருக்கு ஏற்படுகிறது. இதயத்தில் காணப்படும் மிகவும் பொதுவான வகை இந்தப் புற்றுநோயானது அருகிலுள்ள உறுப்புகளான நுரையீரல் மற்றும் மார்பகங்களிலிருந்து புற்றுநோய் செல்கள் பரவுவது அல்லது மெட்டாஸ்டாஸிஸ் காரணமாக உருவாகிறது.
அருகிலுள்ள உறுப்புகளிலிருந்து வரும் புற்றுநோய் செல்கள் உடைந்து, இரத்த ஓட்டத்தின் மூலம் இதயத்திற்குச் செல்லும்போது, இதய புற்றுநோய் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதயத்தின் இத்தகைய மெட்டாஸ்டாஸ் செய்யப்பட்ட கட்டிகள் இரண்டாம் நிலை கட்டிகள் என அழைக்கப்படுகின்றன மற்றும் அவை பெரும்பாலும் வீரியம் மிக்கவை (புற்றுநோய்).

இதய புற்றுநோய் வகைகள்
மேலே விவாதிக்கப்பட்டபடி, இதய புற்றுநோய் பெரும்பாலும் இதயத்தில் உருவாகும் கட்டி என்று குறிப்பிடப்படுகிறது. அவை மொத்தம் 4 வகைகள்:
1.தீங்கற்றவை: அவை புற்றுநோயற்ற மற்றும் தீங்கு விளைவிக்காத இருதய கட்டிகள், அவை மற்ற உடல் பாகங்களுக்கு மாற்றங்களை விளைவிக்காத வகையைச் சேர்ந்தவை. தீங்கற்ற கட்டிகள் 3 வகைகளாகும், அவை பின்வருமாறு,
மைக்ஸோமாக்கள்: இத்தகைய கட்டிகள் இதயத்தின் சுவரில் இணைக்கப்பட்டு காணப்படுகின்றன. இவை இரத்தக் கட்டிகள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு மற்றும் எடை இழப்பு.
பாப்பில்லரி ஃபைப்ரோலாஸ்டோசிஸ்: இத்தகைய கட்டிகள் (மிட்ரல் வால்வு அல்லது பெருநாடி வால்வு) ஒரு இதய வால்வுகளில் ஏற்படுகின்றன. எம்போலைசேஷன் காரணமாக அவை அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.
லிபோமாக்கள்: அவை பொதுவாக கொழுப்பு செல்கள் இவை இதய தசையின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. அவை எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. ஆனால் இதயத் தடுப்பை ஏற்படுத்தக்கூடும்.
2. மலிஞன்ட் ( Malignant): இவை இதயக் கட்டிகளின் புற்றுநோய் வடிவமாகும், ஆனால் அவை மிகவும் அரிதானவை மற்றும் இதயக் கட்டிகளில் 20% அல்லது அதற்கும் குறைவான இடத்தையே பிடிக்கின்றன. இவை 2 வகைகளாகும்
லிம்போமாக்கள்: மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் விளைவாக இவை உருவாகும் என்று நம்பப்படுகிறது.
சர்கோமாஸ்: இத்தகைய கட்டிகள் அதிக புற்றுநோய் வாய்ப்புள்ளவை. இவை உடல் முழுவதும் வேகமாக பரவுகின்றன. அவை பொதுவாக கண்டறியப்படுவதற்கு முன்னரே மற்ற உடல் பாகங்களுக்கு மாற்றங்களை விளைவிக்கின்றன.
3. ஓரளவு வீரியம் மிக்க கட்டிகள்: இத்தகைய கட்டிகள் வீரியம் மிக்கவை அல்லது தீங்கற்றவை. அவை பின்வருமாறு 2 வகைகளாகும்:
மெசோதெலியோமாஸ்: இதயத்தின் இத்தகைய கட்டிகள் வீரியம் மிக்கவை மற்றும் மீசோதெலியத்தில்(இதயம், நுரையீரல் மற்றும் வயிற்று குழி ஆகியவற்றைப் பாதுகாக்கும் இது ஒரு சவ்வு) காணப்படுகின்றன.
பராகாங்லியோமாஸ்: இவை நியூரோஎண்டோகிரைன்(ஹார்மோன்களை உருவாக்கும் நரம்பு செல்கள்) திசுவில் உருவாகும் புற்றுநோய் அல்லது புற்றுநோயற்ற கட்டிகள்.
4. மெட்டாஸ்டேடிக்: இத்தகைய கட்டிகள் பொதுவாக மற்ற உடல் பாகங்களில் எழும் மற்றும் புற்றுநோய் செல்கள் உடைந்து இதயத்திற்கு பரவுகின்றன, அவை இரத்த ஓட்டத்தின் வழியாக இதயத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன, அங்கு அவை டெபாசிட் செய்யப்பட்டு ஒரு கட்டியை ஏற்படுத்துகின்றன.
MOST READ: இந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து - முஸ்லீம் ஓரினச்சேர்க்கை தம்பதி...

