Latest Updates
-
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க.. -
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது.. -
குருபகவான் அஸ்தமன நிலையில் இருப்பதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
இந்த 3 சின்னங்களில் ஒன்று உங்கள் கையில் இருந்தாலும் நீங்க மிகப்பெரிய துரதிர்ஷ்டசாலியாம் - ஜாக்கிரதை -
ருசியான வெஜ் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா?
Saturn Retrograde In Pisces 2026: ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நவகிரகங்களிலேயே சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியர். இதனால் சனி பகவானின் நிலையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். சனி பகவான் வக்ரமாகும் போது அதன் தாக்கம் சற்று தீவிரமாக இருக்கும். அதுவும் ஏழரை சனி நடப்பவர்களுக்கு இக்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். தற்போது சனி பகவானின் நிலையால் மேஷம், மீனம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடக்கிறது.
அதுவும் இந்த இந்த 3 ராசிக்காரர்களும் ஏழரை சனியின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளனர். இதனால் சனி வக்ரமாவதால் 3 ராசிக்காரர்களும் வெவ்வேறு விதமான விளைவுகளை அனுபவிப்பார்கள். இப்போது சனி வக்ரமாவதால் ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் நடக்கிறது. இந்நிலையில் சனி வக்ரமாவதால், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். மனநிலையும் மோசமாக பாதிக்கப்படும். எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் குழப்பமடையக்கூடும். அவசரப்பட்டு எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். செய்யும் வேலைகளில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
கவனமாக இருக்க வேண்டியவை: சனி வக்ர காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் எதையும் சரியாக ஆராயாமல் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய முதலீடுகளையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கிறது. இதனால் சனி வக்ரமாவதால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை சற்று ஏற்றஇறக்கத்துடன் இருக்கும். இருப்பினும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடைய வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனைகளை செய்யும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கவனமாக இருக்க வேண்டியவை: கடன் கொடுப்பதையோ, வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். எதையும் சரியாகவும் ஒழுக்கமாகவும் செய்ய வேண்டும். முக்கியமாக ஆரோக்கிய விஷயத்தை புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் நடக்கிறது. இந்நிலையில் சனி வக்ரமாவதால் பணியிடத்தில் பொறுப்புக்களும், மன அழுத்தமும் அதிகரிக்கும். முன்பு எளிதில் முடிக்கப்பட்ட வேலைகள் தற்போது முடிக்க கடினமாக இருக்கலாம் அல்லது தாமதமாகலாம். பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைத்தூக்க வாய்ப்புள்ளது.
கவனமாக இருக்க வேண்டியவை: பணியிடத்திலோ அல்லது அலுவலகத்திலோ பணிகளை பாதியாக செய்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த வேலையையும் முழுமையாக செய்து முடிக்க வேண்டும். பேச்சையும், கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


