For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவால் ஆண்களை அதிகம் பாதிக்கும் ஹார்ட் அட்டாக் - இன்னும் என்னென்ன பாதிப்பு வரும்?

நாவல் கொரோனா வைரஸ் நுரையீரலை தாக்கி உயிரை குடிக்கும் என்று பலரும் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நோய் தாக்கினால் ஹார்ட் அட்டாக்கும் புற்று நோயும் கூட வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர்.

|

உலகமே அச்சத்தோடு உச்சரிக்கும் ஒரு பெயர் இருக்கிறது என்றால் அது கொரோனா வைரஸ். கோவிட் 19 என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த வைரசின் பெயர் கேட்பதற்கு அழகாக இருந்தாலும் ஆபத்தானதாக இருக்கிறது. மனிதர்களுக்குள் நுழைந்து மூச்சில் கலந்து நுரையீரலை பாதித்து இறுதியில் உயிரை உறிஞ்சுகிறது. இந்த கொரோனா தாக்கினால் இப்போது நுரையீரல் பாதிப்பு மட்டும் ஏற்படுவதில்லை இதய முடக்கமும், நீரிழிவு பாதிப்பும், புற்றுநோய் அறிகுறிகளும் தென்படுகிறது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இந்த நோய்களில் ஆண்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப்படுவது ஏன் என்று பார்க்கலாம்.

Coronavirus And Heart Disease Symptoms And Risk For Men

கொரோனாவினால் உலக அளவில் 15 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் படு வேகமாக பரவி வருகிறது.

MOST READ: எச்சரிக்கை! இருமல், தும்மலால் மட்டும் கொரோனா வைரஸ் பரவாதாம்... இப்படியும் பரவுமாம்..

கொரோனா அதிகம் பாதித்த சீனா, இத்தாலி,ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் மட்டுமே இந்த நோயில் உயிரிழப்பது ஏன் என்று மருத்துவர்கள் சில காரணங்களை கூறியுள்ளனர். சீனாவிலும் ஐரோப்பாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி 70 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களின் போதை பழக்கம் அலட்சியம் காரணமாக இருந்தாலும் பெண்களை விட ஆண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதுதான் உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குரோமோசோம் எண்ணிக்கை

குரோமோசோம் எண்ணிக்கை

ஆண்களின் குரோமோசோம்களில் எக்ஸ் ஒய் (XY) என இரண்டு வகை குரோமோசோம்கள் உள்ளன. பெண்களுக்கு எக்ஸ் எக்ஸ் ( XX) என ஒரே வகையான குரோமோசோம்கள் உள்ளன. ஆண்களை விட பெண்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் பலம் அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். இதனால்தான் பெண்களை விட ஆண்களை அதிக நோய்கள் தாக்குகின்றன. பெண்களை விட ஆண்களுக்கு மன அழுத்தம் அதிகம். இதனாலேயே கோபம் வருகிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

அழுவது நல்லது

அழுவது நல்லது

ஆண்கள் அதிக டென்சனாக இருப்பதோடு ஏதாவது பிரச்சினை என்றால் அழுவதை கூட தவிர்த்து விடுகின்றனர். பிரச்சினை என்றால் அழுது தீர்த்து விடுவது நல்லது என்கின்றனர் மன நல மருத்துவாகள். இப்போது தனித்திருக்கும் பலரும் நோய் பயத்துடனேயே இருக்கின்றனர். இதனால் மன தைரியம் பாதிக்கப்படுகிறது. கோவிலுக்கு போக முடியாவிட்டாலும் தியானம், யோகா என வீட்டிலேயே உற்சாகமாக பொழுதை போக்கலாம் மன அழுத்தம் குறைவதோடு ரத்த அழுத்தமும் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஹார்ட் அட்டாக்

ஹார்ட் அட்டாக்

குரோமோசோம் மட்டுமல்லாது பெண்களுக்கு இயற்கையான பாதுகாப்பாக உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் உள்ளன. கொரோனோ வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்கள் பலருக்கும் நுரையீரல் பாதிப்பு மட்டும் இல்லாது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர். ரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய் உள்ளவர்கள்தான் கொரோனோ வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இயற்கை பாதுகாப்பு

இயற்கை பாதுகாப்பு

பெண்களை விட ஆண்களுக்கே அதிக அளவில் ஹார்ட் அட்டாக் வருகிறது. இதற்கு காரணம் பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன்தானாம். இது ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேருவதை தடுக்கிறதாம். அதேபோல பெண்கள் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கின்றனர். அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு எனவே பெண்கள் கொரோனா வைரஸை பார்த்து கோ கொரோனா என்று தைரியமாக சொல்லலாம்.

சத்தான உணவுகள்

சத்தான உணவுகள்

நுரையீரல் பாதுகாப்புக்கு துளசி கசாயம் சாப்பிடலாம் சுவாச பிரச்சினைகள் வராது. அதே போல இஞ்சி பூண்டு அதிகம் சேர்த்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்துக்களை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடலாம். இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியில் நாம் சிறிது நேரம் நிற்கலாம். ஊரடங்கு அமலில் உள்ள இந்த கால கட்டத்தில் அமைதியாக வீட்டிற்குள் இருந்தாலே போதும் நோய்கள் தாக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus And Heart Disease Symptoms And Risk For Men

Novel coronavirus, or COVID-19, experience mild symptoms, you’re at risk of developing serious complications. People also a higher risk of death for patients with underlying health conditions like heart disease, diabetes, or cancer.
Story first published: Tuesday, April 7, 2020, 11:10 [IST]
Desktop Bottom Promotion