இதய புற்றுநோய்க்கான காரணங்கள்
உடலின் எந்தப் பகுதியிலும் உள்ள செல்கள் வளர்ந்து கவனிக்கப்படாமல் பிரிக்கும்போது கட்டிகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில், டி.என்.ஏவில் பல பிறழ்வுகள் காரணமாக, புற்றுநோய் எழுகிறது. டி.என்.ஏவில் பிறழ்வானது செல் பிரிவு மற்றும் நகலெடுக்கும் செயல்பாட்டின் போது நடைபெறுகிறது. இந்த புற்றுநோய் செல்கள் பிளவுபடும்போது அவற்றின் பிறழ்வை மகள் உயிரணுக்களுக்கு அனுப்புகின்றன, இந்த வழியில், புற்றுநோய் பரவுகிறது.
இதுவே இதயப் புற்றுநோய் நிலையில் பார்த்தால், இதய செல்கள் நகலெடுக்காது (காயம் இல்லாவிட்டால்) மற்றும் அவை இரத்தத்தை செலுத்துவதற்கு மட்டுமே பொறுப்பு என்பதை நாங்கள் அறிவோம். எனவே, இந்த உறுப்பில் ஒரு கட்டியின் வளர்ச்சிக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. பிறகு எப்படி நடக்கும் இது நடக்கிறது?
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இதயம் இணைப்பு திசுக்களால் ஆனது, எனவே அதில் புற்றுநோய் உருவாகுவது மிகவும் அரிதான நிகழ்வு. இதில் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகள் அதிக அளவில் இருப்பதால், இதயத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இரத்தத்தை செலுத்த உதவுகிறது எனவே இது உறுப்பு இரத்த நாளங்களின் நோய்களுக்கு மட்டுமே ஆளாகிறது.
எனவே, சுற்றுச்சூழல் மாசுபாடு, புகைத்தல் மற்றும் டி.என்.ஏ பிறழ்வு போன்ற சில நிரூபிக்கப்படாத காரணிகள் இதயத்தில் முதன்மை தீங்கற்ற கட்டியை உருவாக்க காரணமாகின்றன. ஆனால் இன்னும், இந்த நிலை மிகவும் அரிதானது மற்றும் சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதய புற்றுநோயின் அறிகுறிகள்:
இதய புற்றுநோயின் அறிகுறிகள் கட்டியின் இடம், வகை மற்றும் அளவைப் பொறுத்தது. முதன்மை இதய புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு,
* கட்டி மேல் இதய அறையில் இருக்கும்போது மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு.
* கட்டி ஒரு வென்ட்ரிக்கிளில் இருக்கும்போது மார்பு வலி, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஆகியவை இதயத்திலிருந்து இரத்த விநியோகத்தைத் தடுக்கின்றன.
* இதயத்தின் தசைச் சுவரில் கட்டி இருக்கும்போது மூச்சுத் திணறல், சோர்வு மற்றும் வீங்கிய கால்கள்.
* இதயத்தின் தசைக்குள் கட்டி இருக்கும்போது விடுபட்ட இதயத் துடிப்பு, மயக்கம் மற்றும் இதயத் தடுப்பு ஆகியவை.
* கட்டி இதயத்திலிருந்து உடைந்து நுரையீரலின் சிறிய தமனியில் சிக்கிக் கொள்ளும்போது ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் கூர்மையான மார்பு வலி.
* கட்டி இதயத்திலிருந்து உடைந்து மூளையின் சிறிய தமனியில் சிக்கிக் கொள்ளும்போது பக்கவாதம், குழப்பம் மற்றும் பேசுவதிலும் எழுதுவதிலும் சிக்கல்.
* கட்டி இதயத்திலிருந்து உடைந்து கால்கள் அல்லது கைகளின் சிறிய தமனியில் சிக்கிக்கொள்ளும்போது துடிப்பு இல்லாத மூட்டு மற்றும் குளிர்.
*முதன்மை இதயக் கட்டி தொற்று போன்ற குறிப்பிடப்படாத அறிகுறிகளை ஏற்படுத்தும் போது நைட்ஸ்வீட்ஸ், மூட்டு வலி மற்றும் காய்ச்சல்.

ஆபத்து காரணிகள்
இதய புற்றுநோய்க்கான உண்மையான காரணம் தெரியவில்லை என்றாலும், அதற்கு நாம் ஆளாகக்கூடிய சில காரணிகள் பின்வருமாறு:
*வயது
*புகைபிடித்தல்
*கரோனரி நோய்
*உயர் இரத்த அழுத்தம்
*உடல்பருமன்
*மோசமான நோயெதிர்ப்பு மண்டலம்
*மரபணு புற்றுநோய் நோய்க்குறி
*முன் இதய செயலிழப்பு
MOST READ: சுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா? இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...

