Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
திடீரென்று இதயம் வேகமாக துடிக்கிறதா? அது எதனால் தெரியுமா?
டாக்கி கார்டியா என்பது வேகமான அல்லது அசாதாரண இதய துடிப்பு. பெரும்பாலும் நிமிடத்திற்கு 100 முறைக்கு மேல் மற்றும் அதிகமாக நிமிடத்திற்கு 400 முறைக்கு மேல் இதயம் துடிக்கும்.
உடலில் இதயம் மிகவும் முக்கியமான உறுப்பு. ஒருவரது இதயம் ஆரோக்கியமாகவும், சீராகவும் செயல்பட்டால் தான், உடலின் இதர உறுப்புக்கள் தங்கு தடையின்றி செயல்படும். இதயத்தில் ஏதேனும் சிறு பிரச்சனை இருப்பினும், மற்ற உறுப்புக்களுக்கு போதுமான இரத்தம் கிடைக்கப் பெறாமல் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

இன்று இதய பிரச்சனையால் ஏராளமானோர் கஷ்டப்படுகின்றனர். ஒருவரது இதயத்தில் பிரச்சனை இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். மேலும் இதயத்தில் பல வகையான பிரச்சனைகள் வரக்கூடும். பொதுவாக ஆரோக்கியமான இதய செயல்பாட்டை அதன் துடிப்பின் மூலம் அறிவோம். அப்படிப்பட்ட இதயத்துடிப்பு சிலசமயங்களில் மிகவும் வேகமாக இருக்கும். அதில் ஒருவர் பதற்றப்பட்டாலோ அல்லது டென்சன் ஆனாலோ இதயம் வேகமாக துடிக்கும்.
இன்னும் சில சமயங்களில் இதயம் இயற்கைக்கு மீறி மிக வேகமாக துடிக்கும். அதாவது ஒரு நிமிடத்தில் 400 முறைக்கும் அதிகமாக இதயம் துடிக்கும். இப்படி துடிக்கும் நிலையை டாக்கி கார்டியா என்று அழைப்பர். டாக்கி கார்டியா மேல் இதய அறையில் அல்லது கீழ் இதய அறையில் ஏற்படலாம்.
இப்போது டாக்கி கார்டியா அல்லது துரித இதய துடிப்பு பிரச்சனையின் அறிகுறிகள், வகைகள், காரணங்கள் மற்றும் அபாய காரணிகளைக் காண்போம்.

டாக்கி கார்டியா
டாக்கி கார்டியா என்பது வேகமான அல்லது அசாதாரண இதய துடிப்பு. பெரும்பாலும் நிமிடத்திற்கு 100 முறைக்கு மேல் மற்றும் அதிகமாக நிமிடத்திற்கு 400 முறைக்கு மேல் இதயம் துடிக்கும். இப்படி இதயத் துடிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வால், இதயத்தால் உடலுக்கு சரியாக ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை அனுப்ப முடியாமல் போகும். இதில் பல வகைகள் உள்ளன.

வகைகள்
* சுப்ரா வெண்ட்ரிகுலர் டாக்கி கார்டியா - இதயத்தின் கீழ் அறைகளுக்கு மேல் அதிகரிக்கும் இதய துடிப்பு
* வெண்ட்ரிகுலர் டாக்கி கார்டியா - வென்ட்ரிகுலர் டாக்கி கார்டியா என்பது விரைவான இதயத் துடிப்பு ஆகும். இது இதயத்தின் கீழ் அறைகளில் அசாதாரண மின் சமிக்ஞைகளுடன் உருவாகிறது.
* ஆட்ரியல் ஃபைப்ரிலேஷன் - இதயத்தின் மேல் அறைகளில் வேகமான துடிப்பு
* ஆட்ரியல் ஃப்ளட்டர் - ஆட்ரியா அல்லது இதய ஊற்றறை அதிவேகத்தில் மிக சீராக துடிப்பது
* வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் - இதயத்தின் கீழ் அறையில் விரைவான மற்றும் ஒழுங்கற்ற முறையில் ஏற்படும் துடிப்பு

யாருக்கு இப்பிரச்சனை வரக்கூடும்?
* இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுள் ஒன்றான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்.
* பெருந்தமனி தடிப்பு, இதய வால்வு நோய், இதய செயலிழப்பு, இதய தசை நோய், கட்டிகள் அல்லது நோய்த்தொற்றுகள் காரணமாக இதய தசைக்கு மோசமான இரத்த வழங்கல் இருப்பவர்கள்.
* இதர மருத்துவ நிலைகளான தைராய்டு நோய், குறிப்பிட்ட நுரையீரல் நோய்கள், எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு மற்றும் மது அல்லது போதைப் பழக்கம் உள்ளவர்கள்.
* மன அழுத்தம் அல்லது அளவுக்கு அதிகமாக மது அருந்துவது அல்லது காப்ஃபைன் பானங்களை அருந்துபவர்கள்.

அறிகுறிகள்
டாக்கி கார்டியா பிரச்சனை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளாவன:
* மூச்சு விடுவதில் சிரமம்
* தலைச்சுற்றல்
* திடீர் பலவீனம்
* மார்பு பகுதியில் படபடப்பு
* லேசான தலைவலி
* மயக்கம்

அபாய காரணிகள்
குறிப்பிட்ட சில ஆரோக்கிய பிரச்சனைகள் டாக்கி கார்டியாவை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். அவையாவன:
* கரோனரி இதய நோய் அல்லது பெருந்தமனி தடிப்பு
* இதய செயலிழப்பு
* மாரடைப்பு
* பிறவியிலேயே இதய குறைபாடுகள்
* இதய தசையில் அழற்சி அல்லது இதய நிலையில் சீரழிவு
* நாள்பட்ட நுரையீரல் நோய்



Click it and Unblock the Notifications