Latest Updates
-
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னன்னு சொல்றோம்! -
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க.. -
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது..
திடீர் மாரடைப்பால் காலமான நடிகர் மயில்சாமி: மாரடைப்புக்கு முன் என்னென்ன அறிகுறிகள் தெரியும்?
தமிழ் சினிமாவின் முக்கிய நகைசுவை நடிகர்களுள் ஒருவர் தான் மயில்சாமி. இவர் தமிழில் சுமார் 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 57 வயதான இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார்.
Actor Mayilsamy Dies Of Heart Attack: தமிழ் சினிமாவின் முக்கிய நகைசுவை நடிகர்களுள் ஒருவர் தான் மயில்சாமி. இவர் தமிழில் சுமார் 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 57 வயதான இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார். மயில்சாமி தீவிர சிவன் பக்தர். இவர் மகாசிவராத்திரி அன்று தனது குடும்பத்தினருடன் கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோயிலில் டிரம்ஸ் மணியுடன் சேர்ந்து ஓய்வின்றி கச்சேரியில் பாடல்களை பாடியுள்ளார். இதையடுத்து அதிகாலையில் கச்சேரி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சிவனடியை சேர்ந்தார். மயில்சாமிக்கு ஏற்கனவே இரண்டு முறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மாரடைப்பால் ஏராளமானோர் இறந்து வருகிறார்கள். மாரடைப்பு ஒருவருக்கு வருவதற்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும் தான் முக்கிய காரணம். மேலும் ஏற்கனவே இதய பிரச்சனையை கொண்டவர்களுக்கு ஓய்வு என்பது மிகவும் முக்கியமானது. அதுவும் இரவு நேரத்தில் போதுமான தூக்கத்தைப் பெற வேண்டியது மிகவும் இன்றியமையாதது. போதுமான தூக்கத்தை பெற முடியாமல் போகும் போது, இரத்த அழுத்தம் அதிகரித்து, அதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம் உள்ளன.
மாரடைப்பு ஒருவருக்கு வரப்போகிறது என்றால், அது ஒருசில அறிகுறிகளை முன்னரே வெளிக்காட்டும். இப்போது அப்படிப்பட்ட சில அறிகுறிகளைக் காண்போம். இந்த அறிகுறிகள் தெரிந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகினால், மரணத்தைத் தவிர்க்கலாம்.

அசௌகரியமான அழுத்தம்
மாரடைப்பின் முதன் அறிகுறி நெஞ்சு பகுதியில், குறிப்பாக மார்பின் மையத்தில் அசௌகரியமான அழுத்தம், பிடிப்பு அல்லது கடுமையான வலி ஏற்படும். முக்கியமாக இந்த அசௌகரியமானது சில நிமிடங்கள் தொடர்ந்து நீடித்திருக்கும்.

உடலின் மற்ற பகுதிகளில் வலி
மாரடைப்பின் வலியானது நெஞ்சு பகுதியை தவிர, முதுகு, தோள்பட்டை, கைகள், கழுத்து அல்லது தாடை போன்ற இடங்களிலும் தெரியும். ஒருவரது இதயத்தில் பிரச்சனை இருக்கும் போது, அது இதயத்தில் உள்ள நரம்புகளைத் தூண்டி, இதயத்தில் தவறு ஏதோ உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் வலியை உண்டாக்கும். இந்த வேகஸ் நரம்புகள் இதயத்துடன் மட்டுமின்றி, மூளை, நெஞ்சு, அடிவயிறு, கழுத்து போன்ற பகுதிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளதால் தான், இதயத்தில் பிரச்சனை இருந்தால், உடலின் பிற பகுதிகளிலும் வலியை உணர நேரிடுகிறது.

தலைச்சுற்றல்
தலைச்சுற்றல் ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அதில் போதுமான அளவு நீர் குடிக்காமல் இருப்பது, உணவுகளைத் தவிர்ப்பது அல்லது வேகமாக எழுந்து நிற்பது போன்ற அடங்கும். ஆனால் அந்த தலைச்சுற்றலுடன், லேசான நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறலை ஒருவர் சந்தித்தால், அது மாரடைப்பு வரப்போகிறது என்பதன் அறிகுறி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உடல் களைப்பு
ஒருவர் இரவு நேரத்தில் போதுமான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால் அல்லது நாள் முழுவதும் அதிக மன அழுத்தத்தை உணர்ந்தால், அவர்கள் மிகுந்த உடல் களைப்பை உணர்வார்கள். இப்படி வழக்கத்தை விட அதிகளவு உடல் களைப்பை உணர்ந்தால், அது மாரடைப்பு வரப் போவதற்கான ஓர் முக்கிய அறிகுறி. மயில்சாமி அவர்களுக்கு திடீர் மாரடைப்பு வருவதற்கு, மகாசிவராத்திரி அன்று அவர் இரவு தூக்கத்தை மேற்கொள்ளாமல், விழிந்திருந்தது காரணமாக இருக்கலாம்.

குமட்டல் அல்லது அஜீரண கோளாறு
எப்போது இதயம் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லையோ, அப்போது வாந்தி, ஏப்பம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிறைய பேர் இம்மாதிரியான பிரச்சனைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால் நெஞ்சு வலி, உடல் சோர்வுடன் குமட்டல் அல்லது அஜீரண கோளாறை சந்தித்தால், அது மாரடைப்பு வரப்போவதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

அதிகப்படியான வியர்வை
அதிகமாக வேலை செய்து வியர்வை வெளியேறுவது என்பது சாதாரணம். ஆனால் காரணமின்றி அல்லது எவ்வித உடழைப்புமின்றி ஒருவருக்கு அதிகமாக வியர்த்தால், அது மாரடைப்பைக் குறிக்கும். எனவே வழக்கத்தை விட அதிகமாக வியர்த்தால், அதை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள்.

மூச்சுத்திணறல் மற்றும் படபடப்பு
பொதுவாக மாடிப்படி ஏறினால், மூச்சு வாங்கும். ஆனால் சமீப காலமாக உங்களுக்கு மாடிப்படி ஏறும் போது கடுமையான மூச்சுத்திணறலுடன் ஒருவித படபடப்பை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது இதயத்தில் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது என்பதற்கான முக்கியமான அறிகுறியாகும்.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் திடீரென்று அனுபவித்தால், அதை அசால்ட்டாக எடுக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் இவை அனைத்துமே மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகளாகும்.



Click it and Unblock the Notifications