இதய புற்றுநோயின் சிக்கல்கள்:
இதய புற்றுநோயின் சிக்கல்கள் ஆபத்தானவை மற்றும் உயிருக்கு ஆபத்தானவை. அவை பின்வருமாறு
*மற்ற உடல் பாகங்களுக்கு புற்றுநோய் பரவுதல். அல்லது மெட்டாஸ்டாசிஸ்
*இதய செயலிழப்பு
*டுயூமர் எம்போலி
*ஒழுங்கற்ற இதய தாளம்

இதய புற்றுநோயைக் கண்டறிதல்
இதய புற்றுநோய் அறிகுறிகள் மற்ற இதய நோய்களுக்கு பொதுவானவை, அதனால்தான் நோயறிதல் மிகவும் கடினம். ஆகையால், முதன்மை இதயக் கட்டியின் துல்லியமான நோயறிதலுக்கு பின்வரும் சோதனைகள் உகந்ததாக கருதப்படுகின்றன.
* இதய வடிகுழாய்ப்படுத்தல் (Cardiac catheterization): கட்டியின் வகை அடையாளம் காணப்படும் ஒரு சோதனை.
* எலக்ட்ரோ கார்டியோகிராம்: அசாதாரண இதய தாளங்களைக் கண்டறியும் சோதனை.
* எக்கோ கார்டியோகிராம்: இதயத்தின் இயக்கத்தையும் அதன் வால்வுகளையும் கண்டறிய அல்ட்ராசவுண்ட் அலைகளால் நடத்தப்படும் ஒரு சோதனை.
* டோமோகிராபி: இதயத்தில் உள்ள அசாதாரணங்களைக் கண்டறியும் ஒரு சோதனை.
* கரோனரி ஆஞ்சியோகிராபி: எக்ஸ்-கதிர்களைப் போலவே இதயத்தில் உள்ள கட்டியின் வெளிப்புறத்தைக் காட்டும் ஒரு சோதனை.
இரத்த பரிசோதனைகள், மார்பு எக்ஸ்ரே மற்றும் இதயத்தின் எம்ஆர்ஐ ஆகியவை மற்ற முறைகளில் அடங்கும்.

இதய புற்றுநோய் சிகிச்சை:
இதய புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
அறுவைசிகிச்சை: அறுவை சிகிச்சையின் மூலம் அறுவைசிகிச்சை மருத்துவர் புற்றுக்கட்டியை முற்றிலும் அகற்றுவதே இதய புற்றுநோயின் முக்கிய சிகிச்சையாகும். அதனால் இதயத்தின் சரியான செயல்பாட்டை பராமரிக்கலாம். இது பொதுவாக மென்மையான திசு சர்கோமாவுக்கு (soft tissue sarcoma) மேற்கொள்ளப்படுகிறது.
கீமோதெரபி: இந்த அடிப்படை சிகிச்சை முறையில், சைட்டோடாக்ஸிக் மருந்துகள் இதயத்தின் புற்றுநோய் செல்களை அழிக்கவும் அறிகுறிகளைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.அறுவைசிகிச்சைக்குப் பிறகு முழுமையான கட்டி மறைந்துவிடாதபோது இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது.
நோய்த்தடுப்பு சிகிச்சை: கடுமையான பிரச்சினைகளுடன் வாழும் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு கவனிப்பு இது. இதய நிலை தீவிரமடையும் போது, நோயாளியின் அறிகுறிகளை மேம்படுத்துவதற்கு இந்த நோய்த்தடுப்பு சிகிச்சை முக்கியமானது.
கதிரியக்க சிகிச்சை: இந்த சிகிச்சை முறையில், புற்றுநோய்களின் உயிரணுக்களைக் கொல்லவும், கட்டியின் வளர்ச்சியைக் குறைக்கவும் எக்ஸ்-கதிர்களின் உயர் ஆற்றல் கற்றை பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறை குறைந்தபட்ச பக்க விளைவுகளை உள்ளடக்கியது.
வருடாந்திர எக்கோ கார்டியோகிராம்: இந்த முறையில், இதயத்தின் சரியான செயல்பாட்டை சரிபார்க்க இதய வால்வுகள் மற்றும் அறைகளைக் காண எக்கோ டெஸ்ட் அல்லது அல்ட்ராசவுண்ட் போன்ற உயர் அதிர்வெண் ஒலி அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டி இருக்கும்போது இந்த முறை பயன்படுத்தப்படுகிறது, ஆனால் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது.
MOST READ: சொந்த வீடு வேணும் கடன் வாங்க கூடாது... - செவ்வாய்கிழமையில் இதை பண்ணுங்க

இதய புற்றுநோய் தடுப்பு முறைகள்
* புகைப்பதை நிறுத்துங்கள்
* மது அருந்துவதைக் கட்டுப்படுத்துங்கள்
* சூரியன் ஒளி அல்லது அதன் கதிர்வீச்சுக்கு அதிகமாக வெளிப்படுவதைத் தவிர்க்கவும்.
* புற்றுநோய் நோய்அறிதல் சோதனையை சரியான நேரத்தில் திட்டமிடுங்கள்.